For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆஸ்திரியா Vs ரஷ்யா

By A K Khan
Google Oneindia Tamil News

இந் நிலையில் முதலாம் உலகப் போர் வெடிக்கவே அதில் உக்ரைன் நாட்டின் ஒரு பிரிவினர் ஆஸ்திரியாவுக்கு ஆதரவாகவும் இன்னொரு பிரிவினர் ரஷ்யாவுக்கு ஆதரவாகவும் போரில் குதித்தனர்.

இந்தப் போரின்போதே ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் மக்களை போராடத் தூண்டியது ஆஸ்திரியா. இதற்கு ஹங்கேரியும் ஆதரவு தந்தது. முதலாம் உலகப் போரின் முடிவில் ரஷ்ய, ஆஸ்திரிய ஆட்சிகள் இரண்டும் கவிழ்ந்தன.

War

1917ம் ஆண்டில் ரஷ்யப் புரட்சி ஆரம்பித்த போது உக்ரைனிலும் தீவிர கம்யூனிஸ சிந்தனைகளுடன் உருவான பல அமைப்புகள் உக்ரைனின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததோடு, அந்தப் பகுதிகளை தனி சுயாட்சி கொண்ட நாடுகளாக அறிவித்து, ரஷ்யாவுக்கு ஆதரவு தந்தன.

இன்னும் இரு பிரிவினர் உக்ரைனின் பிற பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆஸ்திரியா, ஹங்கேரிக்கு ஆதரவு தந்தன. இதனால் ரஷ்ய மற்றும் ஆஸ்திரிய, ஹங்கேரி ஆதரவுப் பிரிவினரிடையே மோதல் வெடித்து உக்ரைனில் உள்நாட்டுப் போர் மூண்டது.

இந் நிலையில் உக்ரைன் மீது போலந்து போர் தொடுத்து நாட்டின் மேற்கு, கிழக்குப் பகுதிகளை ஆக்கிரமித்தது. ரஷ்யாவும், பெலாரஸ் நாடும் மற்ற பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டன.

English summary
As Ukraine's new leaders accused Russia of declaring war, Russia's Prime Minister warned that blood could be spilled amid growing instability in the neighboring nation. Kiev mobilized troops and called up military reservists in a rapidly escalating crisis that has raised fears of a conflict. And world leaders
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X