For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவல் நிலையங்கள் ஹெவி, மீடியம், லைட் என மூன்றாக பிரிப்பு

Google Oneindia Tamil News

Police Station
நெல்லை: தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்கள் ஹெவி, மீடியம், லைட் என மூன்றாக தரம் பிரிக்கப்படவுள்ளதாக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாநகர் மற்றும் புறநகர் காவல்துறையின் உயரதிகாரிகளுடன் சட்டம் ஓழுங்கு குறித்து ஏடிஜிபி ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினார். இதில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அபய்கு்மார் சிங், டிஐஜி சண்முகராஜேஸ்வரன், எஸ்பி ஆஸ்ரா கர்க், துணை கமிஷனர் அவினாஷ் குமார், உதவி கமிஷனர்கள், டிஎஸ்பிகள், இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழக காவல் நிலையங்கள் ஹெவி, மீடியம், லைட் என மூன்றாக தரம் பிரிக்கப்படும். மாநகராட்சியில் பகுதியில் உள்ள முக்கிய காவல் நிலையங்கள் ஹெவியாகவும், நகராட்சி பகுதியில் உள்ள காவல் நிலையங்கள் மீடியமாகவும், கிராமங்களில் உள்ளவை லைட் என்றும் தரம் பிரிக்கப்படும்.

தமிழகத்தில் 9 ஆயிரம் காவலர்கள் இந்தாண்டு நியமிக்கப்படுவார்கள். ஏற்கனவே 3800 பேர் பயிற்சி முடிந்து பணியில் சேர்ந்துள்ளனர். மணல் கொள்ளையை தடுப்பது தான் காவலர்களின் முக்கிய நோக்கம் என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X