For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மழைக்கால தொண்டை கரகரப்பு... உங்க ஜாதகத்தில் சுக்கிரன் சுகமா இல்லையோ?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

இப்போது மழைகாலம் முடிந்து குளிர்காலம் ஆரம்பிக்கும் நிலையில் பலரும் தொண்டை பிரச்சனையால் அவதியுறுகின்றனர். தொண்டை அழற்ச்சிக்கு ஜோதிட ரீதியாக யார் காரணம் தெரியுமா? அதாங்க நம்ம ஹீரோ! சுக்கிரனேதான் என்கிறார் ஜோதிடர் அஸ்ட்ரோ சுந்தரராஜன். வெள்ளிக்கிழமையான இன்று இந்த கட்டுரை வாசகர்களுக்கு உபயோகமாக இருக்கும்.

அடிநா அழற்சி என்பது அடிக்கடி தொண்டைப் புண் மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தும் ஆனால் எப்போதும் அவ்வாறு செய்யாது. தொண்டை அழற்சி ஏற்பட ஸ்டெப்டோகோகஸ், ஹிமோபில்ஸ் ஆகிய பாக்டீரியாக்கள் தான் காரணம். அதுபோல, அடெனோவைரஸ், எப்ஸ்டின் - பார் ஆகிய வைரஸ்கள் காரணமாக உள்ளன. இந்த பாக்டீரியா, வைரஸ்கள், அடுத்தவரிடம் இருந்தும் தொற்றும்; சில காரணங்களாலும் தொற்றும். குடும்பத்தில் உள்ள யாருக்காவது டான்சிலிட்டிஸ் இருந்தால், மற்ற சிறு வயதினருக்கும் தொற்றும். அதனால், டம்ளர் உட்பட சில பொருட்களை ஒருவர், மற்றவருடன் பகிர்ந்துக் கொள்ளவே கூடாது.

தொண்டை கரகரப்பு இருந்தால் டான்சிலிட்டிஸ் என்று முடிவு செய்து விடக்கூடாது. அதே சமயம், தொடர்ந்து ஒருவருக்கு தொண்டையில் வீக்கம், எரிச்சல், கரகரப்பு இருந்தால் கண்டிப்பாக டாக்டரிடம் போய் காட்ட வேண்டும். எச்சில் உணவு விழுங்க முடியாமல் போகிறபோதே உஷாராகி விட வேண்டும். உடனடியாக மருத்துவரிடம் சென்றால் சிகிச்சை சுலபமாகி விடும்.

அறிகுறிகள்

அறிகுறிகள்

தொண்டையில் சீழ் பிடித்த கட்டி, தொண்டை நோயின் ஒரு அறிகுறி இது, உருவாவதாகும். தொண்டையில் சீழ் பிடித்த கட்டிக்கான அறிகுறிகள் பெரும்பாலும் கடும் காய்ச்சல், அடைத்த குரல், வாயைத் திறப்பதில் சிரமம், உமிழ்நீர் அதிகமாகச் சுரத்தல், வாய்நீர் வடிதல், மற்றும் சில வேளைகளில் கழுத்து வீக்கம் என்பனவாகும்.

இந்த அறிகுறிகள் தோன்றினால் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவது நல்லது. தொண்டை நோய்களில் வேறு சிக்கல்களும் உண்டா கலாம், அப்படிப்பட்ட ஒரு சிக்கல் வாதக் காய்ச்சலாகும். இது தோல், மூட்டுகள், இதயம் மற்றும் மூளை என்பனவற்றை உட்படுத்தும் வாதக் காய்ச்சலாகும். வேறு சிக்கல்கள், மூட்டு வீக்கம் மற்றும் சிறு நீரக வீக்கம் என்பன வற்றை உள்ளடக்கும்.

தடுக்க வழிமுறைகள்

தடுக்க வழிமுறைகள்

காய்ச்சலை கண்காணியுங்கள் மற்றும் ஆண்டிபயோடிக்ஸ் மருந்து முழுவதையும் உபயோகியுங்கள். ஆண்டிபயோடிக்ஸ் மருந்து கொடுத்த ஆரம்பித்த 3 நாட்களுக்குள் வழக்கமாக, காய்ச்சல், மற்றும் தொண்டை வலி குறைய ஆரம்பிக்கும். நோய் திரும்பவும் வராதிருக்கவும், ஆண்டிபையோடிக் எதிர்ப்பு சக்தியை இழக்காமலிருக்கவும், நோயின் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காகவும் ஆண்டிபயோடிக் மருந்துகள் முழுவதையும் உபயோகிப்பது முக்கியம்.

தொண்டை அழற்சி நோய்க்கான ஜோதிட காரணங்கள்

தொண்டை அழற்சி நோய்க்கான ஜோதிட காரணங்கள்

தொண்டை அழற்சிக்கு ஜோதிட ரீதியாக யார் காரணம் தெரியுமா? அதாங்க நம்ம ஹீரோ! சுக்கிரனேதான். ஜாதகத்தில் சுக்கிரனின் நிலையை வைத்தும் கால புருஷனுக்கு இரண்டாம் வீடான ரிஷபத்தில் உள்ள கிரகங்களின் நிலையை வைத்தும் இரண்டாம் வீட்டின் நிலையை வைத்தும் தொண்டை அழற்சி நோயை தீர்மானிக்க முடியும்.

யாருக்கு தொண்டை நோய் வரும்

யாருக்கு தொண்டை நோய் வரும்

மேஷ, கன்னி லக்ன காரர்களுக்கு இரண்டாம் வீடாக சுக்கிரனின் வீடு வருவதால் அவர்களுக்கு தொண்டை அழற்சி நோய் வரும்.

மிதுனம், துலாம் மற்றும் தனுர் லக்ன காரர்களுக்கு காலபுருஷனின் இரண்டாம் வீடாகிய ரிஷபம் 6/8/12 ஆக. வருவதால் அவர்களுக்கு தொண்டை அழற்சி நோய் வருகிறது.

சுக்கிரனால் சிக்கல்

சுக்கிரனால் சிக்கல்

எந்த லக்னமாக இருந்தாலும் அதற்கு இரண்டாம் வீட்டில் சுக்கிரன் நின்றால் தொண்டை அழற்சி நோய் ஏற்படுகிறது. இரண்டாமிடத்து சுக்கிரனுடன் சேரும் கிரகங்களை பொருத்து தொண்டை அழற்சி நோயின் தன்மை மாறுபடுகிறது. எந்த லக்னமாக இருந்தாலும் அதற்கு இரண்டில் கோசார சுக்கிரன் பயணம் செய்யும்போது தொண்டை அழற்சி நோய் ஏற்படுகிறது.

தைராய்டு வீக்கம்

தைராய்டு வீக்கம்

ரிஷபத்தில் சூரியன் நின்றால் வரட்டு இருமலுடன் கூடிய சூட்டினால் வரக்கூடிய தொண்டை புண் ஏற்படுகிறது. ரிஷபத்தில் சந்திரன் மற்றும் சுக்கிரன் நின்றால் குளிர் காய்சலுடன் கூடிய தொண்டை அழற்சி ஏற்படுகிறது. வீக்கமும் ஏற்படுகிறது. ரிஷபத்தில் செவ்வாய் தொண்டையில் சிவப்பு நிற புண்களுடன் கூடிய தொண்டை அழற்சி மற்றும் தைராய்டு வீக்கமும் ஏற்படுகிறது.

ரிஷபத்தில் புதன் அல்லது சனி நின்றால் சளி மற்றும் கிருமி தொற்றுகளுடன் கூடிய தொண்டை அழற்சி ஏற்படுகிறது. ரிஷபத்தில் ராகு நின்றால் அதிக இருமலுடன் கூடிய அழற்சியும் கேது நின்றால் சளி துர்நாற்றத்துடன் கூடிய தொண்டை அழற்சியும் ஏற்படுகிறது.

ஆயுர்வேத மருத்துவம்

ஆயுர்வேத மருத்துவம்

மது யஷ்டி சூர்ணம்,சிதோபலாதி சூர்ணம், தாளிசாதி சூர்ணம், த்ரிகடு சூர்ணம், ப்ரவாள பற்பம் ஆகிய மருந்துகளை சம அளவில் கலந்துக்கொண்டு காலை, மதியம் இரவு மூன்று வேளையும் தேனில் கலந்து உட்கொண்டு வர விரைவில் குணமாகும். கதிராதி குடிகா எனும் மாத்திரையை சப்பி சாப்பிட்டு வர இருமல் நின்று தொண்டை புண் குணமாகும். ஆடு தீண்டா பாலை என்படும் ஆடாதோடை கஷாயம் அல்லது வாக்ஷாரிஷ்டம் உட்கொண்டு வர நல்ல பலனளிக்கும்

English summary
Venus or Sukara is the karaka of Face, light eyes, genitals, urine, semen, body, shine and luster, throat, and glands. The native may have to suffer from related diseases during Sukra’s dasha and antardasha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X