For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாணவர்களுக்கு ஸ்கைப் மூலம் தமிழ்த் திறனாய்வுத் தேர்வுகள் : அமெரிக்க தமிழ்ப் பள்ளி நடத்துகிறது!

By Shankar
Google Oneindia Tamil News

டல்லாஸ்(யு.எஸ்): அமெரிக்கா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. பெரும்பாலும் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் நகரங்களில், ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் இருக்கின்றன.

தமிழர்கள் குறைந்த எண்ணிக்கையில் வசிக்கும் நகரங்களில் தமிழ்ப் பள்ளிகள் அரிதாக இருக்கின்றது. குறிப்பாக அப்படிப்பட்ட ஊர்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு, தமிழ் மொழியை பயிற்றுவிக்கும் நோக்கத்துடன் www.ilearntamilnow.com இணையத்தள தமிழ்ப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

ஆன்லைன் மூலம் பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன். பெற்றோர்கள் உதவியுடன் குழந்தைகள், வரையறுக்கப்பட்ட பாட்த்திட்டங்களை பயின்று வருகிறார்கள்.

US Tamil School to conduct annual exams through Skype

ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களை திறனாய்வு செய்வதற்காக ஸ்கைப் மூலம் தேர்வுகள் நட்த்த உள்ளார்கள், ஒரு மாணவருக்கு ஒரு ஆசிரியர், 30 முதல் 60 நிமிடங்கள் வரை, வகுப்பு நிலைக்கு ஏற்றவாறு இந்த தேர்வு நடைபெறும்.

www.ilearntamilnow.com இணையத்தள தமிழ்ப் பள்ளி தவிர ஏனைய தமிழ்ப் பள்ளி மாணவர்களும் இந்த தேர்வில் பங்கேற்கலாம். பெற்றோர்களிடம் தமிழ் பயின்று வரும் மாணவர்களுக்கும் வாய்ப்பு உண்டு. தமிழ்கம் தவிர உலகெங்கும் வசிக்கும் தமிழ்க் குழந்தைகள் இந்த திறனாய்வுத் தேர்வுக்கு வரவேற்கப்படுகிறார்கள்.

தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெரும் மாணவ மாணவியர்களுக்கு, டல்லாஸ் புரவலர் பால்பாண்டியன் - டாக்டர் கீதா பாண்டியன் தம்பதியினர் சிறப்புப் பரிசுகள் வழங்க உள்ளார்கள்.

தேர்வில் பங்கேற்க, ஏப்ரல் 30ம் தேதி வரை www.ilearntamilnow.com இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் செய்து வருகின்றனர்.

அடுத்த தலைமுறைத் தமிழர்களிடம் தமிழ் மொழியை, எடுத்துச் செல்ல பல்வேறு வகைகளில் செயல்பட்டு வரும் அமெரிக்கத் தமிழர்களின் தன்னலமிக்க இத்தகைய செயல்பாடுகள், நிச்சயம் போற்றத் தக்கது.

-இர தினகர்

English summary
Dallas based www.ilearntamilnow.com online Tamil school is conducting annual examination using skype. Mr.Paul Pandian and Dr.Geetha Pandian are awarding special prizes for the students scoring highest marks in the examinations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X