நவகிரகங்களும் இடப்பெயர்ச்சியாகும் ஹேவிளம்பி வருடம்

இந்த ஹேவிளம்பி வருடத்தில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே ஆண்டில் (2017-ல்) குரு, ராகு- கேது, சனிப் பெயர்ச்சிகள் உட்பட ஒன்பது கிரகங்களின் பெயற்சிகளும் நடைபெற உள்ளன

Subscribe to Oneindia Tamil

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை: ஹேவிளம்பி தமிழ் புத்தாண்டு இன்று பிறந்துள்ளது. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். இந்த ஹேவிளம்பி வருடத்தில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே ஆண்டில் (2017-ல்) குரு, ராகு- கேது, சனிப் பெயர்ச்சிகள் உட்பட ஒன்பது கிரகங்களின் பெயற்சிகளும் நடைபெற உள்ளன

நவ கிரங்களும் தங்கள் ஓடுபாதையில் நகர்ந்துக்கொண்டேதான் இருக்கின்றன என்கிறது வான சாஸ்திரம். வானசாஸ்திரத்தினை அடிப்படையாக கொண்ட ஜோதிடத்தில் சந்திரன் இரண்டரை நாட்களுக்கு ஒருமுறையும், முக்கூட்டு கிரகங்களான சூரியன், சுக்கிரன் மற்றும் புதன் ஒரு மாதத்திற்கு ஒரு முறையும், செவ்வாய் ஒன்றரை மாதத்திற்க்கு ஒருமுறையும் குரு வருடத்திற்கு ஒரு முறையும் ராகுவும் கேதுவும் ஒன்றை ஆண்டுகளுக்கு ஒரு முறையும் சனி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறையும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயற்சியாகின்றனர்.

தமிழ் ஆண்டுகள் அறுபது ஆண்டுகளைக்கொண்டச் சுற்றுகளைக் கொண்டது. பஞ்சாங்கத்தில் வாரம் 7 நாட்களை கொண்டது என்றும் தமிழ் மாதங்கள் 12 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல தமிழ் ஆண்டுகள் பிரபவ என்னும் பெயருடைய ஆண்டில் தொடங்கி அட்சய என்னும் பெயருடைய ஆண்டில் முடியும். இப்படி அறுபது ஆண்டுகளை கொண்டுள்ளது ஒரு சுழற்சி. இந்த வரிசையில் 31வது ஆண்டின் பெயர் ஹேவிளம்பி ஆகும்.

ராகு-கேது மற்றும் சனி ஒரு ராசியிலிருந்து பெயர ஒராண்டிறுக்கு மேல் ஆவதால் சில ஆண்டுகளில் இந்த கிரகங்களின் பெயற்சி ஏற்பட வாய்ப்பிருக்காது.

ஆனால் இந்த ஹேவிளம்பி வருஷத்தில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே ஆண்டில் (2017-ல்) குரு, ராகு- கேது, சனிப் பெயர்ச்சிகள் உட்பட ஒன்பது கிரகங்களின் பெயற்சிகளும் நடைபெற உள்ளன

குரு பெயர்ச்சி

திருக்கணித பஞ்சாங்கபடி இந்தாண்டு குருபெயற்சி ஆவனி மாதம் 27ம் தேதி (12-09-2017) செவ்வாய்கிழமை காலை 6.51 க்கு சூரிய உதயாதி நாழிகை 2.04 அளவில் குருபகவான் கன்னி ராசியிலிருந்நு துலா ராசிக்கு பெயர்சியாகிறார்.

சனிப் பெயர்ச்சி

சனி பெயற்சியானது இந்த ஆண்டு ஆனி மாதம் 6ம்தேதி ((20-06-2017) செவ்வாய்கிழமை இரவு 4.38க்கு சூரிய உதயாதி நாழிகை 57.07 அளவில் அதிசாரத்தில் தனுர் ராசியில் உள்ள சனி பகவான் வக்ர கதியில் விருச்சிக ராசிக்கு பெயற்சியாகிறார். மீண்டும் ஐப்பசி மாதம் 9ம் தேதி ( 26-10-2017) வியாழக்கிழமை பிற்பகல் 3.28 மணிமணிக்கு சூரிய உதயாதி நாழிகை 23.28 அளவில் நேர்கதியில் விருச்சிக ராசியில் இருந்து தனுர் ராசிக்கு பெயர்சியாகிறார்.

ராகு - கேது பெயர்ச்சி

அதேபோல ராகு-கேது இந்தாண்டு ஆவணி மாதம் 1ம் தேதி (17-08-2017) வியாழக்கிழமை இரவு 2.32 மணிக்கு சூரிய உதயாதி நாழிகை 51.20 அளவில் ராகு பகவான் சிம்மராசியிலிருந்து பின்னோக்கி கடக ராசிக்கும் கேது பகவான் கும்பராசியிலிருந்து மகர ராசிக்கும் பெயர்ந்து செல்கிறார்கள்.

பணப்பிரச்சிரன தீரும்

கால புருஷ ராசிப்படி குரு, சனி, ராகு கேது பெயர்சிகளின் பொதுவான பலன்களைக் காணலாம். இந்த ஆண்டு பெருந்தன காரகனான குரு பகவான் கால புருஷ ஏழாவது மற்றும் களத்திர காரகனான சுக்கிரனின் ராசியில் பெயற்சியாவதால் பணத்திற்க்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும். அனைவரிடமும் பண புழக்கம் திருப்திகரமாக இருக்கும். சுப நிகழ்வுகள் பல நடைபெறும். கோயில்களில் திருவிழாக்கள் நிறைய நடைபெறும். புத்திரபேறு பெருவாருகள். என்றாலும் சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவு மற்றும் மருத்துவ விஷயத்தில் விழிப்புடன் இருக்கவேண்டிய காலமாகும்.

இயற்கை சீற்றங்கள்

சனிபகவான் காலபுருஷ எட்டாவது ராசி மற்றும் நீர் ராசியான விருச்சிகத்தில் பகை வீட்டில் நிற்கும் காலம் பலவிதமான பூகம்பங்கள், பேரழிவுகள், புயல், சூராவளி

காற்று, பெருமழை போன்ற பிரளயங்கள் ஏற்படும். மீண்டும் தனுர் ராசிக்கு பெயர்ந்தவுடன் சுபிக்ஷங்கள் மேலோங்கும்.தர்ம காரியங்கள் பல நடைபெரும். கோயில் கும்பாபிஷேகம் போன்ற நிகழவுகள் நிறைய நடைபெரும்.

 

அரசியல் மாற்றங்கள்

ராகு பகவான் சிம்ம ராசியிலிருந்து கால புருஷனுக்கு நான்காவது ராசி நீர் ராசி மற்றும் சந்திரனின் ராசியில் பெயரும் காலம் அயல்நாட்டு வேலை வாய்ப்புகள் பெருகும். அன்னையர்களுக்கு மன சஞ்சலம் ஏற்படும். நெஞ்சு வலி, இதய கோளாறுகள் போன்ற பாதிப்புகள் அதிகரிக்கும். கேது பகவான் கால புருஷனுக்கு 10வது ராசியான மகரத்திற்கு பெயரும் காலம் திடீர் அரசியல் மாற்றங்கள் ஏற்படும். தொழிலில் மந்த நிலை தோன்றி பின் திடீரென முன்னேற்றம் ஏற்படும்.

குரு, ராகு- கேது, சனிப் பெயர்ச்சிகள் நடைபெறும் போது கோயில்களின் சிறப்புப் பூஜைகள் மற்றும் பாதிப்பு உள்ள ராசிகளுக்கு பரிகாரங்கள் செய்யப் படும்.

 

English summary
Transits of the Moon will give its changing influence on a daily basis, as it takes approximately two to three days for the Moon to transit a sign. The Sun takes one month to transit a sign. Mars, Venus and Mercury can take anywhere from two to six months. transits of the two slow moving and powerful planets Saturn and Jupiter are very important as they have a long duration effects.
Please Wait while comments are loading...