துபாயில் தொழிலாளர்களை அலுப்பை மறந்து சிரிக்க வைத்த நகைச்சுவை சங்கமம்

Posted by:
 
Share this on your social network:
   Facebook Twitter Google+    Comments Mail

துபாயில் தொழிலாளர்களின் கவலையை மறக்கச் செய்த நகைச்சுவை சங்கமம்
துபாய்: துபாய் ஈடிஏ எம்.பி.எம். தொழிலாளர் முகாமில் 21.11.2012 அன்று மாலை நகைச்சுவை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு முதுநிலை பொதுமேலாளர் பி.எம்.எஸ். ஹமீத் தலைமை வகித்தார். நல அலுவலர் பீர் முஹம்மது முன்னிலை வகித்தார். நல அலுவலர் பாலரசு வரவேற்புரை நிகழ்த்தினார்.

தொழிலாளர்களுக்கென ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நகைச்சுவை சங்கமம் நிகழ்ச்சியில் தாயகத்தில் இருந்து வருகை புரிந்த தேவகோட்டை ராமநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பல்வேறு நகைச்சுவைகளை வழங்கி தொழிலாளர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார். தங்களது உடல் சோர்வினை மறந்து அனைவரும் நகைச்சுவை நிகழ்ச்சியை ரசித்து மகிழ்ந்தனர்.

அதனைத் தொடர்ந்து நினைவுப் பரிசினை தேவகோட்டை ராமநாதனுக்கு முதுநிலை பொதுமேலாளர் பி.எம்.எஸ். ஹமீத் வழங்கி கௌரவித்தார். ஆடிட்டர் அப்துல் ரசாக், நலத்துறை அலுவலர் காயல் சுலைமான் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியில் நகரத்தார் சங்க முன்னாள் தலைவர் அழகப்பன், அமீரக தமிழ்ச் சங்க தலைவர் ரமேஷ் விஷ்வநாதன், அஞ்சுகோட்டை நலச் சங்க நிர்வாகி அப்துல் ரசாக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பீர் முஹம்மது, பாலரசு, பாஷா உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.

English summary
Asathal Ramanathan entertained the workers at ETA MBM workers camp in Dubai on november 21.
Write a Comment