For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விவாகரத்து

By Staff
Google Oneindia Tamil News

உணர்வுகள் உறவுகளை வெல்ல,
உறவுகள் உணர்ச்சிகளைக் கொல்ல
வாழ்க்கைப் பாதையெங்கும்
வெறுப்புகளின் வேர்கள்.

பார்வைகள் அம்புகளாக,
வார்த்தைகள் வம்புகளாக
பத்துக்குப் பத்து
படுக்கையறையில்
பானிபட் யுத்தம்.

எல்லாமே நீ
என்ற உதடுகள்
இன்று
எல்லாத்துக்குமே நீ என்றன.

இல்லத்தில் எல்லாம் இரண்டாக
உள்ளத்தில் விருப்பம் ஒன்றானது
விவாகரத்து.

இரு மன
வெறுப்பினால்
திருமணம்
அறுந்தது.

தெரியுமா?
கல்யாணம்,
கணவன், மனைவியாய் வாழ...
ஆணும் பெண்ணுமாய் அல்ல.

ஒன்றுதான்
புரியவில்லை.
ஒத்துப்போகவில்லை
என்றவர்கள்,
விவாகரத்துக்கு
மட்டுமெப்படி
ஒத்துப்போனார்கள்?

- ஜெகன்([email protected])

Divorceஇவரது முந்தைய படைப்புகள்:

1. பணம்
2. விறகான வீணைகள்


படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X