29 ஆண்டுகள் கழித்து தமிழ் எழுத்தாளருக்கு தேசிய விருது: எழுத்தாளர்கள் பெருமிதம்

Posted by:
 
Share this on your social network:
   Facebook Twitter Google+    Comments Mail

29 ஆண்டுகள் கழித்து தமிழ் எழுத்தாளருக்கு தேசிய விருது
கோவை: கோவையைச் சேர்ந்த எழுத்தாளர் ஜீவானந்தன் எழுதிய நூலுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. சுமார் 29 ஆண்டுகள் கழித்து தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

தேசிய விருது

மத்திய அரசின் சிறந்த இயக்குனர், நடிகர், நடிகையருக்கான விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. திரைப்பட விருதுகளோடு ஒவ்வொரு ஆண்டும் சினிமா பற்றிய சிறந்த நூலுக்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டிற்கான விருது கோவையைச் சேர்ந்த எழுத்தாளர் ஜீவானந்தனுக்கு கிடைத்துள்ளது.

ஓவியர் ஜீவானந்தன்

கோவையின் பிரபல ஓவியர் ஜீவானந்தன். இவர் புகழ்பெற்ற சினிமா விமர்சகரும் ஆவார். பல்வேறு பத்திரிகைகளில் உலக சினிமாக்கள் குறித்து எழுதி வந்தார். சமீபத்தில் திரிசக்தி பதிப்பகம் இவரது 'திரைச்சீலை" எனும் நூலை வெளியிட்டது. இது ஓவியர் ஜீவானந்தனின் முதல் நூலாகும்.

வெளியான போதே பரவலான கவனிப்பைப் பெற்ற இந்த நூல் 58வது தேசிய விருதுகள் அறிவிப்பில் சிறந்த நூலுக்கான விருதினைப் பெற்றுள்ளது.

29 ஆண்டுகளுக்கு பின்

கடைசியாக இந்த விருது 1982-ம் ஆண்டு அறந்தை நாராயணன் எழுதிய 'தமிழ் சினிமாவின் கதை" என்ற நூலுக்கு கிடைத்தது. கிட்டத்தட்ட 29 ஆண்டுகள் கழித்து இந்த விருது தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு கிடைத்தது இலக்கிய உலகில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Coimbatore based artist, writer and famous cinema critic Jeevananthan has got national award for his book Thiraicheelai. Earlier Arandhai Narayanan received this award in the year 1982.
Write a Comment