For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாழ்க்கைக்கு ஒளிதரும் கார்த்திகை மாதம்

Google Oneindia Tamil News

-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்ரமணியன்

கார்த்திகை மாதம் தமிழ் மாதங்களில்-சித்திரை தொடங்கி 8வது மாதமாகும். ஜோதிடவியலில் சூரியன் விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கும் காலம் கார்த்திகை மாதம் என்று அழைக்கப்படுகிறது.

பொதுவாக பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் பெயர் வைப்பது மரபு. இருப்பினும் கார்த்திகை மாதத்தில் பிறக்கக்கூடிய ஆண் குழந்தைகளுக்கு யெக்ஞபுருஷன் என்றும் பெண் குழந்தைகளுக்கு லட்சுமி என்றும் பெயர் வைக்கலாம்.

The Tamil month of Karthigai

கார்த்திகை மாதத்தின் சிறப்புகள்:

ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் பல்வேறு சிறப்பம்சங்கள் காணப்படுகின்றன. பலவிதமான பண்டிகைகள் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன இவை வாழ்க்கையில் உயர்வையையும் மேன்மையையும் கொடுக்கின்றன என்பது நம்பிக்கை. கார்த்திகை மாத சிறப்புகளை காண்போம்.

முடவன் முழுக்கு:

கார்த்திகை மாதம் 1ம் தேதி 17-11-2014 திங்கள் கிழமை முடவன் முழுக்கு. ஐப்பசி மாதம் முழுவதும் ஒரு நாள் கூட ஸ்ரீரங்கம் காவேரியில் நீராட முடியாதவர்கள் இன்று அவசியம் காவேரியில் நீராட வேண்டும். இதனால் துலாஸ்நானம் செய்த புண்ணிய பலன் கிடைக்கும்.

ரமா ஏகாதசி:

கார்த்திகை மாதம் 2ம் தேதி 18-11-2014 செவ்வாய் கிழமை ரமா ஏகாதசி ஆகும். ‘ர' என்றால் நெருப்பு, ‘மா' என்றால் தாய். அதாவது ஒளி பொருந்திய ஏகாதசி என்று பொருள். இன்று பெருமாள் கோயிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி பதினோரு முறை வலம் வந்து வணங்குவதினால் தாயின் அன்பு போல் பெருமாளின் அருள் கடாட்சம் பெருகி வாழ்க்கையில் செல்வம் ஆரோக்கியம் மன நிம்மதி அதிகரிக்கும்.

யமதீபம்:

கார்த்திகை மாதம் 4ம் தேதி 20-11-2014 வியாழன் கிழமை யமதீபம். இன்று மாலை வீட்டிற்கு வெளியில் எமனுக்காக தெற்கு நோக்கி ஏற்றுவதினால் எம பயம் விலகும். வீட்டில் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் நீங்கி குணமடைவார்கள்.

லட்சுமி ப்ரபோதன தினம்:

கார்த்திகை மாதம் 6ம் தேதி 22-11-2014 சனி கிழமை லட்சுமி ப்ரபோதன தினம். இன்று மாலை லட்சுமி பூஜை செய்வதன் மூலம் இழந்த செல்வத்தை மீண்டும் பெறலாம்.

நாக பஞ்சமி:

கார்த்திகை மாதம் 10ம் தேதி 26-11-2014 புதன் கிழமை நாக பூஜா பஞ்சமி நாக தோஷ நிவர்த்தி செய்ய உகந்த நாள்.

க்ஷீராப்தி சயன விரதம்:

கார்த்திகை மாதம் 17ம் தேதி 03-12-2014 புதன் கிழமை க்ஷீராப்தி சயன விரதம். இன்று பாற்கடலில் இருந்து மஹாலட்சுமி உற்பத்தியான நாள். மஹாலட்சுமியுடன் கூடிய சயன திருக்கோலத்தில் அருள் பாலிக்கும் பெருமாளை வழிபடுவது சிறப்பு.

அனங்க திரயோதசி:

கார்த்திகை மாதம் 18ம் தேதி 04-12-2014 வியாழன் கிழமை அனங்க திரயோதசி. இன்று ரதி-மன்மதனை வழிபட்டால் திருமணம் விரைவில் நடக்கும்.

ஸ்ரீஅண்ணாமலை திருகார்த்திகை தீபம்:

கார்த்திகை மாதம் 19ம் தேதி 05-112-2014 வெள்ளி கிழமை திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் விழா. இன்று கார்த்திகை விரதம். முருகனுக்கு விரதம் இருப்பது வாழ்க்கையில் வளம் அதிகரிக்கும்.

வாஸ்து:

இந்த மாதம் 08ம் தேதி காலை 11-09 முதல் 11-45க்குள் வாஸ்து பூஜை செய்வது சிறப்பு. குடும்பத்தில் சுபிட்சம் நிலவும்.

கார்த்திகை மாத சுபமுகூர்த்த நாட்கள்:

தமிழ் தேதி ஆங்கில தேதி கிழமை திதி நட்சத்திரம் நேரம்
கார்த்திகை 04 20-11-2014 வியாழன் திரயோதசி சித்திரை காலை 10½-11½
கார்த்திகை 11 27-11-2014 வியாழன் சஷ்டி திருஓணம் காலை 10-11
கார்த்திகை 12 28-11-2014 வெள்ளி சப்தமி அவிட்டம் காலை 06½-07½
கார்த்திகை 15 01-12-2014 திங்கள் தசமி உத்திரட்டாதி காலை 09½-10½
கார்த்திகை 24 10-12-2014 புதன் சதுர்த்தி பூசம் காலை 06-07

English summary
The auspicious and celebrated Karthigai Maasam begins this year on November 17th and ends on December 16th. It is the eight month in the tamil year and derives its name from the Nakshatram or constellation of Krithika or Pleiades.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X