For Daily Alerts
Just In
உடம்புல எங்க தொட்டாலும் வலிக்கிறது!
டாக்டர் கண்ணாயிரத்தை பார்க்க, பாபு அவசரமாக வந்தார்.
பாபு: டாக்டர் என் உடலின் ஒவ்வொரு பகுதியும் வலி எடுக்கிறது. எங்கும் தொடக் கூட முடியவில்லை.
டாக்டர் கண்ணாயிரம்: என்னப்பா சொல்ற.. எங்கயாவது விழுந்தீங்களா.
பாபு: இல்லை டாக்டர்.. ஆன என்னோட கழுத்தில் கை வைத்தாலும், வலிக்கிறது, முட்டியில் கை வைத்தாலும் வலிக்கிறது, வயிற்றில் கை வைத்தாலும் வலிக்கிறது.
டாக்டர்: ஒன்னுமில்ல.. விரல்ல கட்டு போட்டா எல்லாம் சரியாகிடும்.
பாபு: அது எப்படி டாக்டர், விரல்ல கட்டுபோட்டா, உடம்புல உள்ள வலியெல்லாம் நீங்கிடும்.
டாக்டர் (கடுப்பாகி): அடேய் அப்ரசண்டீஸ் பாபு.. உன் விரல் எலும்பு உடைஞ்சிருக்குதுடா.. அதான் எதைத் தொட்டாலும் உனக்கு வலிக்கிறது.
பாபு: !!!
English summary
Doctor, it paining