Englishবাংলাગુજરાતીहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు
Filmibeat

வார ராசி பலன் 28-11-2014 முதல் 04-12-2014 வரை

Updated: Friday, November 28, 2014, 7:46 [IST]
 

- ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்பிரமணியன்

வார ராசி பலன் 28-11-2014 முதல் 04-12-2014 வரை

கிரகங்களின் ராசி மாற்றம்:

சூரியன் - மாற்றம் இல்லை
செவ்வாய் - மாற்றம் இல்லை
புதன் - மாற்றம் இல்லை
குரு - மாற்றம் இல்லை
சுக்கிரன் - மாற்றம் இல்லை
சனி - மாற்றம் இல்லை
ராகு-கேது - மாற்றம் இல்லை

சந்திரன்

28-11-2014 மாலை 05-30 க்கு கும்பம் ராசிக்கு மாறுகிறார்

30-11-2014 இரவு 08-33 க்கு மீனம் ராசிக்கு மாறுகிறார்

02-12-2014 இரவு 12-23 க்கு மேஷம் ராசிக்கு மாறுகிறார்

 

 

மேஷம்:

வேகமும் விறுவிறுப்பும் அதிகம் கொண்ட மேஷம் ராசி அன்பர்களே!

தந்தையின் கோபமும் அரசு விரோதமும் உண்டாகும். இருப்பினும் மனம் தெளிவாக இருக்கும், உத்தியோகத்தில் பிரச்சினை ஏற்படும். போக்குவரத்தில் கவனம் தேவை.. எதிர்பார்த்த தகவல் வருவதிலும் பண வரவிலும் தடை இருக்கும். பொழுது போக்கு அம்சங்கள் சிறப்பு, மேலும் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் கவனம் தேவை. எதிரிகள் அடிபணிவார்கள். மின்சாதனங்களில் கவனம் தேவை. மஹாலட்சுமிக்கு சர்க்கரை பொங்கல் படைத்து வழி படுவது சிறப்பு.

 

ரிஷபம்

வசீகரிக்கும் வாக்கு வன்மை ரிஷபம் ராசி அன்பர்களே!

இந்த வாரம் முழுவதும் மனதில் சந்தோஷம் குடி கொள்ளும். தாய் மாமன் ஆதரவு கிட்டும்.சுப செய்திகள் வந்து சேரும். தந்தையிடம் வீண் விவாதத்தை தவிர்க்கவும்.புத்திரர்களால் மனக் கஷ்டம் உருவாகும். உத்தியோக வகைகளில் சிரமம் உண்டாகும். கணவன் மனைவி இடையே பிரச்சினை உண்டாகும். குழந்தைகளின் படிப்பு சிறக்கும்.. வாகனங்களை கையாளுவதில் கவனம் தேவை. முருகப் பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்து வழி படுவது சிறப்பு.

 

மிதுனம்

மதி நுட்பம் மிகுந்த மிதுனம் ராசி அன்பர்களே!

தன வரவு அதிகரிக்கும், பொன்ஆபரணங்கள் பட்டு ஆடைகள் வாங்குவீர்கள் பூமி நிலம் போன்ற வகைகளில் கவனம் தேவை. உத்தியோகத்தில் விருத்தி நிலை தொடரும். பெற்றோரின் உடல் நலம் சீராக இருக்கும். வார ஆரம்பத்தில் ஆன்மீகப் பயணம் இருக்கும், கமிஷன் தொழிலில் தாமத நிலை நீடிக்கும். கூர்மையான கத்தி போன்ற ஆயுதங்களை கையாளுவதில் கவனம் தேவை. மஹாவிஷ்ணுவிற்க்கு துளசி மாலை சாற்றி வழிபாடு செய்வது சிறப்பு.

 

கடகம்

தன்னிலை தவறாத கடகம் ராசி அன்பர்களே!

மனதில் தைரியம் கூடும். செயல்களில் தடை உண்டாகும். ஷேர் மார்க்கெட் லாபம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் நல்லுறவு சிறக்கும். பணவரவு அதிகரிக்கும் முக்கிய முடிவுகள் எடுப்பதில் கவனம் தேவை.. இயந்திர வகைகளில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் சிரம நிலை நீடிக்கும்.. புனித யாத்திரை ஏற்படும். 28ம் தேதி மாலை முதல் 30ம் தேதி இரவு வரை சந்திராஷ்டமம் முக்கிய முடிவுகள் எடுப்பதில் கவனம் தேவை. ஐயனாரை வழிபட்டு சிரமங்களைக் குறைத்துக் கொள்ளலாம்.

சிம்மம்

தலைமை தகுதி மிக்க சிம்மம் ராசி அன்பர்களே!

இந்த வாரம் இனிமையாக ஆரம்பிக்கும், செய் சிரமம் இருக்கும், குடும்ப உறவு நிலை குழப்பமாக இருக்கும். வாகன யோகம் உண்டாகும். கல்வியில் கவனம் தேவை வீண் விவாதங்களை தவிர்க்கவும். எல்லா விஷயங்களிலும் சகோதரர்கள் உதவுவார்கள். பண வரவில் தடை நீடிக்கும். 30ம் தேதி இரவு முதல் டிசம்பர் 2ம் தேதி இரவு வரை சந்திராஷ்டமம் எனவே மனம் மந்த நிலைக்கு இடம் கொடுக்காமல் கவனமாக செயல் படவும். கால பைரவர் வழிபாடு சிரமங்களை குறைக்கும்.

 

கன்னி

சாதுரியமும் தந்திரமும் மிக்க கன்னி ராசி அன்பர்களே!

வாகனங்கள் வாங்குவதற்கு ஏற்ற காலம். வாரம் முழுவதும் மனதில் உற்சாகம் நீடிக்கும். அழகிய கலை நயம் மிக்க பொருட்கள் சேர்க்கை உண்டாகும். படிப்பில் வெற்றி தரும் வாரம். அனைவரின் ஆதரவும் கிடைக்கும். தந்தையின் ஆதராவால் அனைத்து காரியங்களும் வெற்றிபெறும். பதவி உயர்வு கிட்டும். செய் தொழில் லாபம் அதிகரிக்கும். வயிற்றில் வலி தோன்றும். டிசம்பர் 02ம் தேதி இரவு முதல் இரண்டு நாட்கள் சந்திராஷ்டமம் கவனமாக நடந்து கொள்ளவும். தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை சாற்றி வழிபடவும்.

 

துலாம்

எக்காலத்திலும் நிலை தவறாத துலாம் ராசி அன்பர்களே!

சந்தோஷம் மிகுந்த வாரம். தாயாரின் அன்பும் அனுசரணையும் மனதில் அமைதி தரும். அரசாங்க விவகாரங்களில் கவனம் தேவை. வீண் அலைச்சல் உடல் நலத்தை பாதிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். ஷேர் மார்கெட் முதலீடுகளில் கவனம் தேவை. தேவையற்ற பயணத்தினை தவிர்க்கவும். நிலம் வீடு வகைகளில் பிரச்சினைகள் உருவாகும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. அம்பாளை நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.

 

விருச்சிகம்

பலவித ரகசியங்களை தன்னகத்தே கொண்ட விருச்சிகம் ராசி அன்பர்களே!

வயதில் மூத்தவர்கள் மற்றும் இளையவர்கள் எல்லா வகைகளிலும் உதவுவார்கள். அரசாங்க அதிகாரிகளின் தொந்தரவு உண்டாகும். தன வரவு சிறப்பாக இருக்கும். குழந்தைகளால் சந்தோஷம் உண்டாகும். மனதில் உண்டாகும் அகங்காரத்தை தவிர்ப்பது நல்லது. நினைத்த காரியங்கள் நிறைவேறும். வாழ்க்கை துணையுடன் இணக்கமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த தகவல் கிடைப்பதில் தாமதம் நீடிக்கும். உழைப்பின் காரணமாக உடல் அசதி உண்டாகும். சரஸ்வதியை வெள்ளை நிறம் கொண்ட மாலை சாற்றி வழிபடுவது சிறப்பு.

 

தனுசு

சிந்தித்து செயல்படும் தனுசு ராசி அன்பர்களே!

தந்தையாருடன் இணக்கமான சூழ்நிலை மாறும். உத்தியோக நிலை லாபம் தராது உத்தியோகத்தில் கவனத்துடன் செயல்படுவது சிறப்பு. மின் சாதனங்களில் கவனம் செலுத்துவது நல்லது. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கும் தகவல் கிடைக்கும். செலவினங்களில் கவனம் தேவை. வாழ்க்கை துணையுடன் வீண் விவாதத்தை தவிர்க்கவும். வீடு வாங்கும் எண்ணம் நிறைவேறும். விநாயகருக்கு மோதகம் படைத்து அர்ச்சனை செய்வது சிறப்பு.

 

மகரம்

உழைப்பில் உண்மை நேர்மை கொண்ட மகரம் ராசி அன்பர்களே!

உழைப்பு உயர்வு தரும் வாரம். மனநிலை சிறப்பாக இருக்கும், உல்லாச பயணம் செல்வதற்க்கு ஏற்ற காலம். பண வரவில் சீரான நிலை நீடிக்கும். மனதில் அகங்காரமும் கோபமும் அதிகரிக்கும். வியாபாரம் மேம்படும். தந்தையுடன் கருத்து வேறுபாடு நீங்கி சுமுகமான உறவு நீடிக்கும். பூர்வீக சொத்தில் வில்லங்கம் உண்டாகும். ஐயப்பனை நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.

 

கும்பம்

ஒளிமயமான தோற்றம் கொண்ட கும்பம் ராசி அன்பர்களே!

வாழ்க்கை துணையின் கோபம் மன குழப்பம் தரும். பண வரவில் தடைகள் உருவாகும். கருத்து வேறுபாடுகளை தவிர்க்கவும். புதிய புத்தகங்களை வாங்கி படிப்பீர்கள். வீண் செலவுகளை தவிர்க்கவும். முகம் தெரியாத நபர்களால் குடும்பத்தில் பிரச்சினை உருவாகும். தொழில் உத்தியோகம் மேம்படும். தாய் மாமன் உதவி கிடைக்கும். சக்கரத்தாழ்வாரை நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.

 

மீனம்

தன்னை காத்துக் கொள்ளும் திறன் கொண்ட மீனம் ராசி அன்பர்களே!

பண வரவு திருப்திகரமாக இருக்கும். கல்வியில் மேன்மை உண்டாகும்.தரகு கமிஷன் வியாபாரம் மேன்மை பெறும். கருவுற்ற பெண்கள் கவனமாக இருப்பது சிறப்பு. மனதில் இனம் புரியாத பாரம் அதிகரிக்கும். நண்பர்களுடன் கருத்து விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். தேவையற்ற செலவுகள் உண்டாகும். இளைய சகோதரத்தின் உதவி கிடைக்கும். வாகன போக்குவரத்தில் கவனம் தேவை. ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாற்றி வழிபடுவது சிறப்பு.

 

Tamil.oneindiaவின் புதிய Facebook ஜோதிட app-ஐ இன்னும் பயன்படுத்தவில்லையா?
Story first published:  Monday, October 8, 2007, 11:29 [IST]
English summary
thatstamil presents Weekly astrology forecast, free astrology, predictions and more. அனைத்து ராசிகள், நட்சத்திரங்களுக்கு தட்ஸ்தமிழ் வழங்கும் வார ராசி பலன்
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Videos You May Like