For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துபாயில் ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ் குறித்த நூல் வெளியீடு

By Siva
Google Oneindia Tamil News

துபாய்: துபாய் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பு, தமிழ்த்தேர் நண்பர்கள் குழுவின் சார்பில் கவியரங்கம் கராமா சிவ ஸ்டார் பவனில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின்

போது ஓமனில் பணிபுரிந்து வரும் சித்ரா நாராயணன் மற்றும் பத்திரிகையாளர் கபீர் யூசுப் ஆகியோர் எழுதிய ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ் குறித்த நூல் மற்றும் பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் நினைவு தமிழ்த்தேர் இதழ் வெளியிடப்பட்டது.

Book on Oman king released in Dubai

காவிரிமைந்தன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மலேசியத் தமிழர் நசுருல்லா கான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் தனது உரையில், தமிழின் முக்கியத்துவம் குறித்து விவரித்தார். மேலும் தாய்மொழி மூலம் அரபி மொழியை எளிதில் கற்றுக்கொள்ளும் வழிமுறையை உலகம் முழுவதும் பரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறினார்.

Book on Oman king released in Dubai

கவிஞர்கள் தஞ்சாவூரான் மற்றும் குறிஞ்சிநாடன் ஆகியோர் தலைமையில் புரட்சியின் பூபாளம் எனும் தலைப்பில் கவியரங்கமும், பட்டுக்கோட்டையார் பாடல்களின் சிறப்பு கலந்துரையாடலும் நடைபெற்றது. வதூத், நர்கிஸ் ஜியா, ஹிதாயத்துல்லா, காயல் வாகித், ரமாமலர், உமா பாலாஜி, ஜியா உள்ளிட்ட பலர் கவிதை வாசித்தனர்.

Book on Oman king released in Dubai

சிறப்பு விருந்தினர் நசுருல்லா கான் பொன்னாடை மற்றும் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து ஓமனில் பணிபுரிந்து வரும் சித்ரா நாராயணன் மற்றும் பத்திரிகையாளர் கபீர் யூசுப் ஆகியோர் எழுதிய பெருமைமிகு சுல்தான் காபூஸ் பின் சைத் அல்சைத் என்ற நூல் மற்றும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு தமிழ்த்தேர் இதழ் வெளியிடப்பட்டது. இந்த நூலை லட்சுமி நாராயணன் வெளியிட உமா பாலாஜி பெற்றுக் கொண்டார்.

Book on Oman king released in Dubai

ஜியாவுதீன் நன்றியுரை நிகழ்த்தினார். ரமாமலர் நிகழ்ச்சியை அழகு தமிழில் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவிந்தராஜன், சசிகுமார், ஹிதாயத்துல்லா, இப்ராகிம், லட்சுமி நாராயணன், ஸ்வேதா கோபால், ரமணி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

English summary
Book on Oman king Sultan Qaboos bin Said al-Said has been released in Dubai at a function held in Karama Sivestar Bhavan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X