பதவி படுத்தும் பாடு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கை கூப்பி நின்னீங்க
கலகலன்னு சிரிச்சீங்க
சேறு படிஞ்ச முகத்தை கூட
சேர்த்து நின்னு புகைப்படம்
எடுத்தீங்க

வயலு வரப்புனு
வரிசை கட்டி
சென்றீங்க

Poem on politicians

செடி கொடி பாக்காம
மேடு பள்ளம் தெரியாம
காத்து தூசி அறியாம
ஏழை ஜனங்க
வீடு வாசல் பார்த்து
ஓடிஓடி
தேடி தேடி
அடுக்கடுக்கா
வாக்குறுதி
அள்ளி
வீசி
ஒட்டு
கேட்டு போனீங்க

நாங்க பாவப்பட்ட
மனுஷங்க
சூதுவாது தெரியாது
உள்குத்து புரியாது
கள்ளம் கபடம்
அறியாம
முழு மனசா
நம்பித்தானே
உங்களுக்கு
ஒட்டு போட்டோம்

இன்றும் நாங்க
அதே வெட்ட வெளியில்
கட்டாந்தரையில்
கால் கடுக்க
சின்னசின்ன
விஷயத்துக்கும்
கவலையோடு
காத்து கிடக்கின்றோம்

நீங்க
ஆடம்பரமா வாழுங்க
வீடு வாசல்
சொத்து பத்து சேருங்க
ஆனால்
இனியும் ஒருக்காலும்
எங்களை
முழுசா
ஏமாத்த மட்டும்
நினைக்காதீங்க
நாங்க
பட்டது போதும் !!!

- கூத்தாநல்லூர் கு.செ.அமீர் ஹம்ஸா (துபாய்)

மனத்திற்குப் பிடித்த வரன்கள் உங்கள் தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

English summary
A poem on politicians, sent by our Dubai based reader Koothanallur Ameer Hamsa.
Please Wait while comments are loading...