For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீரம் நிறைந்த யுகாதி பண்டிகை- தெலுங்கு, கன்னட மக்கள் உற்சாக கொண்டாட்டம்

யுகத்தின் ஆரம்பத்தை யுகாதி என அழைக்கின்றனர். தெலுங்கு மற்றும் கன்னட மக்கள் உகாதி புத்தாண்டினை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை: தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டு யுகாதி ஆகும். மகாராஷ்டிர மக்கள் இதே நாளை குடிபாட்வா எனவும் சிந்தி மக்கள் சேதி சந்த் எனவும் பலவறாக கொண்டாடுகின்றனர். யுகத்தின் ஆரம்பத்தை யுகாதி என அழைக்கப்படுகிறது. இந்த பண்டிகையை தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் இன்று உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

ஜோதிட ரீதியாக குரு தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளின் அதிபதியாகவும் செவ்வாய் தெலுங்கு தமிழ் மராட்டியம் ஆகிய மொழிகளின் அதிபதியாகவும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

தெலுங்கு மக்கள்

தெலுங்கு மக்கள்

தெலுங்கு பேசுபவர்கள் மற்றும் ஆந்திர மக்கள் செவ்வாயின் அதிக்கம் நிறைந்து காணப்படுகின்றனர். ஒல்லியான தேகம், முரட்டுதனம் கடின உழைப்பு, எளிதில் உணர்ச்சி வசப்படுவது, அதிக காரம் மிகுந்த உணவுகளை விரும்பி சாப்பிடுவது செவ்வாயின் காரக குணங்களாகும்.

கன்னட மக்கள்

கன்னட மக்கள்

அதேநேரம் கன்னடம் பேசுபவர்களும் கன்னடர்களும் சாத்வீகமானவர்களாகவும் இனிப்பு மற்றும் நெய் சேர்த்த காரம் குறைந்த உணவு உண்பவர்களாகவும் பருத்த தேகமுடையவர்களாகவும் இருக்கின்றனர்.

செவ்வாய் பகவான்

செவ்வாய் பகவான்

தெலுங்கு வருடப்பிறப்பு எந்த தினத்தில் வருகிறதோ அந்த தினத்தின் கிரகம் அந்த வருடத்தின் ராஜாவாக அமைவார். இந்த வருடம் யுகாதி ஜோதிட நாளான செவ்வாயன்றே பிறந்துவிடுவதால் ஹேவிளம்பி வருடத்தின் ராஜாவாக செவ்வாய் பகவான் அமைந்துள்ளார்.

சித்திரை மாதம்

சித்திரை மாதம்

அதே போன்று சித்திரை மாதம் பிறக்கும் நாளின் அதிபதியே அந்த வருடத்தின் மந்திரியாகும். அவ்வாறே குரு பகவான் ஹேவிளம்பி வருட மந்திரியாவார்.

வரும் ஹேவிளம்பி வருடம் வீரமுள்ள ராஜாவும் விவேகமுள்ள மந்திரியும் இணைந்து ஆளப்போகும் குரு மங்கள யோகம் நிறைந்த அற்புத வருடமாகும்.

உகாதி கொண்டாட்டம்

உகாதி கொண்டாட்டம்

பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் யுகாதி கொண்டாட வேண்டும். அன்று அமாவாசை ஒரு நாழிகை இருந்தால்கூட மறுநாள்தான் உகாதி கொண்டாட வேண்டும் என்பது விதி. மனித வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறிவரும் என்பதையும் அதைப் பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த உகாதி பண்டிகை உணர்த்துகிறது.

உகாதி கொண்டாட்டம்

உகாதி கொண்டாட்டம்

சைத்ர மாதத்தின் முதல் நாள் தான் பிரம்மன் உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்நாளில் புது முயற்சிகளை மேற்கொள்ள நல்ல நாளாக கருதப்படுகிறது. மேலும் சைத்ர மாதத்தின் முதல் நாள் வசந்த காலத்தின் பிறப்பை குறிப்பதால், இந்நாள் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்நாளில் மக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் செய்து புத்தாடை அணிந்து உகாதி பச்சடி செய்வதில் இருந்து நாள் ஆரம்பிக்கிறது. உகாதி அன்று பல்வேறு இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், தெலுங்கு சாகித்ய நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்குதல் ஆகியவை உகாதி நாளன்று நடைபெறும்.

உகாதி பச்சடி

உகாதி பச்சடி

உகாதி அன்று அறுசுவை கூடிய பதார்த்தமாக உகாதி பச்சடி செய்யப்படுகிறது. இது உகாதி அன்று செய்யப்படவேண்டிய மிக முக்கியமான பதார்த்தமாகும். இந்த உகாதி பச்சடி வேப்பம்பூ, மாங்காய், புளி, வெல்லம் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து செய்யப்படுகிறது. இந்த புத்தாண்டு அனைத்து மகிழ்ச்சி, துக்கம் முதலிய அனைத்தையும் உடைய ஒன்றாக இருக்கும் என்பதை குறிக்கிறது. இந்தப் பதார்த்தத்தை கன்னட மொழியில் பேவு பெல்லா என அழைப்பர்.

உகாதி சுலோகம்

உகாதி சுலோகம்

உகாதி பண்டிகையான இன்று கீழ்கண்ட சுலோகம் சொல்லி வெல்லம் கலந்த வேப்பம்பூ பச்சிடியை ஆண்கள் பெண்கள் என அனைவரும் சாப்பிட வேண்டும், இதனால் வைரம் போன்ற உடலும், அனைத்து ஸம்பத்தும் கிட்டும்

சதாயூர் வஜ்ர தேஹாய சர்வ சம்பத்கராய ச |
சர்வாரிஷ்ட விணாசாய நிம்பஸ்ய தல பக்ஷ்ணம் ||.

பஞ்சாங்கம் படித்தல்

பஞ்சாங்கம் படித்தல்

உகாதி பண்டிகை ஒரு ஆண்டாகிய யுகத்தின் தெய்வ அனுகூலத்தையும் உலக மக்களின் வாழ்க்கை நலன்களையும் முன்னதாகவே அறிந்துகொள்ளக்கூடிய காலக்கண்ணாடியாக திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்ற ஐந்து விதமான அங்கங்களைக் கொண்ட மங்களகரமான பஞ்சாங்கப் படனமாக மலர்கிறது. திருமலையில் இன்று யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று உற்சவ மூர்த்திகளை தங்க வாசல் அருகில் எழுந்தருளச் செய்து ஆஸ்தானம், பஞ்சாங்கம் படித்தல் நிகழ்ச்சி நடைபெறும்.

English summary
Ugadi marks the beginning of the New Year for Kannadigas and Telugus. Neem and mango leaves strung together and hung on front doors and the bevu-bella (neem and jiggery) mixture It is believed that the sweet and bitter taste in bevu-bella symbolises the good and bad times to come.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X