For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் ஆழ்வார்கள், நாயன்மார்கள் பற்றி விளக்கும் சென்னை மாதம் திருவிழா

சென்னை 2000 பிளஸ் டிரஸ்டின் மாநில தொல்லியல் துறை மற்றும் அருங்காட்சியக இயக்ககத்தின் சார்பில் சென்னை மாதம் திருவிழா இன்றும் நாளையும் நடக்கிறது.

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக கோவில் கட்டிட கலை பற்றியும், ஆழ்வார்கள், நாயன்மார்கள் பற்றியும் அறிந்து கொள்ள சென்னை மாதம் திருவிழாவிற்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.

சென்னை எழும்பூரில் சென்னை மாதம் திருவிழா எழும்பூரில் உள்ள தொல்லியல்துறை வளாகத்தில் இன்றும், நாளையும் நடைபெறுவதாக அந்த விழாவை ஒருங்கிணைக்கும் சென்னை 2000 பிளஸ் டிரஸ்ட் அறிவித்துள்ளது.

Chennai Maadham Festival begins today

சென்னை 2000 பிளஸ் டிரஸ்டின் மாநில தொல்லியல் துறை மற்றும் அருங்காட்சியக இயக்ககத்தின் சார்பில் சென்னை மாதம் என்ற திருவிழாவின் தொடக்க விழா ஜூலை 25ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த திருவிழா ஒத்திவைக்கப்பட்டது.

ஆகஸ்ட் 16ஆம் தேதியான இன்று சென்னை மாதம் திருவிழா எழும்பூரில் உள்ள தொல்லியல்துறை வளாகத்தில் நடைபெறுகிறது.

காலை 10 மணி முதல் 12 மணிவரை சிற்ப கலை மற்றும் பாரம்பரிய நகர கட்டிட வடிவமைப்பு பற்றி நரசிம்ம சில்பசாரியா பேசுகிறார்.

பிற்பகல் 3 முதல் 4.30 மணிவரை தமிழக கட்டிட கோவில் கலை பற்றி பேசுகிறார் தொல்லியல்துறையின் துணை கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்ற எம் சந்திர மூர்த்தி.

மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை திருவல்லிக்கேணி, திருநீர்மலை, திருவள்ளூர். ஆழ்வார்கள் பற்றி பேசுகிறார் டாக்டர் எஸ்.பத்மநாபன், சமஸ்கிருத பல்கலைக்கழக துறைத்தலைவர்.

ஆகஸ்ட் 17ஆம் தேதியான நாளைய தினம், காலை 10.30 மணிமுதல் 12 மணிவரை, புலியூர் கோட்டம் - 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான சென்னை பற்றி சென்னை 2000 ப்ளஸ் தலைவர் ரங்கராஜ் பேசுகிறார்.

பிற்பகல் 12 மணி முதல் 1.30 மணிவரை சென்னையில் நாயன்மார்கள் பற்றி ரவிச்சந்திரன் சிம்ஹகுமார் பேசுகிறார்.

பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரை அயனாவரம், எழும்பூர் பற்றி பேசுகின்றனர் அகிலா, மாணிக்.

English summary
August 16 and 17 respectively, for the lectures being conducted as part of the Chennai Maadham Festival by Chennai 2000 Plus Trust, at Conference Hall of State Archaeology dept, Tamil Saalai (old Halls Road), Tamil Valarchi building, Egmore, Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X