For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆடி மாத ராசி பலன்கள்

Google Oneindia Tamil News

கடக ராசியில் சூரியன் பிரவேசம் செய்வது ஆடி மாதம்.

ஜோதிட சாஸ்திரத்தில் இதை ‘கர்கடக மாதம்' என்பார்கள்.

ஆடி மாதத்தில் தான் தட்சிணாயன புண்ணியகாலம் ஆரம்பிக்கிறது. அதாவது சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி தனது பயணத்தை துவக்குகிறது. இந்த காலக்கட்டத்தில் பகல் பொழுது குறைவாகவும், இரவு நேரம் நீண்டும் காணப்படும். பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆடி மாதம் இந்த ஆண்டு இன்று சனிக்கிழமை பிறந்திருக்கிறது.

தமிழ் மாத பிறப்புகளுக்கு ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கிறது.

அந்தந்த கால, பருவ சூழ்நிலைக்கு ஏற்ப திருவிழாக்களையும், உற்சவங்களையும், விரத வழிபாடுகளையும் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

ஆடி மாதத்தில் ஆலயங்களில் பண்டிகைகள், உற்சவங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக தொடங்குகிறது.

இந்த மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள்.

ஆடி மாதம் வந்தாலே வீடுகளிலும், கோயில்களிலும் விழாக்களும், விரத வழிபாடுகளும் களை கட்டி விடும்.

அம்மன், அம்பாள், ஆண்டாள், சக்தி ஸ்தலங்களில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் என்று பக்தி மணம் கமழும்.

ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் மிக விசேஷமானவை.

‘ஆடி செவ்வாய் தேடிக் குளி' என்பது பழமொழி.

அதாவது விரதம் இருந்து எண்ணெய் தேய்த்து குளித்து அம்பாளை வழிபட பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது ஐதீகம்.

ஆடி வெள்ளி வழிபாடு செய்வது சகல பாக்யங்களையும் அள்ளித் தரும். திருமண பாக்யம் கைகூடிவரும்.

புதுமண தம்பதியருக்கும் நீண்ட காலமாக குழந்தை பாக்யம் எதிர்பார்த்திருப்போருக்கும் நல்ல அறிவாற்றல், புத்தி சாதுர்யத்துடன் கூடிய குழந்தை பாக்யம் உண்டாகும்.

ஆடி ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைகளையும் நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் நாளாக கருதப்படுகிறது.

அலகு குத்தி காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், சிறப்பு பூஜைகள் செய்தல், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல், அம்மன் கோயில்களுக்கு சென்று வழிபடுதல் என்று இந்த மாதம் முழுவதும் பக்தி மார்க்கத்தில் மூழ்கித் திளைப்பார்கள்.

ஆடி வெள்ளி, செவ்வாய், ஞாயிறு தவிர ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடித்தபசு ஆடி பவுர்ணமி, ஆடிப்பெருக்கு என்று பலப்பல விசேஷ நாட்கள் இந்த மாதத்தில் வருகின்றன. பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆடி மாத ராசி பலன்களை தெரிந்து கொள்வோம்.

கிரகங்களின் ராசி மாற்றம்

கிரகங்களின் ராசி மாற்றம்

சூரியன் - ராசி மாற்றம் இல்லை
செவ்வாய் - ராசி மாற்றம் இல்லை
புதன் - 12ம் தேதி சிம்மம் ராசிக்கு மாறுகிறார்
குரு - 27ம் தேதி கன்னி ராசிக்கு மாறுகிறார்
சுக்கிரன் - 16ம் தேதி சிம்மம் ராசிக்கு மாறுகிறார்
சனி - ராசி மாற்றம் இல்லை
ராகு - ராசி மாற்றம் இல்லை
கேது - ராசி மாற்றம் இல்லை

மேஷம்

மேஷம்

சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் அரசு வாகன யோகம் உண்டாகும் அரசாங்க ஒதுக்கீட்டில் வீடு நிலம் கிடைக்கும் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் வாகனங்களைக் கையாளும்பொழுது கவனம் தேவை சகோதரர்களுடன் பிரச்சினை உண்டாகும் புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் கல்வியில் மேன்மை நிலை உண்டாகும் தரகு கமிஷன் வியாபாரம் சிறப்படையும் குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வ கோயிலுக்கு செல்லும் நிலை உண்டாகும் குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும் சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் வீட்டை புதுப்பீர்கள் உல்லாசப் பயணம் செல்வீர்கள் சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும் பண வரவு அதிகரிக்கும் ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற மனக் குழப்பத்தை தவிர்க்கவும் புத்தி தடுமாற்றத்தை தவிர்க்கவும் கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் காரியங்கள் சிறப்படையும் தொழில் லாபம் அதிகரிக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் இடமாற்றம் உண்டாகும் அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வுடன் பணியிடமாற்றம் உண்டாகும் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் உடன் பிறப்புகளுடன் நல்லுறவு உண்டாகும் புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தகவல் வந்து சேரும் வீடு கட்டும் யோகம் உண்டாகும் குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும் பணக் கஷ்டம் நீங்கும் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் தகவல் தொடர்பு சிறப்படையும் வீட்டு உபயோகப் பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும் சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் ராகு நான்காமிடத்தில் இருக்கிறார் வீட்டை புதுப்பிக்கும் நிலை உண்டாகும் விவசாயம் சிறப்படையும் கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் காரியங்கள் சிறப்படையும் எல்லா செயல்களும் வெற்றியடையும்.

மிதுனம்

மிதுனம்

சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வருமானம் அதிகரிக்கும் அப்பாவின் உதவி கிடைக்கும் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் நெருப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை சகோதரர்களுடன் பிரச்சினைகள் உண்டாகும் உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் ஷேர்மார்க்கெட் முதலீடுகள் பண வரவை அதிகரிக்கும் தகவல் தொடர்பு சிறப்படையும் குரு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களால் பண வரவு அதிகரிக்கும் புதிதாக வீடு வாங்குவீர்கள் சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும் வெளியூருக்கு செல்வீர்கள் சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் ஆரோக்கியம் சிறப்படையும் தொழில் உத்தியோகம் மேன்மையடையும் ராகு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் நல்லுறவு உண்டாகும் இடம் மாறுதல் உண்டாகும் கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக வீடு கிடைக்கும் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.

கடகம்

கடகம்

சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் தலைமைப் பதவி கிடைக்கும் பேச்சில் அதிகாரம் தூள் பறக்கும் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை நிலத்தில் பங்கு கிடைக்கும் புத்தி கூர்மை அதிகரிக்கும் புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் சமயோசிதமாக செயல்படுவீர்கள் வாக்குவன்மை அதிகரிக்கும் குரு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும் இடமாற்றம் உண்டாகும் சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் பெண்களால் யோகம் உண்டாகும் ஆடம்பரப்பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும் சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள் உறவினர்களின் வீட்டு விஷேசங்களில் கலந்துகொள்வீர்கள் ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குதற்க்கமான பேச்சைத் தவிர்க்கவும் சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம் கேது உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கிறார் வாகனங்களை கையாளும்பொழுது கவனம் தேவை மனதில் மந்த நிலை உண்டாகும்.

சிம்மம்

சிம்மம்

உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும் வீண் அலைச்சல் உண்டாகும் செவ்வாய் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிய வாகனம் வாங்குவீர்கள் ரியல் எஸ்டேட் தொழில் சிறப்படையும் புதன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வியாபார முதலீடுகள் அதிகரிக்கும் புத்தி கூர்மை அதிகரிக்கும் குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் வங்கி சேமிப்பு அதிகரிக்கும் சுக்கிரன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் பெண்களினால் செலவுகள் அதிகரிக்கும் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும் சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் கனரக வாகனத்தை பழுது பார்க்கும் நிலை உண்டாகும் பழைய வீட்டை விலைக்கு வாங்குவீர்கள் ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனக் குழப்பமும் சோம்பலும் அதிகரிக்கும் கேது உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபார வாடிக்கையாளர்களின் உதவி கிடைக்கும் வெளியூர் பயணம் உண்டாகும்

கன்னி

கன்னி

சூரியன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களும் வெற்றியடையும் சம்பளம் அதிகரிக்கும் செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் வெளியூர் செல்வீர்கள் சகோதரர்களின் உதவி கிடைக்கும் உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும் ஷேர் மார்கெட் முதலீடுகள் தவிர்க்கவும் குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தானம் தர்மங்கள் செய்வீர்கள் குழந்தைகளுக்காக செலவுகள் அதிகரிக்கும் சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் வியாபாரத்தில் வாழ்க்கைத்துணையின் உதவி கிடைக்கும் ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும் சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் தகவல் தொடர்பு சிறப்படையும் இட மாற்றம் உண்டாகும் ராகு பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கிறார் தேவையற்ற செலவுகளையும் வீண் அலைச்சலையும் தவிர்க்கவும் கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் மன தைரியம் அதிகரிக்கும்

துலாம்

துலாம்

சூரியன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் செயல்களில் வெற்றி உண்டாகும் செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் திருமணமாகாத உடன் பிறப்புகளுக்கு திருமணம் நடைபெறும் வீடு மனை வாகனம் வகையில் பண வரவு அதிகரிக்கும் புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரம் சிறப்படையும் பூர்வீக சொத்திலிருந்து லாபம் கிடைக்கும் குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளை வெல்லும் திறன் உண்டாகும் பண வரவு அதிகரிக்கும் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் அழகு சாதன பொருட்கள் வியாபாரம் சிறப்படையும் எல்லா காரியங்களும் சிறப்படையும் சனி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் செல்வச் சேர்க்கை அதிகரிக்கும் வீண் பேச்சினை தவிர்க்கவும் ராகு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் லாபம் அதிகரிக்கும் கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் திருக்கோயில்களுக்கு பயணம் செல்வீர்கள்

விருச்சிகம்

விருச்சிகம்

சூரியன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் உதவி கிடைக்கும் சிவாலய வழிபாடு உயர்வைத் தரும் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும் நெருப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்கவும் புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும் தொழில் கூட்டாளிகளுடன் நல்லுறவு உண்டாகும் குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் செல்வச்சேர்க்கை அதிகரிக்கும் தொழிலில் மேன்மை நிலை உண்டாகும் சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் குலதெய்வ அருள் கிடைக்கும் சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும் இடமாற்றம் உண்டாகும் ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும் கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும்

தனுசு

தனுசு

சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் அரசு அதிகாரிகளின் விஷயத்தில் கவனம் தேவை அப்பாவிடம் சச்சரவைத் தவிர்க்கவும் செவ்வாய் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுக்காக செலவுகள் அதிகரிக்கும் இயந்திரங்களின் வகையில் முதலீடுகள் செய்வீர்கள் புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் வியாபாரத்தில் கடன் கொடுப்பதை தவிர்க்கவும் உயர்கல்வி நிலை சிறப்படையும் உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும் சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் துன்பம் அதிகரிக்கும் கடன் வாங்குவதை தவிர்க்கவும் சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வெளிநாட்டு தொழில் தொடர்புகள் சிறப்படையும் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும் ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் நீண்ட தூரம் பயணம் செல்லும் நிலை உண்டாகும் கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்களால் நன்மை உண்டாகும்

மகரம்

மகரம்

சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகம் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்வீர்கள் அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத் தொழில் சிறப்படையும் செவ்வாய் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தீயணைப்பு துறையில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு உண்டாகும் ரியல் எஸ்டேட் தொழில் லாபத்தைத் தரும் புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமன் உதவி கிடைக்கும் வியாபாரம் விருத்தியாகும் குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் பணம் கொடுக்கல் வாங்கலிலும் வரவு செலவுகளிலும் மிகவும் கவனமாக இருக்கவும் சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் பொன்னகைகளின் சேர்க்கை அதிகரிக்கும் கணவன் மனைவி அன்னியோன்னியம் சிறப்படையும் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் லாபம் அதிகரிக்கும் நினைப்பதெல்லாம் எளிதில் நிறைவேறும் ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் மனதில் குழப்பமும் பாரமும் அதிகரிக்கும் கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்ப சந்தோஷமும் பண வரவும் அதிகரிக்கும்.

கும்பம்

கும்பம்

சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும் அப்பாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை செவ்வாய் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் அதிகாரப் பதவி கிடைக்கும் செயல்களில் வேகம் அதிகரிக்கும் புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் ஷேர்மார்க்கெட் முதலீடுகளைத் தவிர்க்கவும் படிப்பில் கவனம் தேவை குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும் அனைவரின் உதவியும் கிடைக்கும் சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத்துணையுடன் சச்சரவைத் தவிர்க்கவும் வாகனங்களை பராமரிக்கும் நிலை உண்டாகும் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா காரியங்களும் வெற்றியடையும் தொழில் உத்தியோகம் சிறப்படையும் ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களுடனும் உறவினர்களுடனும் நல்லுறவு உண்டாகும் கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும் ஞான மார்க்கத்தில் மனம் ஈடுபாடு கொள்ளும்

மீனம்

மீனம்

சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் போட்டிகளில் வெற்றி உண்டாகும் பரம்பரை சொத்தில் பங்கு கிடைக்கும் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் நீண்ட தூரம் பயணம் செய்யும் நிலை உண்டாகும் திருமுருகன் திருக்கோயில் வழிபாடு சிறப்பைத் தரும் புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரம் சிறப்படையும் மேல்நிலை கல்வி நிலை சிறப்படையும் உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மன தைரியம் அதிகரிக்கும் உடல் ஆரோக்கியம் சிறப்படையும் சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும் சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாட்டுக்கு செல்லும் யோகம் உண்டாகும் பிதுரார்ஜித சொத்திலிருந்து பண வரவு அதிகரிக்கும் ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் ஆரோக்கியம் சிறப்படையும் மன தைரியம் அதிகரிக்கும் கேது உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும் திருக்கோயிலுக்கு பயணம் ஏற்படும்.

English summary
Rasi Palan for the Tamil month of Aadi from July 16,2016 to August 16,2016
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X