தமிழ் விக்கி ஊடகப் போட்டி: முதல் பரிசு 200 யுஎஸ் டாலர்

By:
Share this on your social network:
   Facebook Twitter Google+ Comments Mail

சென்னை: தமிழ் விககிப்பீடியா ஊடகப் போட்டியினை நடத்துகிறது. கடந்த 15ம் தேதி துவங்கிய போட்டி வரும் பிப்ரவரி மாதம் 29ம் தேதி வரை நடைபெறுகிறது.

தமிழ்-தமிழர் பற்றிய உயர்தர ஊடகக் கோப்புகளின் எண்ணிக்கையைக் கூட்டுவதற்காகவும், புகைப்படக் கலைஞர்கள், ஓவியர்கள், அசைப்பட ஆர்வலர்கள், நிழற்பட ஆர்வலர்கள் போன்றவர்களையும் விக்கிக்கு பங்களிப்பு செய்யத் தூண்டுவதற்காகவும் இந்த போட்டி நடத்தப்படுகின்றது.

இதில் பங்கேற்போர் தமிழ்-தமிழர் தொடர்புடைய புகைப்படங்கள்(.ஜேபிஜே, .பிஎன்ஜி,.எஸ்விஜி,.எக்ஸ்சிஎப், .டிஐஎப்எப்), நிழற்படங்கள்(.ஓஜிவி), அசைப்படங்கள்(.ஜிஐஎப்) மற்றும் ஒலிக் கோப்புகள்(.ஓஜிஜி, .எம்ஐடிஐ) ஆகியவற்றை பதிவேற்றலாம்.

போட்டிக்காகப் பதிவேற்றும் கோப்புகள் போட்டியாளரது சொந்தப் படைப்புகளாக இருக்க வேண்டும். இப்போட்டியின் மொத்தப் பரிசுத் தொகை 850 அமெரிக்க டாலர்கள். முதல் பரிசாக 200 டாலர்கள், இரண்டாம் பரிசாக 100 டாலர்கள், மூன்றாம் பரிசாக 50 டாலர்கள் என பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளன. ஆறுதல் பரிசாக 25 டாலர் வீதம் இரண்டு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. இவை தவிர தொடர்ச்சியாகப் பங்களிப்போருக்காக 100 டாலர் வீதம் மூன்று சிறப்புப் பரிசுகளும், தமிழர் தொழிற்கலைகளைப் பற்றிய சிறந்த ஊடகக் கோப்புக்கு 150 டாலர் சிறப்புப் பரிசாகவும் வழங்கப்பட உள்ளன.

கடந்த 15ம் தேதி துவங்கிய போட்டி வரும் பிப்ரவரி மாதம் 29ம் தேதி வரை நடைபெறுகிறது.

போட்டியில் பங்கேற்க விரும்புவோர் http://ta.wikipedia.org/wiki/contest என்ற இணையதள முகவரிக்குச் சென்று முழு விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். போட்டி பற்றிய சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை tamil.wikipedia@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

English summary
Tamil wikipedia is conducting media contest. People can upload original photos, animations, videos, graphs, maps, audio files related to Tamil and Tamils and win attractive prizes. For details go to http://ta.wikipedia.org/wiki/contest
Write a Comment
Please Wait while comments are loading...

Videos