For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய “நேர மேலாண்மை பயிலரங்கு”

By Siva
Google Oneindia Tamil News

சிங்கப்பூர்: திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) 11-09-2016 அன்று மாணவர்களைத் தேர்வுக்கு தயார் செய்யும் நோக்கில், நேர மேலாண்மை (TIME MANAGEMENT) பற்றிய இலவசப் பயிலரங்கு ஒன்றை சிங்கப்பூரிலுள்ள உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடத்தியது.

தொடக்க நிலை நான்காம் வகுப்பு மாணவர்கள் முதல் உயர் நிலை நான்காம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்கள் சுமார் 100 பேர் இப்பயிலரங்கில் கலந்து கொண்டனர். மாணவர்களின் பெற்றோர்களுக்கும் சில பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

Time management workshop held in Singapore

30 ஆண்டுகள் கணிதம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் அனுபவம் பெற்ற கணிதப் பேராசிரியர் திரு அமானுல்லா இப்பயிலரங்கை நடத்தினார். பள்ளிப் பாடங்களை பயிலும் பொழுதும், தேர்வு காலங்களிலும், நேரத்தை எவ்வாறு முறையாக நிர்வகித்து திறம்படச் செயல்பட வேண்டும் என்று நேர மேலாண்மை தொடர்புடைய பத்து யுக்திகள் இப்பயிலரங்கில் விளக்கப்பட்டன.

நாடாளுமன்ற நியமன உறுப்பினர் கே. தனலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். "இன்றைய மாணவர்கள் தான் நாளைய சிங்கப்பூரை உருவாக்கக் கூடியவர்கள்; இளையர்கள் அனைவரும், கல்வியில் அதிக கவனம் செலுத்தி, கால நேரத்தை சரியாக நிர்வகித்து முன்னேற வேண்டும்" என்று அவரது சிறப்புரையில் குறிப்பிட்டார்.

Time management workshop held in Singapore

"ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கான இலவசப் பயிலரங்கு தொடர்ந்து நடத்தப்படும்" என்று அறிவித்தார் சங்கத்தின் தலைவர் பட்டயக் கணக்காய்வாளர் டாக்டர் திரு காதர். மாணவர்கள் தேர்வுக்காகத் தயார் செய்து கொண்டிருக்கும் இவ்வேளையில், இப்பயிலரங்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

English summary
Former Jamalians arranged for a Time Management workshop in Singapore for the students.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X