For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

''மைக் செட்'' மூலமாக இன்னொரு பிரச்சனை....

By A K Khan
Google Oneindia Tamil News

இப்படியாக பல்வேறு பிரச்சனைகள் நிலவி வரும் நிலையில் உலக பங்குச் சந்தைகளுக்கு ''மைக் செட்'' மூலமாக இன்னொரு பிரச்சனை வந்திருக்கிறது.

என்னாது...?

நம் ஊரில் திருமணம், காதுகுத்து ஆகிய விழாக்களுக்கு நம் ஊரில் கட்டப்படுமே பச்சை கலர் ''கொழாய்'' ஸ்பீக்கர்கள்... ''நாரதரே, அம்மையப்பன் என்றால் என்ன?, உலகம் என்றால் என்ன?" என்று விநாயகர் கேள்வி கேட்கும் திருவிளையாடல் வசனங்களை நாம் கேட்டு ரசித்த அதே மைக் செட் தான்.

Why the yuan's fall matters to ALL!

அந்த ஸ்பீக்கர்களை கட்டி வைத்துக் கொண்டு வட கொரியாவுக்கு எதிராக தென் கொரியா ஜனநாயக பிரச்சாரத்தை எடுத்துவிட, பதிலுக்கு வட கொரிய அதிபர் 'குழந்தைசாமி' கிம் ஜாங் யுன் அதிக டெசிபல் கொண்ட கொழாய்களைக் கட்டி ''அமெரிக்காவின் அடிமை தென் கொரியாவே... நீ எங்களுக்கு புத்தி சொல்வதா'' என்று கத்தினார்.

மைக் சண்டை காது கிழியும் டெசிபலை கடந்து காதில் ரத்தம் வரும் நிலையை எட்ட, உடனே தனது படைகளை விட்டு தென் கொரியா பக்கமாக துப்பாக்கிச் சூடு நடத்த வைத்தார். பதிலுக்கு தென் கொரியாவும் துப்பாக்கியைத் தூக்க, எல்லையில் பெரும் பதற்றம்.

''தம்பிகளா அந்த அணு குண்டை எடுத்து துடைத்து வைங்கப்பா'' என்று ஓபனாகவே தனது ராணுவத்துக்கு வட கொரிய அதிபர் உத்தரவிட, அமெரிக்கவும் தென் கொரியாவும் குழந்தைசாமி அடுத்து என்ன எல்லாம் செய்யுமோ என்ற டெசன்சனில் உள்ளனர்.

இது போதாதா நம் பங்குச் சந்தை தரகர்களுக்கு. இரு நாடுகளுக்கும் இடையே எந்த நேரமும் பெரிய அளவில் போர் மூழலாம் என கிளப்பிவிட்டு, பங்குச் சந்தைகளை மேலும் அச்சத்தில் மூழ்க வைத்துக் கொண்டுள்ளனர்.

இது டாலர் திருவிளையாடல்!

English summary
The yuan fell for three consecutive days and had repeatedly touched fresh four-year lows since Tuesday, when the People’s Bank of China (PBOC) surprised the market by devaluing the yuan by almost 2 per cent. And the currency traders dumped the dollar Monday on the back of a global equities rout, as fears about China and the global economy hammered sentiment and sent investors fleeing into safer investments.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X