For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புண்ணியங்கள் நிறைந்த ஐப்பசி மாத ராசி பலன்கள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஜோதிடவியலில் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிக்கும் காலம் ஐப்பசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. ஐப்பசி மாதம் தமிழ் மாதங்களில்-சித்திரை தொடங்கி 7வது மாதமாகும். ஐப்பசி மாதம் துலாம் மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

சித்திரை மாதத்தில் சூரியன் உச்சமென்றும், ஐப்பசி மாதத்தில் நீசம் என்றும் சோதிட சாஸ்திரம் கூறுகின்றது. துலா ராசியில் சுக்கிரன் ஆட்சி. மேஷ ராசியில் நீசமடையும் சனிபகவானுக்குத் துலா ராசி உச்ச வீடு. இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனுடைய ஆதிக்கம் குறைந்தும் சுக்கிரன், சனி இவர்களுடைய ஆதிக்கம் நிறைந்தும் காணப்படும்.

இம்மாதம் முழுவதும் துலா ஸ்நான காலம் என்று அழைக்கப்படுகிறது. ஐப்பசியில் உலகில் உள்ள அனைத்து புண்ணீய தீர்த்தங்களும் காவேரி நதியில் கலப்பதாக ஐதீகம். எனவே ஐப்பசி மாதத்தில் ஒரு நாளாவது காவேரியில் நீராடி ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்து வழிபாடு செய்வது சகல பாபங்களும் நிவர்த்தியாகி புண்ணியங்கள் உண்டாகும்.

ஐப்பசி மாதம் சிறப்பு மிக்க பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. ஐப்பசி மாதத்தில் பௌர்ணமியில் சிவ ஆலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறும். ஐப்பசி மாதத்தில் தீபாவளிப் பண்டிகை, கேதாரகௌரி விரதம், கந்த சஷ்டி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. பல்வேறு சிறப்புகள் நிறைந்த ஐப்பசி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்திற்கான 12 ராசிகாரர்களுக்கு உரிய பலன்களை அறிந்து கொள்வோம்.

கிரகங்களின் ராசி மாற்றம்

கிரகங்களின் ராசி மாற்றம்

சூரியன் - ராசி மாற்றம் இல்லை
செவ்வாய் - 16ம் தேதி மகரம் ராசிக்கு மாறுகிறார்.
புதன் - 05ம் தேதி துலாம் ராசிக்கு மாறுகிறார்.
23ம் தேதி விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்.
குரு - ராசி மாற்றம் இல்லை
சுக்கிரன் - 22ம் தேதி தனுசு ராசிக்கு மாறுகிறார்.
சனி - ராசி மாற்றம் இல்லை
ராகு - ராசி மாற்றம் இல்லை
கேது - ராசி மாற்றம் இல்லை

மேஷம்

மேஷம்

சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகம் காரணமாக அடிக்கடி பயணம் செய்யும் நிலை உண்டாகும் அதிகாரிகளுடன் நல்லுறவு நிலவும் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியடையும் கடன் கொடுப்பதை தவிர்க்கவும் குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பொருளாதார விஷயத்தில் கவனம் தேவை விலை உயர்ந்த பொருட்களை இரவல் தர வேண்டாம் சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை குல தெய்வ வழிபாடு யோகத்தை கொடுக்கும் சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் திடீர் பண வரவு உண்டாகும் உடல் உழைப்பு அதிகரிக்கும் ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள் கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் முயற்சிகள் எல்லாம் வெற்றியடையும்.

ரிஷபம்

ரிஷபம்

சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் உயர் அதிகாரிகளுடன் சச்சரவைத் தவிர்க்கவும் தொழில் உத்தியோகத்தில் எச்சரிக்கையாக இருக்கவும் செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் வீடு நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் கவனம் தேவை பரம்பரை சொத்திலிருந்து பங்கு கிடைக்கும் புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகலாம் தரகு கமிஷன் வியாபாரம் சிறப்படையும் குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் செல்வச் சேர்க்கை அதிகரிக்கும் குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் யோகம் உண்டாகும் வாகனங்களை கையாளும் பொழுது கவனமாக இருக்கவும் சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் கூட்டாளிகளுடன் நல்லுறவு நீடிக்கும் நண்பர்களின் உதவி கிடைக்கும் ராகு நான்காமிடத்தில் இருக்கிறார் பழைய வீடு வாங்கும் யோகம் உண்டாகும் கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் முயற்சிகள் வெற்றியடையும்

மிதுனம்

மிதுனம்

சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் அரசு வேலை சம்பந்தமான போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும் அரசு முறை பயணம் செல்லும் நிலை உண்டாகும். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுடன் நல்லுறவு உண்டாகும் வாகனங்களை கையாளும்பொழுது கவனமாக செயல்படவும் உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் உயர்கல்வி நிலை சிறப்படையும் தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகலாம் குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் சொத்துகளை வாங்குவீர்கள் வாகன யோகம் உண்டாகும் சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் விலை உயர்ந்த பொருட்களை இரவல் தர வேண்டாம் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும் சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் ராகு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்களின் உதவி கிடைக்கும் கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும்.

கடகம்

கடகம்

சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் அரசாங்க வாகன யோகம் உண்டாகும் அரசு ஒதுக்கீட்டில் வீடு கிடைக்கும் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் நெருப்பினால் காயம் உண்டாகலாம் ரியல் எஸ்டேட் வியாபாரம் சிறப்படையும் புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும் ஷேர்மார்க்கெட் தொழில் சிறப்படையும் குரு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அண்டை அயலாருடன் நல்லுறவு உண்டாகும் புத்தி கூர்மை அதிகரிக்கும் சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும் வாழ்க்கைத்துணையுடன் சச்சரவு உண்டாகும் சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும் பூர்வீக சொத்திலிருந்து பண வரவு உண்டாகும் ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சில் கடுமையை குறைத்துக் கொள்ளவும் கேது உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கிறார் திடீர் யோகம் உண்டாகும்.

சிம்மம்

சிம்மம்

உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அரசு ஊழியர்களுக்கு பணியிட மாற்றம் உண்டாகும் பக்கத்து ஊருக்கு பயணம் செய்யும் நிலை உண்டாகும் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்துக்களிலிருந்து பங்கு கிடைக்கும் சகோதரர்களுடன் சச்சரவு உண்டாகும் புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாட்கள் எதிர்பார்த்திருந்த தகவல் வந்து சேரும் படிப்பில் கவனம் அதிகரிக்கும் குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் செல்வச்சேர்க்கை உண்டாகும் சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கல் வாங்குவீர்கள் உல்லாசப் பயணம் செல்வீர்கள் சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் விவசாயம் செழிப்படையும் புது வாகனம் வாகனம் வாங்குவீர்கள் ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனக் குழப்பம் உண்டாகும் கேது உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களுடன் நல்லுறவு உண்டாகும்.

கன்னி

கன்னி

சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும் பேச்சில் அதிகாரம் அதிகரிக்கும் செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும் முருகன் வழிபாடு நன்மையை உண்டாக்கும் உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் பேச்சில் நகைச்சுவை அதிகரிக்கும் நல்ல சுப மங்கல தகவல் வந்து சேரும் குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும் மனதில் நிம்மதி பிறக்கும் சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளுடன் நல்லுறவு உண்டாகும் புதிதாக வாகனம் வாங்குவீர்கள் சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வெளியூர் பயணம் செல்வீர்கள் காதில் நோய் உண்டாகலாம் கவனம் தேவை ராகு பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும் கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதில் உறுதி உண்டாகும்.

துலாம்

துலாம்

சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் பதவி உயர்வு உண்டாகும் தலையில் நோய் உண்டாகலாம் கவனமாக இருக்கவும் செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் இட மாற்றம் உண்டாகும் புதிதாக வீடு வாங்கும் நிலை உண்டாகும் புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் சமயோசிதமாக செயல்படுவீர்கள் பேச்சில் நகைச்சுவை அதிகரிக்கும் குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள் வங்கிகளில் முதலீடுகள் அதிகரிக்கும் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும் அடிக்கடி வெளியூர் செல்வீர்கள் சனி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்ப வருமானம் அதிகரிக்கும் பேச்சில் கடுமையை குறைத்துக் கொள்ளவும் ராகு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் காரியங்கள் வெற்றியடையும் கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

சூரியன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகத்தில் பணியிடமாற்றம் உண்டாகும் அரசாங்க நிறுவனங்களில் முதலீடுகள் அதிகரிக்கும் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வருமானம் அதிகரிக்கும் சகோதரர்களால் நன்மை உண்டாகும் புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும் தாய் மாமனுடன் நல்லுறவு உண்டாகும் குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும் செல்வச்சேர்க்கை அதிகரிக்கும் சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடலில் அசதி அதிகரிக்கும் தொழில் நிலை சிறப்படையும் ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் முயற்சிகள் எல்லாம் வெற்றியடையும் கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புது வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.

தனுசு

தனுசு

சூரியன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நினைப்பவை எல்லாம் நிறைவேறும் முயற்சிகள் வெற்றியடையும் செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் காரியங்கள் சிறப்படையும் பண வருமானம் அதிகரிக்கும் புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரம் சிறப்படையும் ஊக வணிக முதலீடுகளில் கவனம் தேவை உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் சொந்தமாக செய்யும் தொழில் சிறப்படையும் செயல்கள் சிறப்படையும் சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும் கணவன் மனைவி அன்னியோன்னியம் சிறப்படையும் சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும் வீண் அலைச்சல் உண்டாகும் ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக நிலத்திலிருந்து பண வரவு உண்டாகும் கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் இட மாற்றம் உண்டாகும்.

மகரம்

மகரம்

சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும் பரம்பரை தொழில் சிறப்படையும் செவ்வாய் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழிற்சாலைக்கு புதிய கருவிகளை வாங்குவீர்கள் புதிதாக நிலம் வாங்கும் யோகம் உண்டாகும் புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் கல்வியில் மேன்மைநிலை உண்டாகும் ஷேர்மார்கெட் முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும் குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் திருக்கோயில்களுக்கு பயணம் செல்வீர்கள் தான தர்மங்கள் செய்வீர்கள் சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் அதிர்ஷ்டம் உண்டாகும் ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையும் ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற மனக் குழப்பத்தை தவிர்க்கவும் கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சச்சரவைத் தவிர்க்கவும்.

கும்பம்

கும்பம்

சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும் அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் அனுகூலமாக இருக்கும் செவ்வாய் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் முயற்சிகள் வெற்றியடையும் புதிதாக வீடுகட்டும் பணி துவங்கும் புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் கல்வி துறை சார்ந்தவர்களுக்கு தொழில் சிறப்படையும் குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் திடீர் யோகம் உண்டாகும் எதிர்பாராமல் பணவரவு உண்டாகும் சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகம் மேன்மையடையும் லாபம் அதிகரிக்கும் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் உழைப்பு அதிகரிக்கும் தொழிலிருந்த தடைகள் நீங்கும் ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் கூட்டாளிகளுடன் நல்லுறவு உண்டாகும் வியாபாரம் விருத்தியாகும் கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும் மனநிலை தெளிவாகும்.

மீனம்

மீனம்

சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் செய்யும் தொழிலில் கவனம் தேவை தந்தை வர்க்கத்தாருடன் சச்சரவு வேண்டாம் செவ்வாய் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் காரியங்கள் சிறப்படையும் தொழில் லாபம் அதிகரிக்கும் புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் கமிஷன் தொழிலில் மேன்மை நிலை உண்டாகும் தாய் மாமனுடன் மனஸ்தாபம் உண்டாகலாம் உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும் குழந்தைகளால் சந்தோஷம் உண்டாகும் சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் தொழில் வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும் சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மன தைரியம் அதிகரிக்கும் கேது உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் நீண்ட தூரம் பயணம் செய்யும் நிலை உண்டாகும்.

English summary
The Tamil month of Aippasi falls between 17.10.2016 and 16.11.2016. Known as Thula masam the first day is known as Aippasi Vishu. Here Aippasi Month rasi palan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X