For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அம்மனின் அருள் கிடைக்கும் ஆடி மாதம் ராசிபலன்

Google Oneindia Tamil News

-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன்

ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள். அம்மன், அம்பாள், ஆண்டாள், சக்தி ஸ்தலங்களில் அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் என்று பக்தி மணம் கமழும்.

இந்த வருடம் ஜூலை 17ம் தேதி ஆடி மாதம் பிறக்கிறது. அன்றைய தினம் வெள்ளிக்கிழமையும் சேர்ந்து வருவதால் மாதப் பிறப்பு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் இருந்துதான் விரதங்கள், பண்டிகைகள், உற்சவங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக தொடங்குகிறது.

ஆடி மாதத்தில் வரும் அமாவாசை, பவுர்ணமி, கிருத்திகை, ஆடித்தபசு, ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், நாகசதுர்த்தி, கருட பஞ்சமி, வரலட்சுமி விரதம் என விசேஷ வைபவங்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருக்கும்.

Aadi month Rasi Palan

ஆடி செவ்வாய்

ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் மிக விசேஷமானவை. ‘ஆடிச் செவ்வாய் தேடிக் குளி' என்பது பழமொழி. அதாவது விரதம் இருந்து எண்ணெய் தேய்த்து குளித்து அம்பாளை வழிபட பெண்களின் மாங்கல்ய பலம் கூடும். என்பது ஐதீகம்.

ஆடி வெள்ளி சிறப்பு

ஆடிவெள்ளி அன்று அம்மன் வழிபாடு மிகப் பிரசித்தம். இது சகல பாக்கியங்களையும் அள்ளித் தரும். குழந்தைப் பேறு கிடைக்கும். ஆடி ஞாயிற்றுக்கிழமை நேர்த்திக் கடன்களையும், பிரார்த்தனைகளையும் செலுத்தும் நாளாக கருதப்படுகிறது. அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றி வழிபடுவது சிறப்பு.

ஆடி அமாவாசை

ஆடி மாதத்தில் வரும் அமாவாசை மிக முக்கியமானதாகும். அன்று நதிகள், கடலில் புனித நீராடி முன்னோர்களை வணங்கி திதி கொடுப்பதும் அன்னதானம், வஸ்திர தானம் செய்வதும் புண்ணியம்.

ஆடிப்பெருக்கு

ஆடிப்பெருக்கு என்பது சிறப்புமிக்க விழாவாகும். இந்த விழா நம் கலாசாரத்தையும், உறவின் வலிமையையும் பிரதிபலிக்கும் அம்சமாக விளங்குகிறது. மேலும் நதிகள், நீர்நிலைகள், கடல் போன்ற இயற்கை அமைப்புகளுக்கு நன்றி செலுத்தும் நாளாகவும் திகழ்கிறது. ஆடி 18ம் நாளில் நதிக்கரைகளிலும், கடற்கரைகளிலும் கூடி வணங்குவார்கள். புதுமண தம்பதிகள் நிலாச்சோறு உண்டு, தாலி மாற்றி, புதுத் தாலிக்கயிறு அணிவதும் வழக்கமாகும். கன்னிப் பெண்கள் திருமணம் கூடிவர அம்மனை வேண்டி கழுத்தில் மஞ்சள் சரடு கட்டிக் கொள்வார்கள்.

கிரகிரகங்களின் ராசி மாற்றம்

சூரியன் - ராசி மாற்றம் இல்லை
செவ்வாய் - ஆடி 14ம் நாள் கடகம் ராசிக்கு மாறுகிறார்
புதன் - ஆடி 4ம் நாள் கடகம் ராசிக்கு மாறுகிறார்
ஆடி 19ம் நாள் சிம்மம் ராசிக்கு மாறுகிறார்
குரு - ராசி மாற்றம் இல்லை
சுக்கிரன் - ஆடி 28ம் நாள் வக்ர கதியில் கடகம் ராசிக்கு மாறுகிறார்
சனி - ராசி மாற்றம் இல்லை
ராகு-கேது - ராசி மாற்றம் இல்லை

மேஷம்:

சூரியன் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்துகள் கிடைக்கும் குழந்தைகளுக்காக வாகனம் வாங்குவீர்கள். ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் இடமாற்றம் உண்டாகும் சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதன் உங்கள் ராசிக்கு நான்காமிடத்திலும் ஐந்தாமிடத்திலும் சஞ்சரிக்கவிருக்கிறார் வாகன யோகம் உண்டாகும் கல்வியில் மேன்மை உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளால் சந்தோஷமும் பண வரவும் அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும் வீட்டுக்கு அழகு ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பாராதவிதமாக தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் உத்தியோக வாய்ப்புகள் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மன தைரியம் அதிகரிக்கும் எதிரிகளை வெல்லும் திறன் உருவாகும். கேது உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகப் பயணம் செல்வீர்கள் அம்மா வழி பாட்டி வகையில் செலவுகள் செய்யும் நிலை உருவாகும்.

ரிஷபம்:

சூரியன் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அரசு முறை பயணம் உண்டாகும் அரசு ஊழியர்களுக்கு பணியிடமாற்றம் உண்டாகும். செவ்வாய் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் இயந்திரம் தொடர்பான தொழிலில் வருமானம் இருக்கும் பேச்சில் கோபத்தை குறைத்துக் கொள்ளவும். புதன் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்திலும் நான்காமிடத்திலும் சஞ்சரிக்கவிருக்கிறார் நீண்ட நாட்கள் எதிர்பார்த்திருந்த தகவல் வந்து சேரும் தாய்மாமனின் உதவி கிடைக்கும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிய வாகனம் வாங்குவீர்கள், வீடு நிலம் யோகம் உண்டாகும். ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் பெண்களால் யோகம் உண்டாகும், கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும் சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியாகும் வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகள் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வெல்வார்கள் உல்லாசப் பயணம் செல்வீர்கள். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நினைத்ததெல்லாம் நிறைவேறும், தொழில் லாபம் அதிகரிக்கும்.

மிதுனம்:

சூரியன் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் ஆலோசனை குடும்ப சந்தோஷத்திற்கு வழிவகுக்கும், அரசு மூலம் வருமானம் அதிகரிக்கும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் அதிகாரமும் கோபமும் அதிகரிக்கும், நெருப்பு சம்பந்தமான விஷயங்களில் கவனம் தேவை. ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்திலும் மூன்றாமிடத்திலும் சஞ்சரிக்கவிருக்கிறார் பேச்சில் இனிமை அதிகரிக்கும், சமயோசிதமாக செயல்படும் திறன் உருவாகும். குரு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் புதிய வீடு கட்டி குடிபோகும் யோகம் உருவாகும், வெளியூர் பயணத்தினால் பண வரவு உண்டாகும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் விருந்து வேடிக்கை கேளிக்கைகளில் ஆர்வம் அதிகரிக்கும், பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உழைப்பினால் முன்னேற்றத்திற்கு வருவீர்கள், பணியாட்களின் உதவி கிடைக்கும். ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அம்மா மூலம் சொத்துகள் கிடைக்கும், அப்பா வகை தாத்தா வகையில் நன்மை உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் சிறிய வகை தொழிலில் முன்னேற்றம் உண்டாகும், செயல்பாடுகளில் கவனம் தேவை.

கடகம்:

சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும், உடல் ஆரோக்கியம் மேம்படும். செவ்வாய் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுக்காக செலவுகள் அதிகரிக்கும், புதிதாக நிலம் வாங்குவீர்கள். புதன் உங்கள் ஜென்ம ராசியிலும் இரண்டாமிடத்திலும் சஞ்சரிக்கவிருக்கிறார் தாய் மாமன் உதவி கிடைக்கும், வாக்கு பலிதம் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும், கடன்களை திரும்ப செலுத்தி மன நிம்மதி அடையலாம். சுக்கிரன் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். கலைப் பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் மன நிலையில் குழப்பம் உண்டாகும், விவசாய லாபம் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களின் உதவி கிடைக்கும், வெளியூர் பயணம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குலதெய்வ கோவிலுக்கு செல்வீர்கள், அப்பா வகையில் சொத்துகள் கிடைக்கும்.

சிம்மம்:

ராசிநாதன் சூரியன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அரசு வகையில் செலவுகள் அதிகரிக்கும், மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழிலில் லாபம் அதிகரிக்கும், புதிய வாகனம் வாங்குவீர்கள். புதன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்திலும் ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்கவிருக்கிறார் தகவல் தொடர்பில் மேன்மை உண்டாகும், படிப்புக்காக வெளியூர் செல்லும் நிலை உருவாகும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் புதிய மனம் தெளிவாக இருக்கும், வங்கி சேமிப்பு அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும், பெண்களால் யோகம் உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வேலைப் பளு அதிகரிக்கும், வாகனங்களை நன்கு பராமரித்து வைத்துக்கொள்ளுங்கள். ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்ப சூழ்நிலையில் கவனம் செலுத்தவும், குதற்க்கமான வார்த்தைகளைத் தவிர்க்கவும். கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும், வாகனங்களைக் கையாளும் பொழுது கவனம் தேவை.

கன்னி:

சூரியன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும், அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் பதவி உயர்வு கிடைக்கும், நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில் சிறப்படையும். ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்திலும் பன்னிரெண்டாமிடத்திலும் சஞ்சரிக்கவிருக்கிறார் கமிஷன் வியாபாரம் சிறப்படையும், படிப்புக்காக செலவுகள் அதிகரிக்கும் குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் புதிய துறைகளில் முதலீடு செய்வீர்கள், குழந்தகளின் படிப்புகளுக்காக வெளியூர் செல்லும் நிலை உருவாகும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் மனைவிக்காக செலவுகள் அதிகரிக்கும், வெளிநாடு செல்வீர்கள். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் தொழிலுக்காக அடிக்கடி சிறு பயணம் மேற்கொள்ளும் நிலை உருவாகும், பக்கத்து வீட்டுக்காரர்களின் உதவி கிடைக்கும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் குழப்பம் அதிகரிக்கும், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு மறையும், நண்பர்களின் உதவி கிடைக்கும்.

துலாம்:

சூரியன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் அரசு வேலைக்காக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு அரசு உத்தியோகம் கிடைக்கும், அப்பாவுடன் சேர்ந்து தொழிலை மேம்படுத்துவீர்கள். செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகப் பயணம் மேற்கொள்வியர்கள், தூர தேசப் பயணம் உண்டாகும். புதன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்திலும் பதினொன்றாமிடத்திலும் சஞ்சரிக்கவிருக்கிறார் தரகு தொழில் சிறப்படையும், ஆன்மீகப் பெரியோர்களின் அருளாசி கிடைக்கும். குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும், குழந்தைகளால் சந்தோஷம் உண்டாகும். ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் யோகம் உண்டாகும், பொன்நகைகளின் சேர்க்கை அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சச்சரவு உண்டாகும், பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. ராகு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும், வீண் அலைச்சல் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, கடன் வாங்கும் நிலை உருவாகும்.

விருச்சிகம்:

சூரியன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் தொழில் ரீதியாக மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணம் வெற்றி பெறும். ராசிநாதன் செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களால் கஷ்ட நஷ்டம் உண்டாகும், வாகனப் போக்குவரத்தில் கவனம் தேவை. புதன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்திலும் பத்தாமிடத்திலும் சஞ்சரிக்கவிருக்கிறார் தாய்மாமனின் உதவி கிடைக்கும், உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் விலகி நிற்கும் நிலை உருவாகும், தொழில் நிலை மேன்மை பெறும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் அழகு சாதன பொருட்கள் வியாபாரம் சிறப்படையும், வேலை பார்க்கும் இடத்தில் பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை. சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனக் குழப்பத்தை தவிர்க்கவும், அலைச்சல் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும், தொழில் லாபம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளின் ஞானம் மேன்மையடையும், பூர்வீக வீட்டிலிருந்து பங்கு கிடைக்கும்.

தனுசு:

சூரியன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் அரசு அதிகாரிகள் விஷயத்தில் கவனம் தேவை, அப்பாவின் ஆரோக்கியம் குறையும் மருத்துவ செலவுகள் உண்டாகும். செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் வியாபாரம் சிறப்படையும், காவல்துறையில் பணிபுரிபவர்களுக்கு பணியிடமாற்றம் உண்டாகும். புதன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்திலும் ஒன்பதாமிடத்திலும் சஞ்சரிக்கவிருக்கிறார் எதிர்பாராத பணவரவு உண்டாகும், படிப்பில் தேர்ச்சி உண்டாகும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் இதுவரை இருந்த பணபற்றாகுறை நீங்கும், காசி ராமேஸ்வரம் போன்ற புனித தலத்திற்கு செல்வீர்கள். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் மனைவியால் அதிர்ஷ்டம் உண்டாகும், பெண் தெய்வத்தின் அருள் கிடைக்கும். சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் புதிய முதலீடுகள் செய்வீர்கள், தொழில் சம்பந்தமாக வெளிநாடு செல்வீர்கள். ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் புதிய தொழில் துவங்குவீர்கள், ரசாயனம் மருத்துவம் தொழில்கள் சிறப்படையும். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக நிலம் வீடு வாகனம் வாங்குவீர்கள், புதிய வீடு கட்டுவதற்கு வாஸ்து பூஜை செய்வீர்கள்,

மகரம்:

சூரியன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் கோதுமை போன்ற உணவுப் பொருட்கள் வியாபாரம் சிறப்படையும், தாமிரம் போன்ற உலோகப் பொருட்கள் சம்பந்தமான தொழிலும் சிறப்படையும். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் நிலம் பூமி வீடு வகையில் கடன் உண்டாகும், சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். புதன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்திலும் எட்டாமிடத்திலும் சஞ்சரிக்கவிருக்கிறார் தரகு கமிஷன் தொழில் மேன்மையடையும், தாய் மாமன் உறவு சிறக்கும். குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் திடீர் பண வரவு உண்டாகும், குழந்தைகளால் மனக் கஷ்டம் உண்டாகும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை, மனைவியால் மனகஷ்டம் உண்டாகும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றி பெறும், எடுத்த காரியங்கள் கைகூடும் தொழில் லாபம் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக சொத்தில் சிக்கல் உண்டாகும், அப்பாவின் ஆரோக்கியம் குறையும் மருத்துவ செலவுகள் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூர் பயணம் செய்யும் நிலை உருவாகும், சகோதரர்களால் நன்மை உண்டு.

கும்பம்:

சூரியன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும், உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் தொழில் மேன்மைக்கு உதவுவார்கள். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் புதிதாக நிலம் பூமி வீடு வாங்குவீர்கள், வாகன யோகம் உண்டாகும். புதன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்திலும் ஏழாமிடத்திலும் சஞ்சரிக்கவிருக்கிறார் ஒப்பந்தத் தொழில் சிறப்படையும், எதிர்பார்க்கும் நல்ல தகவல் வந்து சேரும். குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் கடன்கள் காலியாகும், பண வரவு அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் மனைவியால் அதிர்ஷ்டம் உண்டாகும், ஆன்மீகப் பயணம் உண்டாகும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா எல்லா செயல்களும் வெற்றிபெறும், தொழிலில் புதுப் பொலிவு தோன்றும், தொழில் லாபம் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பாராத நல்ல செய்தி வரும், திடீர் யோகம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும், கம்பியூட்டர் பிரிண்டர் போன்ற புதிய நவீன உபகரணங்களை வாங்குவீர்கள்.

மீனம்:

சூரியன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளால் சந்தோஷம் உண்டாகும், வயிற்றில் உஷ்ணம் காரணமாக வலி உண்டாகும். செவ்வாய் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களால் நன்மை உண்டாகும், வீட்டை பராமரிப்பு பணி நிறைவு பெறும். புதன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்திலும் ஆறாமிடத்திலும் சஞ்சரிக்கவிருக்கிறார் புத்தி கூர்மை அதிகரிக்கும், வியாபாரம் விருத்தியடையும். ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை, குழந்தைகளால் மனகஷ்டம் உண்டாகும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனைவிக்காக செலவுகள் உண்டாகும், கடன் வாங்கி நகைகள் வாங்குவீர்கள். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக சொத்து மூலம் பண வரவு வரும், விவசாயம் மேம்படும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கை துணையுடன் விவாதம் வேண்டாம், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும், மனக்குழப்பத்தை தவிர்

English summary
Rasi Palan for Tamil Month of Aadi from 17th July to 17th August.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X