For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாத ராசி பலன்

சூரியபகவான் கன்னி ராசிக்குள் பிரவேசிக்கும் பொழுது புரட்டாசி மாதம் பிறக்கிறது. புரட்டாசி மாதம் முழுவதும் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்பிரமணியன்

சென்னை: புரட்டாசி மாதம் முன்னோர்களுக்கு விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது. மறைந்த நம் முன்னோர்கள், பிதுர் லோகத்தில் வசிப்பதாக ஐதீகம்.

சூரியன், கன்னி ராசிக்குள் புகுந்ததும், எமதர்மன் அவர்களை பூமிக்குச் செல்லும்படி உத்தரவிடுகிறார். அவர்களும் தங்கள் உறவுகளை நாடி, இங்கே வருகின்றனர் என்பது மக்களின் நம்பிக்கை.

புரட்டாசி வளர்பிறை பிரதமையில் இருந்து அமாவாசை வரையான, 15 நாட்கள் அவர்கள் பூமியில் தங்குவர். இந்த நாட்களில் நாம் தினமும் தர்ப்பணம் செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும்.

புரட்டாசி மாதம் முழுவதும் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும். புரட்டாசி மாத சனிக்கிழமைகள் பெருமாள் விரதத்திற்கு உகந்தவை. இவ்வாண்டு நான்கு சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோவில்களுக்கு தவறாமல் சென்று வர வேண்டும்.

நவராத்திரி பூஜை இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது. 9 நாட்களும் கொலுவைத்து பூஜை செய்து அன்னையை வழிபடுகின்றனர். இந்த புரட்டாசி மாதத்தில் பருவ நிலையில் ஏற்படும் மாற்றங்களால் உடலுக்கு ஏற்றவாறு உணவு கொள்ள வேண்டும் என்பதற்காக பெரியோர்கள் விரைவில் செரிமானம் ஆகாத அசைவ உணவை தவிர்க்கவே விரதம் வைத்ததாக ஒரு கருத்தும் உள்ளது. முன்னோர்களின் ஆசி கிடைக்கும் புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாத ராசிபலன்களை அறிந்து கொள்வோம்.

சூரியன் - ராசி மாற்றம் இல்லை
செவ்வாய் - 27ம் தேதி கன்னி ராசிக்கு மாறுகிறார்
புதன் - 10ம் தேதி கன்னி ராசிக்கும்27ம் தேதி துலாம் ராசிக்கும் மாறுகிறார்.
குரு - ராசி மாற்றம் இல்லை
சுக்கிரன் - 23ம் தேதி கன்னி ராசிக்கு மாறுகிறார்
சனி - ராசி மாற்றம் இல்லை
ராகு - ராசி மாற்றம் இல்லை
கேது - ராசி மாற்றம் இல்லை

மேஷம் :

மேஷம் :

சூரியன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகத்தில் பிரச்சினை உண்டாகும் அப்பாவின் உடல் நிலையில் கவனம் தேவை. உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக சொத்துகளிலிருந்து பங்கு கிடைக்கும், சிவில் எஞ்சினியரிங் படிப்பவர்களுக்கு கல்வி நிலை சிறப்படையும். புதன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் தொழில் சிறப்படையும் 10ம் தேதிக்குப் பிறகு தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் நல்லுறவு நிலவும் பண வரவு அதிகரிக்கும். சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும் 23ம் தேதிக்குப் பிறகு பெண்களால் தொல்லை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும் வாகனங்களை கையாளும் பொழுது கவனம் தேவை. ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகனங்களை பராமரிப்பு செய்யும் நிலை உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார எல்லா செயல்களும் சிறப்படையும்.

ரிஷபம் :

ரிஷபம் :

சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க வேலை வாய்ப்புகளுக்கான தேர்வில் வெற்றி கிடைக்கும் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும் செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் வீடு மனை வாங்கும் யோகம் ஏற்படும் தொழிற்சாலைக்கு புதிதாக இயந்திரங்கள் வாங்குவீர்கள். புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் தொழில் கல்வியில் மேன்மை நிலை உண்டாகும் 10ம் தேதிக்குப் பிறகு கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளால் மன கஷ்டம் அதிகரிக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.. உங்கள் ராசிநாதன் சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் வீட்டை அழகுபடுத்துவீர்கள் 23ம் தேதிக்கு பிறகு புதிதாக வாகனம் வாங்குவீர்கள். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் கூட்டாளிகளுடன் நல்லுறவு நிலவும் தொழில் வியாபாரம் மேன்மை நிலை அடையும். ராகு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வெளியூர் பிரயாணம் செல்வீர்கள். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் முயற்சிகள் எல்லாம் வெற்றிபெறும்.

மிதுனம் :

மிதுனம் :

சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் அரசாங்க ஒதுக்கீட்டில் வீடு கிடைக்கும் விவசாயம் சிறப்படையும். செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் இடமாற்றம் உண்டாகும் அண்டை அயலாரின் உதவி கிடைக்கும். உங்கள் ராசிநாதன் புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை உண்டாகும் 10ம் தேதிக்குப் பிறகு தகவல் தொடர்பு சிறப்பு அடையும். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் செல்வச் சேர்க்கை அதிகரிக்கும் குல தெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள். சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களின் உதவி கிடைக்கும் 23ம் தேதிக்குப் பிறகு புதிதாக வாகனம் வாங்குவீர்கள். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும். மன தைரியம் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் பேச்சை தவிர்க்கவும். கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற மனக் குழப்பத்தை தவிர்க்கவும்.

 கடகம் :

கடகம் :

சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அரசு முறை பயணம் உண்டாகும். செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வீடு நிலம் வகையில் பண வருமானம் அதிகரிக்கும் வீண் விதண்டாவாதத்தை தவிர்க்கவும் புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் மூலம் வருமானம் அதிகரிக்கும் 10ம் தேதிக்குப் பின்னர் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தகவல் வந்து சேரும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அசையா சொத்துக்களின் சேர்க்கை அதிகரிக்கும் புதிதாக வாகனம் வாங்குவீர்கள். சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் 23ம் தேதிக்குப் பிறகு முகத்தில் வசீகரம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும் உல்லாசப் பயணம் செல்வீர்கள். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் வீண் குழப்பத்தை தவிர்க்கவும். கேது உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் பகைமையை தவிர்க்கவும்.

சிம்மம் :

சிம்மம் :

உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும் பேச்சில் அதிகாரம் அதிகரிக்கும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் பதவி உயர்வு கிடைக்கும் கோபம் அதிகரிக்கும். புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் புத்திக் கூர்மை அதிகரிக்கும் 10ம் தேதிக்குப் பிறகு பேச்சினாலேயே காரியம் சாதித்துக் கொள்வீர்கள். குரு மூன்றாமிடத்தில் இருக்கிறார் இடம் மாறும் சூழ்நிலை உண்டாகும் அண்டை அயலாரின் உதவி கிடைக்கும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் பெண்களால் நன்மை உண்டாகும் 23ம் தேதிக்குப் பின்னர் ஆடம்பர பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும் சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வீடு மற்றும் வாகனங்களை பராமரிக்கும் நிலை உண்டாகும். ராகு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் வியாபாரக் கூட்டாளிகளுடன் சச்சரவு உண்டாகும்.

 கன்னி :

கன்னி :

சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும் தொழில் உத்தியோகம் சிறப்படையும் செவ்வாய் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடுகள் அதிகரிக்கும் சகோதரர்களுக்காக செலவுகள் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் ஆசை நிறைவேறும் 10ம் தேதிக்குப் பிறகு ஷேர் மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைத் தரும். குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் மனைவிக்காக செலவுகள் அதிகரிக்கும் 23ம் தேதிக்குப் பிறகு மனதின் ஆசைகள் நிறைவேறும் சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் பக்கத்து ஊருக்கு பிரயாணம் செல்வீர்கள் அலைச்சல் அதிகரிக்கும். ராகு பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார் லாபம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

துலாம் :

துலாம் :

சூரியன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க பணியாளர்களுக்கு தொலை தூரத்திற்கு இட மாற்றம் உண்டாகும் தொழில் உத்தியோகம் நிமித்தமாக அலைச்சலும் அதிகரிக்கும். செவ்வாய் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழிலில் லாபம் அதிகரிக்கும் காவல் துறையில் பணி புரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைத் தரும் 10ம் தேதிக்குப் பின்னர் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும்.. குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் குழந்தைகளினால் சந்தோஷம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எண்ணங்கள் யாவும் எளிதில் நிறைவேறும் 23ம் தேதிக்குப் பின்னர் தொழில் வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்க செய்ய வேண்டும். சனி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வருமானம் அதிகரிக்கும் பூர்வீக சொத்திலிருந்து பண வரவு கிடைக்கும்.. ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகம் சிறப்படையும் கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.

விருச்சிகம் :

விருச்சிகம் :

சூரியன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும் சம்பள உயர்வு உண்டாகும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் சொந்தமாக செய்யும் தொழிலில் மேன்மை நிலை உண்டாகும் வீடு மனை வாங்கி விற்க்கும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரம் சிறப்படையும் 10ம் தேதிக்குப் பிறகு படிப்பில் உன்னத நிலையை அடையலாம். குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும் வீடு மாறும் சூழ்நிலை உருவாகும்.. சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் காரணமாக அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும் 23ம் தேதிக்குப் பின்னர் பெண்களால் நன்மை உண்டாகும். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உழைப்பினால் முன்னேற்றம் உண்டாகும் உடல் உழைப்பு அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக சொத்துக்களில் சிக்கல் உண்டாகலாம். கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் குழப்பம் அதிகரிக்கும்.

தனுசு :

தனுசு :

சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் வியாபாரம் சம்பந்தமாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும் உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்திலிருந்து பங்கு கிடைக்கும் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் உயர் கல்வி சிறப்படையும் 10ம் தேதிக்கு பின்னர் தொழில் நிலை சிறப்படையும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாட்கள் மனதில் நினைத்திருந்தவை நிறைவேறும் எல்லா செயல்களும் வெற்றியடையும். சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வக் கோயிலுக்கு செல்லும் நிலை உண்டாகும் 23ம் தேதிக்குப் பின்னர் தொழிலில் வாழ்க்கைத் துணையின் உதவி கிடைக்கும். . சனி பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும் வீண் செலவுகளில் கவனம் தேவை. ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் வாகனங்களை மிகவும் கவனமாக கையாளவும். கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் வீண் சச்சரவைத் தவிர்க்கவும்.

மகரம் :

மகரம் :

சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க அதிகாரிகளால் நன்மை உண்டாகும் பரம்பரையாக செய்து வரும் வியாபாரத்தில் மேன்மை நிலை உண்டாகும். செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களின் செயல்கள் மனக் கஷ்டத்தை உருவாக்கும் நெருப்பினால் காயம் உண்டாகும். புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகும் 10ம் தேதிக்குப் பின்னர் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் மேன்மை நிலையை அடையும் காரியங்களெல்லாம் வெற்றி பெறும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் தொல்லை உண்டாகும் 23ம் தேதிக்குப் பிறகு கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனதின் ஆசைகள் நிறைவேறும் தொழில் லாபம் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களால் நன்மை உண்டாகும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் உண்டாகும் வீண் குழப்பத்தை தவிர்க்கவும்.

கும்பம் :

கும்பம் :

சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க நிறுவன தொடர்புகள் மூலம் திடீர் பண வரவு உண்டாகும் பேச்சினில் அதிகாரம் அதிகரிக்கும். செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்கள் மூலம் நன்மை விளையும் வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியடையும் 10ம் தேதிக்குப் பின்னர் தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகலாம். குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் குல தெய்வத்தின் அருள் கிடைக்கும். சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் ஆடம்பர பொருட்கள் வாங்கும் நிலை உண்டாகும் 23ம் தேதிக்குப் பிறகு பெண்களால் நன்மை ஏற்படும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களும் சிறப்படையும் தொழில் நிலை சிறப்பாக இருக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளை வெல்வீர்கள். கேது உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் திருக்கோயில் பணிகளுக்காக செலவழிப்பீர்கள்.

மீனம் :

மீனம் :

சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகம் காரணமாக அடிக்கடி பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதில் தைரியம் அதிகரிக்கும் சகோதரர்களுடன் சச்சரவைத் தவிர்க்கவும். புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் தேவை 10ம் தேதி முதல் வியாபாரத்தில் மேன்மை நிலை உண்டாகும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் திடீரென்று பண வரவு உண்டாகும் பிரிந்த உறவுகள் சேர்க்கை ஏற்படும். சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் விலை உயர்ந்த பொருட்களில் கவனம் தேவை 23ம் தேதிக்குப் பின்னர் வாழ்க்கைத் துணையுடன் நல்லுறவு நிலவும். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள்.

English summary
Tamil Month Purattasi Rasi Palan 2017 from 17-09-2017 to 18-10-2017.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X