For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உங்க வீட்டு குட்டீஸ் கல்வியில் சிறக்க, ஞாபக மறதி நீங்க பரிகாரங்கள் மற்றும் வழிபாடுகள்

புதன் கல்விக்கு காரகன். அறிவு, ஆற்றல், வித்தை, கல்வி ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாக விளங்குபவர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை: புதன் பகவான். சவும்யன் என்று அழைக்கப்படும் இவர் அறிவு, ஆற்றல், வித்தை, கல்வி ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாக விளங்குபவர். அதனால் வித்தைக்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார்.

அனேகமாக தற்போது எல்லா பள்ளிகளும் கோடை விடுமுறை முடிந்து எல்லா பள்ளிகளும் திறந்தாகிவிட்டது. எங்கு பார்த்தாலும் கூட்டம் கூட்டமாக மாணவர்கள் பட்டாளம்தான்.

Budha Graha: Remedies to Mercury good Memory power

அனைவரது வீடுகளிலும்

1. எங்க குழந்தைக்கு பள்ளி திறந்தாகிவிட்டது. உங்கள் குழந்தைக்கு பள்ளி திறந்தாகிவிட்டதா?

2. புத்தகங்கள், நோட்டுகள், பேனா, பெண்சில், ரப்பர் என அனைத்தும் வாங்கியாச்சா?

3. ஸ்கூல் வேன் வருமா? ட்ரைவருக்கு சொல்லியாச்சா?

4. வகுப்பு, பாடம், படிப்பது, எழுதுவது, ப்ராஜக்ட்ஸ் விடுமுறையில் அளித்த வீட்டுபாடங்கள் என எங்கு பார்த்தாலும் புதனின் காரகத்துவங்களாகவே பேசப்படுகின்றன!

இதனால் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் திடீரென ஒரு வேலை பளு அதிகமாகி உடலாலும் உள்ளத்தாலும் சோர்வடையும் நிலைக்கு தள்ளபடுகின்றனர். உடல் சோர்வடைந்து விட்டால் ஓய்வெடுக்கலாம். ஆனால் மூளை சோர்வடைந்துவிட்டால் என்ன செய்வது?

அதீத பயம் வேண்டாம்

உணர்ச்சிவசப்படுதல், சந்தேகம், கோபம், அழுத்தம், பிடிவாதம், மூர்க்கத்தனம், பொறாமை, சுயநலம், சமுதாயத்தில் இருந்து விலகி நிற்பது போன்ற மாற்றங்களை சந்திக்க நேரிடும். அதீத பயம் மற்றும் கவலையினால் சித்தப் பிரமை உண்டாகலாம். இது மெதுவாக மாயத்தோற்றங்களை உண்டாக்கும்.

டென்ஷனுக்கு ஜோதிட காரனங்கள்:

நமக்கு எப்போதும் நற்சிந்தனை தைரியமாகவும் கவலைகள் ஏதும் இல்லாமல் இருக்க லக்னம் லக்னதிபதி சந்திரன் ஆகியவர்களின் நிலை முக்கியமானதாகும். என்றாலும் ஒருவருக்கு புத்தி ஒழுங்காக செயல்பட புதன் ஜாதகத்தில் பலமாக இருக்க வேண்டும்.

புதனும் புத்தியும்

ஜோதிடத்தில் புதனுக்கும் புத்திக்கும் தொடர்பு உள்ளது. புத பகவான் அறிவு, ஆற்றல், வித்தைக்கு காரண கர்த்தாவாக விளங்குபவர். அவர் 'வித்யாகாரகன்' என அழைக்கப்படுகிறார். புத்திநாதா என்றும், தனப்ரதன் என்றும் சிறப்பிக்கப்படுகிறார். எண்ணங்களின் சேர்க்கையே மனம். மனத்தை ஆள்பவன் சந்திரன். அந்த சந்திரனின் புத்திரன்தான் புதன். எனவேதான் மனத்தின் எண்ண ஓட்டத்துக்கும் அறிவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

சிறந்த கல்விமான்

குழந்தைகள் ஜாதகத்தில் புதன் பலமாக 6/8/12 மற்றும் அசுபர்கள் தொடர்பு இல்லாமல் இருந்தால் நல்ல புத்திசாலிகளாக விளங்கிடுவார்கள். மிதுனம் அல்லது கன்னியை லக்னமாக கொண்டு ஆட்சி உச்சம் பெற்றுவிட்டாலும் மிகச் சிறந்த கல்விமான்களாக விளங்குவர்.

உடல்ரீதியான கோளாறு

ஜாதகத்தில் புதன் பலமாக இருப்பது பல நலன்களை சேர்க்கும். புதன் பலவீனமாக இருக்கிற பட்சத்தில் உடல்ரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படலாம். புதன் பலவீனமாக இருந்தாலும், நீச்சம் மற்றும் 6, 8, 12 ம் இட கிரகங்களுடன் சேர்ந்தாலும் ஒற்றைத் தலைவலி, கை கால் வலிப்பு, நரம்பு தளர்ச்சி, பய உணர்வு, சஞ்சலம், சபலம், புத்தி சுவாதீனம் இல்லாமை, கழுத்து நரம்பு வலி, ஆண்மைக் குறைவு ஆகிய பிரச்னைகள் ஏற்படலாம்.

கணக்கில் புலி

ஜாதகத்தில் புதன் பலம் இருந்தால்தான் கணிதத்தில் தேர்ச்சியும், நிபுணத்துவமும் ஏற்படும். சகல கணிதங்களுக்கும் மூலகர்த்தா புதன் ஆவர். இதை வைத்தே பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்வார்கள். அதாவது, புதனின் அருளாசி இருந்தால் பொன், பொருள் வாங்கும் யோகம் உண்டாகும் என்பது பொருள்.

பத்திர யோகம்

கல்விகாரகன், அறிவுகாரகன் எனப் போற்றப்படும் புதன் பகவான் ஒருவர் ஜாதகத்தில் ஆட்சியோ, உச்சிமோ பெற்று ஜென்ம லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானங்களில் அமைந்திருந்தால் பத்திர யோகம் உண்டாகிறது. பத்திர யோகம் அமைந்துள்ள ஜாதகருக்கு நல்ல அறிவாற்றல், சிறப்பான ஞாபக சக்தி, புக்தி கூர்மை யாவும் அமையும்
புதன பகவான் பலம் பெற்று பத்திர யோகம் உண்டாகி இருந்தால் நல்ல உடல் ஆரோக்கியமும், ரத்த ஓட்டமும் உண்டாகி உடல் நிலை சிறப்பாக இருக்கும்.

கல்வியில் சிறக்க பரிகாரங்கள் மற்றும் வழிபாடுகள்

• புதபகவானை வணங்குவதன் மூலம் நோய்களில் இருந்து விடுபடலாம். கும்பகோணத்தில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் இருக்கும் திருவெண்காடு புதன் ஸ்தலமாகும். தனி சன்னதியில் புத பகவான் அருள்புரிகிறார். மற்றும் மதுரையில் மீனாட்சி அம்மன் புதன் அம்சமாகவே இருக்கிறார்.

• புதனின் அதிதேவதை விஷ்னு பகவானாவார். அசுரர்களிடமிருந்து வேதத்தை காக்க மகாவிஷ்னு எடுத்த அவதாரங்களில் ஸ்ரீ ஹயக்ரீவர் அவதாரம் குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ லக்ஷமி ஹயக்ரிவர் கல்விக்கதிபதியான சரஸ்வதியன் குரு என புரானங்கள் போற்றுகின்றன. ஸ்ரீ லக்ஷமி ஹயக்ரிவ மூர்த்தியை செங்கல்பட்டுக்கருகே இருக்கும் செட்டிபுண்ணியம், கடலூர் திருவஹிந்திபுரம் போன்ற ஸ்தலங்களில் வணங்குவது கல்வியறிவையும் பெருக்குவதோடு புத்திக்கூர்மையையும் அளிக்கும். மேலும் கல்வித்தடை நீங்கும்.

•புதனுக்குகந்த தானியமான பச்சை பயறு சுண்டல், பயத்தலாடு போன்றவை செய்து நவக்கிரக புதனுக்கு அல்லது ஸ்ரீலக்ஷமி ஹயக்ரீவ மூர்த்திக்கு நிவேதனம் செய்து குழந்தைகளையும் சாப்பிட செய்து அவர்களையே பல குழந்தைகளுக்கு வினியோகம் செய்யவிடுவது குழந்தைகளின் கல்வி தடை நீங்கும் சிறந்த பரிகாரமாகும்.

• "ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்" எனும் பழமொழி எதற்க்கு பொருந்துமோ தெரியாது. ஆனால் கல்விக்கு பொருந்தும். கல்வி கற்க வசதியற்ற குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றால் நம் குழந்தை நன்றாக படிக்கும் என்பது உறுதி.

English summary
Budha of Mercury signifies education, Memory power, nervous system, sense of humour, communication skills, career, business, sharp mind, grasping power, good wiriting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X