For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"மகளாகப் பிறந்ததற்காகப் பெருமைப்படுகிறேன்".. நெகிழ வைக்கும் தந்தையர் தின வாசகர் பதிவுகள் - பகுதி 3

Google Oneindia Tamil News

சென்னை: தந்தையர் தினத்தையொட்டி தொடர்ந்து நமது வாசகர்கள் அனுப்பி வரும் உருக்கமான பதிவுகள் நெகிழ வைப்பதாக உள்ளன. மேலும் மேலும் பல நெகிழ்ச்சி தரும் மடல்கள் வந்தவண்ணம் உள்ளன.

தந்தையை பிரிந்த சோகம், தந்தையைப் பார்க்க முடியாத வேதனை, இப்படிப்பட்ட தந்தையை பெற்றதற்காகப் பெருமைப்படும் பிள்ளைகள் என பாசக் குவியல்களாக நமது இமெயில் நிரம்பி வழிந்து வருகிறது.

வாசகர்கள் அனுப்பிவைத்துள்ள பதிவுகளிலிருந்து மேலும் சில...

மகளாகப் பிறந்ததற்காகப் பெருமைப்படுகிறேன்.. மாலதி பால்சாமி

மகளாகப் பிறந்ததற்காகப் பெருமைப்படுகிறேன்.. மாலதி பால்சாமி

நமது வாசகி மாலதி பால்சாமியின் தந்தை குறித்து மடல்... என்னுடைய பெயர் மாலதி பால்சாமி .....நான் அவருக்கு மகளா பொறந்ததுக்கு பெருமைப்படுறேன் ....நாங்க என்ன கேட்டாலும் இல்லைனு சொல்லாத ஒரு கடவுள் தான் எங்க அப்பா. எங்க சந்தோசத்துக்காக அவர் தனது சந்தோசத்தை விட்டுக் குடுப்பாரு ... எனக்கு எந்த ஒரு விஷயமா இருந்தாலும் முதல்ல accept பன்றது எங்க அப்பா தான் ...எங்க அப்பாக்கு ஆசை எல்லாம் ஒன்னு மட்டும் தான் நாங்க நல்ல படிக்கணும் அதுக்கு என்ன வேணாலும் பண்ணுவாரு ...எங்க அப்பாகிட்ட எனக்கு ரொம்ப புடிச்சது என்னன்னா அவரு எனக்கு சப்போர்ட் பன்னறது தான் ....எப்பவும் எங்க அப்பா சொல்லுவாரு "மாலதி க்கு எல்லாம் தெரியும் ...அவ என்ன பண்ணனும்னு நெனைக்கிராளோ அதபன்னட்டும் என்று சொல்றதுதான்" "I love you dad....no one can replace you....i am proud of you my dad ..."

என் தந்தையின் தாக்கம்... நாகராஜன் குருசாமி

என் தந்தையின் தாக்கம்... நாகராஜன் குருசாமி

அபுதாபியிலிருந்து வாசகர் நாகராஜன் குருசாமி எழுதியுள்ள மடல்... வணக்கம். எனது தந்தை எனக்கு 9 வயது இருக்கும்பொழுது ஒரு சாலை விபத்தில் இறந்து விட்டார்..ஆனாலும் அந்த 9 வருடங்களில் அவர் ஏற்படுத்திய தாக்கம் அதிகம்..நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்த என் தந்தை படிப்பின் அவசியத்தை உணர்ந்தவர்..எப்பொழுதும் எங்களை ஊக்கப்படுத்தி கொண்டே இருப்பார்..எங்கள் வீட்டை அவரே தனியாக காட்டினார்..மண்சுவரில் கூரை வீடு..எங்களுக்கு முடிவெட்டி விடுவார்..பின்னாளில் அவரே ஆங்கிலத்தில் டைரி எழுதும் அளவுக்கு சுய முன்னேற்றம் கண்டார்..அவர் விதைத்த கனவை இன்று ஒரு அமெரிக்க நிறுவனத்தில் பொறியாளரை அமரும் போது உணர்கிறேன்..இன்றும் அவரது காலியிடத்தை நினைத்து உருகுகிறேன்.

அப்பா என்றால் அன்பு, அறிவு, அமைதி... ரவீ

அப்பா என்றால் அன்பு, அறிவு, அமைதி... ரவீ

வாசகர் ரவி தனது தந்தை குறித்து அனுப்பியுள்ள பகிர்வு... அப்பா என்றால் அன்பு. அறிவு, அமைதிதான் நினைவுக்கு வரும். வாழ்நாள் முழுவதுமே உழைத்தார். எதற்காக இப்படி ஒரு ஓட்டம் ஓடினார் என நினைத்தால் வறுமை. பசி, பிள்ளைகளின் எதிர்காலம் இதுதான் நினைவுக்கு வருகிறது. ஒரு வார்த்தை கூட தவறாகப் பேசியதில்லை. எங்கள் (பிள்ளைகள்) வாயிலிருந்து தவறான வார்த்தைகளே வராமல் வளர்த்தார். எந்த கெட்டப்பழக்கமும் இல்லாமல் கடைசிவரை வாழ்ந்தவர். நான் படித்து பெரிய ஆளாக (சாதாரணமாக இல்லை) புகழ்பெற்றவராக வர வேண்டுமென நினைத்தவர். அதேபோல அருமையான தமிழ்ப்பெயர்களைச் சூட்டி அழகு பார்த்தவர். நான் பிரபல பத்திரிகையில் பணியில் சேர்ந்தபோது மகிழ்ந்தார். ஆனாலும் என்னால் பெரிதாக எதையும் செய்யமுடியவில்லை. மிஞ்சிப்போனால் திருநெல்வேலியிலிருந்து சொந்த ஊருக்கு செல்லும்போது அல்வா, சில்லுக்கருப்பட்டி வாங்கிச் செல்வேன். பிரியமாக சாப்பிடுவார். கையில் காசில்லாதபோது பசித்தது. காசிருந்தபோது பசிக்கவில்லை. அதே போலத்தான் எனது நிலையும் குறைவான சம்பளம் வாங்கும்போது அவர்களுக்கு பெரிதாக எதுவுமே செய்யமுடியவில்லை. இப்போது நல்ல சம்பளம்,கையில் காசிருந்தபோது அம்மா இல்லை. அப்பாவும் இல்லை. நினைத்தால் அழுகைதான் வருகிறது. எதற்காக எங்களுக்கு பசியுடன் உழைத்தார். வேலை. வேலை. பட்டினி, வறுமை. ஏய் காலமே எதற்காக பசி,பட்டினி, உழைப்பு... நிம்மதி இல்லாத உலகத்தை நினைத்தால் கோபம் வரும். ஆனாலும் அப்பாவை நினைத்து அழத்தான் முடிகிறது. நல்ல மகனாக பெயரெடுத்து பிரோயசனம் இல்லை. அவர்களை பசியின்றி கையில் காசுடன் நிறைவாக ஒவ்வொரு பிள்ளையும் வைக்க வேண்டும்.

அப்பாதான் என் ரோல் மாடல்.. சுரேஷ்

அப்பாதான் என் ரோல் மாடல்.. சுரேஷ்

நமது வாசகர் சுரேஷ் தனது தந்தை குறித்துக் கூறுகையில், நான் சுரேஷ் ... என் அப்பா பேர் ராசு. நான் பிறந்ததுல இருந்து 13 வயது வரை நான் நேர்ல பாத்தது இல்லை. என் அப்பா சிங்கப்பூரில் பணியாற்றுகிறார். என் அப்பாதான் எனக்கு ரோல் மாடல். Thank you dad... my life is very color full .... My father is my hero in full of life.....

கடும் உழைப்பாளி என் அப்பா... ராஜேஷ் ராமமூர்த்தி

கடும் உழைப்பாளி என் அப்பா... ராஜேஷ் ராமமூர்த்தி

மயிலாடுதுறை, கருவலகரை பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் ராமமூர்த்தி என்ற வாசகர் நமக்கு அனுப்பியுள்ள மடல்...

I'm Rajesh Ramamoorthy from Karuvalakarai, Mayiladuthurai. My Father name is Ramamoorthy.R. I wish my father a fantastic fathers day and wish all for the same. My Father is basically a Farmer and we belong to farmer family. He is holding many positions right now including business, political, Panchayat board president etc. He is uneducated and he is very strict on his duties. He is punctual and he is my inspiration too. He is a hardworker that's what today his place is very high and no one can replace his position. I wish my father a pleasant and enjoyable fathers day.Thanks team for this celebration. Your job is appreciated.

என் அப்பா என் ஹீரோ... கண்ணன் ஜி

என் அப்பா என் ஹீரோ... கண்ணன் ஜி

நமது வாசகர் கண்ணன் ஜி எழுதியுள்ள மடல்...

My dad who worked for me until his last breath and gave all credits to me and to my family. My Dad took the all the pains and gave peace and joy to me and to my family. My Dad wont cry in front of us .but cried and worried about me within his heart. Until his last breath he took all the responsibilities and worked hard for my happiness. During my unemployment days...he supported me a lot saying that he is there for me..so dont worry about your career...do your best..you will succeed. Now i am well settled, but my supporting dad.. my hero...my real time hero is not there with me... Really missing you a lot my dear dad!! You are with me always ..your blessing...your support...your love.... Dear friends...please dont avoid or show angry to your parents...they are the gods whom we can see directly... Matha ..pitha ..guru...deviyam.... There is a saying that mother carries their kids for 10 months and faces lot of struggles...But father who take care of us until his last breath.. unlimited love and care with full affection... Happy father's day !!!!

என் ஆத்மா.. என் தந்தை... புஷ்பராஜா

என் ஆத்மா.. என் தந்தை... புஷ்பராஜா

வாசகர் புஷ்பராஜா என்பவர் வேலூரிலிருந்து எழுதியுள்ள மடல்...
Hi, This is Pushparaja M from Vellore district. My father's Name: K. Murugesan. Tons of points are there to say about my father, but some of the points to share. Please find below.
1. My Dad is my soul, He always treated me as a 1 year baby, now I am 27.
2. Always encouraging me with positive points.
3. I have spoken rude many time, but he never did it to me. He always keeps calm and polite to explain his thoughts.
4. Always supporting me like my close friend.
5. I am always supporting my mom even though she did wrong, But he never feel bad about me
6. Best dedicated to my Dad is "Deivangal yeelam" song from kedi billa kelladi ranga.
Love you Dad
Miss you Badly

அற்புதமான அப்பா.. தில்லை பார்த்திபன்.மு.

அற்புதமான அப்பா.. தில்லை பார்த்திபன்.மு.

தன்னுடைய தந்தை முருகேசன் குறித்து நமது வாசகர் தில்லை பார்த்திபன் .மு. பகிர்ந்துள்ள பதிவு... அப்பா அற்புதமான மனிதர். தன் பெயரை கூட சொல்ல இயலாத மனிதன், பிறவி வாய் பேச முடியாதவர். மூன்று பிள்ளைகள் பெற்றாலும் அப்பா என்ற அழைப்பை கேட்க இயலாத நிலை,காதும் அவரை வஞ்சித்தது. கடைக்குட்டி நான். பள்ளி செல்லும் போது அம்மாவுக்கு தெரியாமல் அவர் தரும் ஒரு ருபாய் தரும் சந்தோஷம் இன்று பல ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் கிடைக்கவில்லை. தன் பிள்ளைகளுக்காக சொத்து சேர்பதில் அவர் உலகில் அணைத்து தந்தைக்கும் அவர் முண்ணோடி. எங்களின் தேவைகளை, ஆசைகளை, உணர்வுகளை அவர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஆண்டவன் அதற்கு அவருக்கு "வாய்"ப்பும் தரவில்லை. அம்மாவை கூலி வேலைக்கு அனுமதிக்காத ஆண் மகன். அப்பா என்று கூறி திரும்பி பார்க்க மாட்டாரா என ஏங்கி அழுத நிமிடங்கள் நிறைய.பள்ளிக் கூடம் தெரியாத அப்பா தன் பெயரை கூட தெரியாத அப்பாவி. அவரையும் கையெழுத்து போடவைத்தோம். அவருக்கு பிள்ளைகள் மீது அலாதி பிரியம்.நாங்கள் தான் அவர் உலகம். தன் பெற்றோர்கள் இறந்த போதுகூட அழாத மனிதர், நானும் எனது சகோதரியும் படிப்புக்காக முதன் முதலாக வீட்டைவிட்டு விடுதியில் தங்கி பின் ஊர் திரும்பும் போது கட்டி அனைத்து அழுதார் எங்கள் இறைவன். தன் 62 வயதிழும் உழைத்து கொண்டிருக்கும் உழைப்பாளி. அப்பா என் சாமி, நீ தான் எங்கள் குல தெய்வம். ஊரில் ஊதாரி தகப்பன்கள் பலர் உண்டு, பிள்ளைகளை இம்சிக்கும் அப்பாக்களை பார்த்திருக்கிறேன், அவர்களுக்கு மத்தியில் நீ ஒரு நல்ல தகப்பன். வார்தைகள் இல்லை தந்தையே உன் உழைப்பை, உன் வீராப்பு,உன் தன் நம்பிக்கையை விவரிக்க. எங்க அப்பா எப்போதும் கெத்து தான்.

Fantastic father...ராமன் கந்தசாமி

Fantastic father...ராமன் கந்தசாமி

அபுதாபியில் வசிக்கும், திருவண்ணாமலை மாவட்டம், லாடவரம் பகுதியைச் சேர்ந்த நமது வாசகர் ராமன் கந்தசாமி எழுதியுள்ள மடல்...

First of all I would like to salute my Great and fantastic father, who is my inspiration, guide, adviser for all my activities. Now my father is no more in the world, but still i feel who is alive with me. When I was a child I used to cry before going to bed, but my father will sing 'Thaalattu'. Still I remember those songs with lyrics. Still I remember that how my father admitted me in the elementary school from the poor family and after passing 5th Standard how much difficulties he had faced to admit in the high school and then same after passing my 10th and 12th standard.
I have grown in much disciplined manner with my father's advise and guidance. Now myself, my brother and sisters are in good position but you are not alive with us to see the level of our growth. Now I privilege to say that we still live in joint family and surrounding the villages wonder that how we are living as joint family that is because of your LOVE and AFFECTION shown on us. Bless us Father... I LOVE YOU FATHER AND MISS YOU SO MUCH.

English summary
Thatstamil readers are celebrating their fathers on the Fathers day and some of their mails are listed here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X