For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாஸ் நம்ம அடுத்த பிளான் சூரியனுக்கு கூலிங் கிளாஸ் மாட்டுவது.. தெறிக்கும் தெர்மாக்கோல் மீம்ஸ்

அமைச்சர் செலூர் ராஜு, வைகை அணையில் நீராவியாவதைத் தடுக்க தெர்மகோலை மிதக்கவிட்டதை மீம்ஸ் கிரியேட்டர்ஸ், யாண்டி செய்து பல மீம்ஸ்களை உலவவிட்டுள்ளனர்.

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: அமைச்சர் செல்லூர் ராஜு வைகை அணை நீர், ஆவியாகி ணாவ்தைத் தடுக்க அங்கு தெர்மகோலை பரப்பி நீர் ஆவியாவ்தைத் தடுத்தார். அவரின் இந்த செயலை நம் நெட்டீசன்கள் வழக்கம்போல் மீம்ஸ் போட்டு கிண்டல் செய்து வருகிறார்கள். அவற்றில் சில...

அமைச்சர் செல்லூர் ராஜு, வைகை அணையில் உள்ள நீர் ஆவியாகி வீணாவதைத் தடுக்க, மொத்த அணையின் நீர்பரப்பின் மீது தெர்மகோல் பரப்பி, நீர் ஆவியாதைத் தடுக்க முயற்சித்தார். ஆனால், தெர்மோகோல்கள் எல்லாம் போட்ட நிமிடத்தில் கரை ஒதுங்கிவிட்டன. இந்த செய்தி வெளினதிலிருந்து மீம்ஸ்கள் நெட்டில் பரந்து பரவி வருகின்றனர்.

சின்னம்மாவ அந்த தெர்மாகோல்ல ஏத்திவிட்டாங்களே

மரண அலும்பு... சின்னம்மாவையே அந்த தெர்மகோலில் ஏற்றி அனுப்பதுவது போல் ஒரு மீம்ஸ் பட்டையைக் கிளப்பி வருகிறது. சின்னம்மாவையும் இந்த புராஜக்ட்ட்டில் சேர்த்திருக்கும் மீம்ஸ் கிரியேட்டர் அறிவை வியந்துதான் ஆஅ வேண்டும்.

இவிங்க பூரா விஞ்ஞானிங்க...

அமைச்சர் செல்லூர் ராஜுவின் முயற்சிக்கு முன்னரே, ராம்தேவ் உள்ளிட்ட வடக்கத்திய சாமியார்கள் நீர் ஆவியாவதைத் தடுக்க, நீர்நிலைகளை குளிர்விக்கிறோம் என்று பூஜையெல்லாம் செய்து, மரணபங்கத்துக்கு ஆளாகியிருக்கின்றனர். தமிழ்நாட்டுக்கு முன்னோடு, இந்த சாமியார்கள் தான் போல.

கிட்ஸ், அடல்ஸ், லெஜண்ட்ஸ் ...

கிட்ஸ், அடல்ஸ், லெஜண்ட்ஸ் என்ன செய்வார்கள்.... குழந்தைகள் நீர் ஆவியாவதைத் தடுக்க அணையில் பந்துகளை போடுகிறார்கள். அடல்ஸ்...? தெர்மோகோல் போடுவார்கள். ஞானிகள் என்ன செய்வார்கள்...? பூஜை செய்வார்கள் என மரண கலாய் மீம்ஸ்கள் தொடர்கின்றன.

சூரியனுக்கு கூலிங்கிளாஸ்

அடுத்ததாக சூரியனுக்கு கூலிங்கிளாஸ்ஸ போடும் திட்டம்தான் கையில் இருக்கும்போல என கலாய்க்கிறது இந்த மீம்.

English summary
Meme creators satires minister Sellur Raju's act of Thermocol in vaigai dam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X