For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஃபெட்னா தமிழ் விழாவில் 80 மணிநேர தமிழ் நிகழ்ச்சிகள்!!!

By Siva
Google Oneindia Tamil News

கலிபோர்னியா: கலிபோர்னியாவில் நடக்க உள்ள ஃபெட்னா தமிழ் விழாவில் 80 மணிநேரம் தமிழ் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.

வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை(ஃபெட்னா), சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் நடத்தும் தமிழ் விழா 2015 ஜூலை மாதம் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு நடக்க உள்ளது. அந்த விழாவில் இரண்டு நாட்களில் பல்வேறு அரங்குகளில் சுமார் 80 மணிநேரம் தமிழ் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.

80 hour tamil programmes in FETNA tamil vizha

தமிழ் நிகழ்ச்சிகளின் விவரம்,

  • திரைப்படப் பாடகர்கள் ஹரிசரன், ரோஷினி, மகிழினி, ஆலாப் ராஜு, சூப்பர் சிங்கர் பாடகர்கள் பிரகதி, பூஜா ஆகியோர் விஜய் டிவி புகழ் பென்னட் இசை குழுவினருடன் இணைந்து நடத்தும் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி.
  • சாகித்திய அகாடமி விருது பெற்ற திரு. பூமணி, தமிழ்/இந்தியவியல் அறிஞர்கள் முனைவர் சுடலைமுத்து பழனியப்பன், முனைவர் வி.எஸ். இராஜம், வைதேகி ஹெர்பர்ட், பேராசிரியர் மைக்கேல் விட்சல் (ஹாவர்டு பல்கலைக்கழகம்) போன்றோர் கலந்து கொள்ளும் இலக்கிய நிகழ்வு.
  • உங்களுடன் அளவளாவ "ஐ" திரைப்படப் புகழ் எமி ஜாக்சன் உட்பட பல தமிழ்த்திரை உலகின் முன்னனி நட்சத்திரங்கள் கலந்துகொள்ளவுள்ளார்கள்.
  • இளையர்களுக்கான இளையர்களால் முன்னெடுக்கப்படும் யூத் ஃபோரம்.
  • அமரர் கல்கியின் காலத்தால் அழியாத காவியமான சிவகாமியின் சபதம் விரிகுடாப்பகுதி கலைஞர்களின் நடிப்பில் 2 மணி நேர நாடகம்.
  • தொழில் முனைவோர் அமர்வு - மாரியட் பேங்கட் ஹாலில் தொழில்முனைவோர் அமர்வு

சிலிக்கன் பள்ளத்தாக்கின் முன்னணி தொழில்துறை முன்னோடிகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வு (http://tef2015.org/)

ஒரு நாள் முழுதும் start-UP கல்வி, start-UP போட்டி, தொழில் முனைவோர் பட்டறை, முன்னணி தொழில் துறை தலைவர்களின் ஆலோசனைகள்
அமெரிக்க தமிழ் முன்னோடிகள் விருது (Tamil American Pioneer Awards)

  • ஏடிஎம்ஏ மற்றும் ஃபெட்னா வழங்கும் மருத்துவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி
  • திரு. மணிமாறன் மற்றும் திருமதி மகிழினியின் பறை இசை நிகழ்ச்சி. மேலும் தனியாக பறையிசைப் பயிற்சிப் பட்டறை.
  • முனைவர் சௌமியா அவர்கள் வழங்கும் ‘தமிழிசை' நிகழ்ச்சி. மேலும் குழந்தைகளுக்கு தனியாக தமிழிசைப் பயிற்சிப் பட்டறை.
  • கவிமாமணி அப்துல் காதர் அவர்கள் தலைமையில் 'ஆர்த்தெழு நீ!' என்ற தலைப்பில் மாபெரும் கவியரங்கம்.
  • கவிஞர் சுமதி ஸ்ரீ அவர்கள் நெறிப்படுத்தி நடத்தும் "தமிழன் தன் அடையாளத்தை நிலைநிறுத்த மிகவும் அவசியமானது மொழியா? கலையா"தலைப்பில் அனல் பறக்கும் கருத்துக்களம்.
  • சன் டிவி புகழ் கல்யாண மாலை வழங்கும் 'பேச்சரங்கம்' நிகழ்ச்சியுடன் அமெரிக்க மண்ணில் நடத்த இருக்கும் மாபெரும் 'வரன் பார்க்கலாம் வாங்க' இணை அமர்வு நிகழ்ச்சி.
  • அனைவரும் கலந்து கொள்ளக்கூடிய தமிழ் இலக்கிய வினாடி வினா மற்றும் தமிழ்த்தேனீ போன்ற ஆர்வத்தைத்தூண்டும் கவிதை, நிழற்படம் மற்றும் சதுரங்கப் போட்டிகள்.
  • சிறுவர்கள் கலந்து கொள்ளக் கூடிய சிறப்புத் திருக்குறள் தேனீ வினாடி வினாப் போட்டி 1330 அமெரிக்க டாலர் பணப் பரிசுடன்! கலந்து கொள்ளும் சிறுவர்களுக்கு பயிற்சி அளிக்கப் படும்! போட்டிக்குப் பதிவு செய்ய கடைசி தேதி மே 31, 2015.
  • இளையோர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்து கொள்ளக் கூடிய ஒரு பக்க சிறு கதைப் போட்டி. இப்போட்டிக்கான கரு: "புலம் பெயர்ந்த தமிழர்களின் இன்றைய தலைமுறை எதிர்நோக்கும் பண்பாட்டு முரண்பாடுகள்(cultural conflicts)". தலை சிறந்த 3 சிறுகதைகள் "சிறகு" தமிழ் இணைய வார இதழில் பிரசுரிக்கப் படும்! இப்போட்டிக்கான சிறுகதையை அனுப்பி வைக்க வேண்டிய கடைசி தேதி ஜூன் 10, 2015.
  • பெட்னா (தமிழ்ச்சங்கப் பேரவையின்) தமிழ் குறும்படப் போட்டிக்காக திரைப்பட இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜுடன் இணைந்து செயல்பட உள்ளது. அவரது நிறுவனம் Benchflix தமிழ் குறும்படங்களை அங்கீகரித்து, அவர்கள் பொதுவெளியில் அங்கீகாரம் பெற உதவி வருகிறது. இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் தன் குழுவுடன் தமிழ் பேரவைக்கான குறும்படப் போட்டியில் பரிசுக்கான படங்களை தேர்வு செய்வதில் நம்முடன் இணைந்து செயல்பட உள்ளார். போட்டிக்கான குறும்படங்களை மே 31, 2015 தேதிக்குள் அனுப்பலாம்.
  • சங்கீத இசைப்பேரறிஞர் ஸ்ரீ பாபநாசம் சிவன் அவர்களின் 125வது ஆண்டு நினைவாக அவரின் பொன்னான பாடல்களை முன் வைத்து ஒரு இசை, வாத்திய நிகழ்ச்சி.
  • ஃபெட்னாவின் சங்கங்கள் கலந்துகொள்ளும் சங்கங்களின் சங்கமம் நிகழ்ச்சியில் தொன்மை வாய்ந்த தமிழ் கலை, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பல சிறப்பு நிகழ்ச்சிகள் - பரதம், சிலம்பம், பறை, கோலாட்டம், கிராமிய நடனம், சங்க இலக்கியப்பாடல்கள் - பேரவையின் பல தமிழ் சங்கங்கள், விரிகுடாப்பகுதி சிறந்த கலைஞர்களால் வழங்கப்படும்.
  • பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரி, விஐடி பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், தியாகராஜர் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் கூட்டம்.
  • செவிகளுக்கும், கண்களுக்கும் மட்டுமல்லாமல் சிறிது வயிற்றிற்கும் ஈயப்படும் எனும் தமிழ் முதுமொழியின் அடிப்படையில் விரிகுடாப்பகுதியின் முன்னணி உணவகங்களிலிருந்து உணவும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
English summary
Tamil programmes will be held for nearly 80 hours during Tamil Vizha arranged by FETNA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X