ராச‌ல்கைமா த‌மிழ் ம‌ன்ற‌த்தை அதிர வைத்த அசத்தல் ராமநாதன்

Posted by:
 
Share this on your social network:
   Facebook Twitter Google+    Comments Mail

துபாய்: ராசைல்கைமா தமிழ் மன்றத்தின் நகைச்சுவை கலந்துரையாடல் நிகழ்ச்சி கடந்த 17ம் தேதி அங்குள்ள தாஜ்மஹால் ஹோட்டலில் நடைபெற்றது.

ராச‌ல்கைமா த‌மிழ் ம‌ன்ற‌த்தை அதிர வைத்த அசத்தல் ராமநாதன்

துபாயில் இருந்து சுமார் நூறு கிலோ மீட்ட‌ர் தொலைவில் உள்ளது ராச‌ல்கைமா. அங்கு உள்ள‌ ராச‌ல்கைமா த‌மிழ் ம‌ன்ற‌த்தின் ந‌கைச்சுவை க‌ல‌ந்துரையாட‌ல் 17.11.2012 அன்று மாலை தாஜ்ம‌ஹால் ஹோட்ட‌லில் ந‌டைபெற்ற‌து.

நிகழ்ச்சிக்கு ராச‌ல்கைமா த‌மிழ்ம‌ன்ற‌ த‌லைவ‌ர் பூப‌தி த‌லைமை வ‌கித்தார். அஜ்ம‌ல் முன்னிலை வ‌கித்தார். கார்ஸ் துணைப் பொதுமேலாள‌ர் ஹ‌பிபுல்லா துவ‌க்க‌வுரை நிக‌ழ்த்தினார்.

அச‌த்த‌ப்போவ‌து யாரு நிக‌ழ்ச்சி புக‌ழ் தேவ‌கோட்டை ராம‌நாத‌ன் ந‌கைச்சுவை, இல‌க்கிய‌ம் என‌ ப‌ல்வேறு த‌லைப்புக‌ளில் பேசி நிக‌ழ்ச்சிக்கு க‌ல‌க‌லப்பூட்டினார். ராச‌ல்கைமா த‌மிழ் ம‌ன்ற‌த்தின் சார்பில் அவருக்கு நினைவுப் ப‌ரிசு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.

நிக‌ழ்ச்சியில் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பின் ஆலோச‌க‌ர் காவிரிமைந்த‌ன், ந‌க‌ர‌த்தார் ச‌ங்க‌ முன்னாள் த‌லைவ‌ர் அழ‌க‌ப்ப‌ன், ஜ‌மால் முஹைதீன், சித‌ம்ப‌ர‌ம், சொக்கு, வேல்முருக‌ன், காய‌ல் அப்துல் காத‌ர் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் கலந்து கொண்டனர்.

English summary
Asatha Povathu Yaru fame Devakottai Ramanathan was honoured at Ras al Khaimah Tamil Mandram programme held at hotel Tajmahal on november 17.
Write a Comment
AIFW autumn winter 2015