For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகத்துவம் தரும் மாசி மாத ராசி பலன்கள்

Google Oneindia Tamil News

ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்ரமணியன்

ஆண்டின் பதினோராவது மாதம் மாசி ஆகும். சூரியன் கும்பராசியில் சஞ்சாரிக்கிறார். இது கும்பமாதம் என்றும் போற்றப்படுகிறது. இம்மாதம் முழுவதும் புனித நீராட ஏற்ற காலமாகும்.

இந்தியாவில் உள்ள அனைத்து புண்ணியத் தீர்த்தங்களிலும், சமுத்திரக் கரையிலும், புனித நதிகளிலும் மாசி மாதத்தில் அமிர்தம் நிறைந்திருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இதன் காரணமாகவே இந்த மாதத்தில் நீர்நிலைகளில் புனித நீராடுவதை இந்துக்கள் பழக்கமாகக் கொண்டுள்ளனர். வட இந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். கும்ப மாதத்தில் நடைபெறும் விழா என்பதால் இது கும்பமேளா. பொதுவாக அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்வது வழக்கம். ஆனால், கிரஹண காலம் தவிர்த்து, பௌர்ணமி நாளில் தர்ப்பணம் செய்வது என்பது மாசி மாதத்தில் மட்டுமே.

masi month Rasi palan

இம் மாதத்தை மாங்கல்ய மாதம் என்றும் கூறுவர். சிவத்தோடு சக்தி இணைந்து முழுமை பெறுவதால் தன் கணவனின் நலனுக்காக பெண்கள் இந்த மாசி மாதத்தில் தாலிக் கயிற்றினை புதிதாக மாற்றிக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

மாசி மாத அமாவாசை நாளில் மயானக் கொல்லை என்ற திருவிழா நடைபெறுகிறது. அங்காள பரமேஸ்வரி அம்மன், மயானத்திற்குச் சென்று சூறையாடுவதாக ஐதீகம். மாசிமாத அமாவாசை நாளில் கும்ப ராசியில் சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்து சஞ்சரிப்பர். கதி இல்லாமல் மயானத்தில் பேயாய் அலைவோருக்கு அம்பாள் மோட்சகதி தரும் வகையில் இந்த மயானக்கொல்லை விழா கொண்டாடப்படுகிறது.

மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தது மாசி மகத்திருநாளில் தான். மாசி மாதத்து சங்கடஹர சதுர்த்தி மிக விசேஷம். அந் நாளில் விரதம் இருப்பவர்கள் எல்லாவித தோஷங்களிலிருந்தும் விடுபடுவர். மாசி மாதத்தன்று தான் பார்வதிதேவி காளிந்தி நதியில் ஒரு தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றினாள். சிவபெருமான் திருவிளையாடல்கள் பல புரிந்தது மாசிமாதத்தில் தான். மாசி மாதத்தில் மந்திர உபதேசம் பெறுவது சிறந்ததாகத் கருதப்படுகிறது.

இத்தகைய சிறப்புகள் நிறைந்த மாசி மாதத்தின் ராசி பலன்களை தெரிந்து கொள்வோம்.

கிரகங்களின் ராசி மாற்றம்

சூரியன் - ராசி மாற்றம் இல்லை
செவ்வாய் - 08ம் தேதி விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்.
புதன் - 18ம் தேதி கும்பம் ராசிக்கு மாறுகிறார்.
குரு - ராசி மாற்றம் இல்லை
சுக்கிரன் - 24ம் தேதி கும்பம் ராசிக்கு மாறுகிறார்.
சனி - ராசி மாற்றம் இல்லை
ராகு - ராசி மாற்றம் இல்லை
கேது - ராசி மாற்றம் இல்லை

மேஷம்:

சூரியன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் நிலை சிறப்படையும் பதவி உயர்வு உண்டாகும் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழில் சிறப்படையும் சகோதரர்களுடன் சச்சரவை தவிர்க்கவும். புதன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் உயர்கல்வியில் மேன்மை உண்டாகும் தரகு கமிஷன் வியாபாரம் சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும் பணம் கையிருப்பும் அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் அதிர்ஷ்டம் உண்டாகும் தொழிலில் வாழ்க்கை துணையின் உதவி கிடைக்கும். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் உழைப்பு அதிகரிக்கும் வாகன போக்குவரத்தில் கவனம் தேவை. ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள் மன சஞ்சலத்தை தவிர்க்கவும். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நினைப்பதெல்லாம் நிறைவேறு மூத்த சகோதரியின் உதவி கிடைக்கும்

ரிஷபம்:

சூரியன் உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் இருக்கிறார் அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளை வெற்றி கொள்வீர்கள் உடன் பிறப்புகளின் உதவி கிடைக்கும். புதன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் சச்சரவு வேண்டாம் தொழில் நிமித்தம் வெளிநாடு செல்லும் நிலை உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அசையாத சொத்துக்கள் வாங்குவீர்கள் அம்மாவின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத் துணையுடன் வீண் விவாதத்தை தவிர்க்கவும் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியாகும் நண்பர்களின் உதவி கிடைக்கும் ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் பழைய வீடு வாங்குவீர்கள் வாகனங்களை பராமரிப்பு செய்வீர்கள். கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் செய்தொழில் சிறப்படையும் எடுக்கும் காரியங்கள் எல்லாம் வெற்றியடையும்.

மிதுனம்:

சூரியன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் சொத்திலிருந்து பங்கு கிடைக்கும் உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் விளையாட்டு போட்டிகளில் வெற்றி கிடைக்கும் சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும் தாய் மாமனுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்களின் உதவி கிடைக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும் எதிர்பாராத திடீர் பண வரவு உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் நலம் சீரடையும் உழைப்பு அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வெளியூர் பயணம் உண்டாகும் உடன் பிறப்புகளின் உதவி கிடைக்கும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும் அப்பாவினால் நன்மை உண்டாகும்.

கடகம்:

சூரியன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் அரசு ஊழியர்கள் உத்தியோகத்தில் கவனம் தேவை அப்பாவுடன் சச்சரவு வேண்டாம் செவ்வாய் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வீடு நிலம் போன்றவற்றில் முதலீடு செய்வீர்கள் இயந்திரத் தொழில் சிறப்படையும். புதன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகளைத் தவிர்க்கவும் படிப்பில் கவனம் தேவை. குரு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் வருமானம் அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத் துணையுடன் சச்சரவு வேண்டாம் நீண்ட தூரம் பயணம் செல்வீர்கள். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற மனக் குழப்பத்தை தவிர்க்கவும் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் விவாதத்தை தவிர்க்கவும் செல்வச் சேமிப்பு அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கிறார் எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறும் போக்குவரத்தில் கவனம் தேவை.

சிம்மம்:

உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபரத்தில் விருத்தி உண்டாகும் அப்பாவின் உதவி கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களின் உதவி கிடைக்கும் வீடு மாறும் நிலை உண்டாகும். புதன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைத் தரும் தாய் மாமனுடன் கருத்து வேறுபாடு தவிர்க்கவும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும் அனைவருடனும் நல்லுறவு உண்டாகும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள் பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை. சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் விவசாயத் தொழில் விருத்தியடையும் பழைய வாகனம் ஒன்றை வாங்குவீர்கள். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களின் உதவி கிடைக்கும்.

கன்னி:

சூரியன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாட்டை தவிர்க்கவும் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழில் மூலம் வருமானம் அதிகரிக்கும் சகோதரர்களின் உதவி கிடைக்கும். உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் கல்வியில் மேன்மை உண்டாகும் தரகு கமிஷன் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளுக்காக செலவுகள் செய்வீர்கள் திருத்தல யாத்திரை செல்வீர்கள். சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள் பொழுது போக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வெளியூர் செல்வீர்கள் உடன் பிறப்புகளால் நன்மை உண்டாகும். ராகு பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கிறார் வெளியூர் செல்வீர்கள் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும் கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் ஆரோக்கியம் சிறப்படையும்.

துலாம்:

சூரியன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் சொத்தில் பங்கு கிடைக்கும் குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் கோபத்தை தவிர்க்கவும் சகோதரர்களால் வருமானம் அதிகரிக்கும் புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தகவல் வந்து சேரும் புதிதாக வீடு வாங்குவீர்கள். குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நினைப்பதெல்லாம் நடக்கும் தொழில் வருமானம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் வீடு மாற்றம் உண்டாகும் வாகனம் வாங்குவீர்கள். சனி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வருமானம் குடும்பத்தில் சச்சரவை தவிர்க்கவும். ராகு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் லாபம் அதிகரிக்கும் மூத்த சகோதரத்தின் உதவி கிடைக்கும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதில் தைரியம் அதிகரிக்கும் உடல் ஆரோக்கியம் சிறப்படையும்.

விருச்சிகம்:

சூரியன் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அரசு ஒதுக்கீட்டில் வீடு கிடைக்கும் வாகன யோகம் உண்டாகும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் முதலீடுகள் அதிகரிக்கும் கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளவும். புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வியாபார வருமானம் அதிகரிக்கும் வியாபாரத்திற்க்காக வெளியூர் செல்வீர்கள். குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் நிலை சிறப்படையும் உறவினர்களின் உதவி கிடைக்கும். சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் விருந்தினர்கள் வீட்டுக்கு வருவார்கள். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உழைப்பு அதிகரிக்கும் மனதில் மந்த நிலை உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் காரியங்களில் வெற்றி உண்டாகும் தொழில் விருத்தியடையும் கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வீடு வாசல் வாங்கும் யோகம் உண்டாகும் அம்மாவின் ஆசீர்வாதம் கிடைக்கும்.

தனுசு:

சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் உடற்பயிற்சியில் அக்கறை அதிகரிக்கும் அரசு ஊழியர்களுக்கு இடமாற்றம் உண்டாகும். செவ்வாய் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களால் நன்மை உண்டாகும் நெருப்பு சம்பந்தப்பட்ட தொழிலில் முதலீடுகள் அதிகரிக்கும். புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் சமயோசிதமாக காரியத்தை சாதிப்பீர்கள் பேச்சில் வசீகரம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீமத்தில் நாட்டம் அதிகரிக்கும் திருக்கோயில் வழிபாடு நன்மையைத் தரும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் முக வசீகரம் அதிகரிக்கும் விலையுயர்ந்த பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும். வெளியூர் செல்வீர்கள் ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளால் நன்மை உண்டாகும்.

மகரம்:

சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் அரசு ஊழியர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை செவ்வாய் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் மின்சாரம் சம்பந்தப்பட்ட தொழில் சிறப்படையும் மூத்த சகோதரர்களால் நன்மை உண்டாகும். புதன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுக்காக செலவுகள் அதிகரிக்கும் சமயோசித புத்தியுடன் செயல் படுவீர்கள் குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் செல்வச் சேர்க்கையில் சிக்கல் உண்டாகும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள் முக வசீகரம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எண்ணியதெல்லாம் எளிதில் நிறைவேறும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் திடீர் யோகம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சில் கவனம் தேவை.

கும்பம்:

சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் தொழில் நிலை சிறப்படையும் அதிகார பதவி கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக சொத்தில் பங்கு கிடைக்கும் பதவி உயர்வு உண்டாகும். புதன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் சிறப்படையும் தொழிலில் முதலீடுகள் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும் கௌரவம் உயரும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் விலையுயர்ந்த ஆடை ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் சூடு பிடிக்கும் எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் அனைவருடனும் நல்லுறவு உண்டாகும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் தெய்வ பக்தி அதிகரிக்கும்

மீனம்:

சூரியன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற வீண் செலவுகளை தவிர்க்கவும். செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் உடன்பிறப்புகளுடன்களுடன் சச்சரவைத் தவிர்க்கவும் புதிதாக வீடு வாங்குவீர்கள். புதன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் கல்வியில் மேன்மை உண்டாகும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதில் தைரியம் அதிகரிக்கும் எதிரிகளை வெல்வீர்கள். சுக்கிரன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் அழகு சாதனப் பொருட்கள் வியாபாரம் சிறப்படையும் பெண்களால் நன்மை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் ஆரோக்கியம் சிறப்படையும் கேது பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகளில் கவனம் தேவை.

English summary
Rasi Palan Tamil Month of Masi Month.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X