For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புத்துணர்ச்சிதரும் நவராத்திரி - பூக்களும், நைவேத்தியங்களும்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

நவராத்திரி பூஜைக்காலம் இன்று முதல் தொடங்கியுள்ளது. 'நவ' எனில் 'புதுமையான' என்றும் பொருள் உண்டு. ஆக, இந்த 9 நாட்களில் நாம் கடைப்பிடிக்கும் பூஜைகளினால் நமக்குப் புதுமையான புத்துணர்ச்சி கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தினமும் ஒரு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் அன்னை, தினம் தினம் விதமான சுண்டல்கள் என உடலுக்கும் மனதிற்கும் நிஜமாகவே புத்துணர்ச்சி கிடைக்கும்.

அன்னை ஆதிபராசக்தியை நவராத்திரி பண்டிகை தினங்களில் மூன்று சக்திகளாக 9 நாட்களும் வணங்குகிறோம். தேவியரை எப்படி வணங்கவேண்டும் என்ன நைவேத்தியம் செய்ய வேண்டும்? அதனால் என்ன பலன் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்வோம்.

Navarathri - nine days of Rejuvenation

முதல்நாள்

வடிவம்: மகேஸ்வரி
திதி : பிரதமை
கோலம் : அரிசி மாவால் பொட்டுக் கோலம் போட வேண்டும்.
பூக்கள் : மல்லிகை, சிவப்பு நிற அரளி, வில்வ பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
நைவேத்தியம் : வெண்பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மொச்சை, சுண்டல், பருப்பு வடை.
பலன் : வறுமை நீங்கும், வாழ்நாள் பெருகும்.

இரண்டாவது நாள்

வடிவம் : ராஜராஜேஸ்வரி
திதி : துவிதியை
பூக்கள் : முல்லை, துளசி, மஞ்சள்நிற கொன்றை, சாமந்தி, நீல சம்பங்கி பூக்களால் பூஜிக்க வேண்டும்.
நைவேத்தியம் : புளி யோதரை, எள் பாயாசம், தயிர்வடை, வேர்க்கடலை சுண்டல், எள் சாதம்.
கோலம் : மாவினால் கோலம் போட வேண்டும்.
பலன் : நோய்கள் நீங்கும், உடல் ஆரோக்கியம் பெருகும்.

மூன்றாவது நாள்

வடிவம் : வாராகி
திதி : திருதியை
கோலம் : மலர் கோலம் போட வேண்டும்.
பூக்கள் : செண்பக மொட்டு, குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
நைவேத்தியம் : கோதுமை சர்க்கரை பொங்கல், காராமணி சுண்டல்.
பலன் : தனதான்யம் பெருகும் வாழ்வு சிறப்பாக அமையும்.

நான்காம் நாள்

வடிவம் : மகாலட்சுமி
திதி : சதுர்த்தி
கோலம் : அட்சதை கொண்டு படிக்கட்டு போல கோலமிட வேண்டும்.
பூக்கள் : செந்தாமரை, ரோஜா பூக்களால் அர்ச்சிக்க வேண்டும்.
நைவேத்தியம் : தயிர் சாதம், அவல் கேசரி, பால் பாயாசம், கற்கண்டு பொங்கல், கதம்ப சாதம், உளுந்துவடை, பட்டாணி சுண்டல்.
மாலை : கஸ்தூரி மஞ்சள், முத்து போன்றவற்றால் மாலை செய்து போடலாம்.
பலன் : கடன் தொல்லை தீரும்.

ஐந்தாம் நாள்

வடிவம் : மோகினி
திதி : பஞ்சமி
கோலம் : கடலை மாவால் பறவை கோலம் போட வேண்டும். வாசனை தைலத்தால் அலங்கரிக்க வேண்டும்.
பூக்கள் : கதம்பம், மனோரஞ்சிதம் பூக்களால் பூஜிக்க வேண்டும்.
நைவேத்தியம் : சர்க்கரை பொங்கல், கடலை பருப்பு வடை, பாயாசம், தயிர் சாதம், பால் சாதம், பூம்பருப்பு சுண்டல்.
பலன் : நாம் விரும்பும் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.

ஆறாம் நாள்

வடிவம் : சண்டிகாதேவி
திதி : சஷ்டி.
கோலம் : கடலை மாவினால் தேவி நாமதத்தை கோலமிட வேண்டும்.
பூக்கள் : பாரிஜாதம், விபூதிப் பச்சை, செம்பருத்தி, சம்பங்கி, கொங்கம்.
நைவேத்தியம் : தேங்காய் சாதம், தோங்காய் பால்பாயாசம், ஆரஞ்சு பழம், மாதூளை, பச்சைப்பயறு சுண்டல், கதம்ப சாதம்.
பலன் : வழக்குகளில் வெற்றி உண்டாகும். கவலைகள் நீங்கி பொருட்கள் சேரும்.

ஏழாம் நாள்

வடிவம் : சாம்பவித் துர்க்கை
திதி : சப்தமி.
கோலம் : நறுமண மலர்களால் கோலமிட வேண்டும்.
பூக்கள் : தாழம்பூ, தும்பை, மல்லிகை, முல்லை.
நைவேத்தியம் : எலுமிச்சம் பழசாதம், பழ வகைகள், வெண்பொங்கல், கொண்டக்கடலை சுண்டல், பாதாம் முந்திரி பாயாசம், புட்டு.
பலன் : வேண்டும் வரம் அனைத்தும் கிடைக்கும்.

எட்டாம் நாள்

வடிவம் : நரசிம்ம தாரினி
திதி : அஷ்டமி
கோலம் : பத்ம கோலம்
பூக்கள் : மருதோன்றி, சம்பங்கி பூக்கள், வெண்தாமரை, குருவாட்சி.
நைவேத்தியம் : பால்சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை சுண்டல்.
பலன் : நமக்கு இஷ்ட சித்தி உண்டாகும்.

ஒன்பதாம் நாள்

வடிவம் : பரமேஸ்வரி, சுபத்ராதேவி
திதி : நவமி
கோலம் : வாசனைப் பொடிகளால் ஆயுதம் போன்ற கோலம் போட வேண்டும்.
பூக்கள் : தாமரை, மரிக்கொழுந்து, துளசி, வெள்ளை மலர்கள்.
பலன் : ஆயுள், ஆரோக்கியம் பெருகும். சந்ததிகள் சவுக்கியமாக இருப்பார்கள்.

9 நாட்களும் விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள் சப்தமி, அஷ்டமி, நவமி ஆகிய மூன்று நாட்கள் விரதமிருந்து வழிபடலாம். அதுவும் இயலவில்லை எனில், அஷ்டமி தினத்தில் அம்பாளை பூஜித்து வழிபட்டு அருள் பெறலாம். இந்த தினத்தில்தான் தட்ச யாகத்தை அழித்த அம்பாள், அநேக கோடி யோகினியருடன் தோன்றினாள். அதனால் இந்த தினம் விசேஷமானது.

எவரொருவர் இந்த விரதத்தைத் தொடர்ந்து 9 நாட்கள் கடைப்பிடிக்கிறார்களோ, அவர்களுக்கு தேவர்களுக்கும் கிட்டாத இன்பமும், பிணியின்மையும் வரமாகக் கிட்டும்; சத்ருக்கள் தொல்லையும் நீங்கும் என்பது நம்பிக்கை

English summary
The nine roopa's of Durga represents different traits of human beings. These also control various systems and organs of human body. During nine days of Navratri By worshiping particular form of Durga one is blessed with different physical, mental and
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X