யார் பெற்ற மகனோ....

அதிமுகவில் இருந்து நேற்றே விலகிவிட்டேன் என்று டிடிவி தினகரன் அளித்த பேட்டி சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கடந்த சில தினங்களாக ஓயாத வேலை. அதிமுகவில் நடக்கும் அதிரடி கலாட்டாங்கள், டிடிவி தினகரனின் பேட்டியை வைத்து மீம்ஸ் போட்டு வைரலாக்கி வருகின்றனர்.

சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வச்சிட்டோம் என்று நாட்டாமை சரத்குமார் மாதிரி நள்ளிரவில் பேசினார் நிதியமைச்சர் ஜெயக்குமார். அவருக்கு நிதியமைச்சர் பதவியே டிடிவி தினகரன் போட்டதுதான் என்று எகிறினார் வெற்றிவேல் எம்எல்ஏ. சரி இவங்க இன்னைக்கும் தூங்க விட மாட்டாங்கப்பா என்று கொட்டாவி விட்டுக்கொண்டே மீம்ஸ் கிரியேட்டர்கள் வேலையை தொடங்கினர்.

சில எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே இருந்தும் எம் எல் ஏக்கள் கூட்டத்தை கூட்டப்போவதாக கூறினார் தினகரன், ஆனால் அவருக்கு அதிகாரமில்லை என்றார் ஜெயக்குமார். அவைத்தலைவர் செங்கோட்டையனும் அதையே சொன்னார்.

எழும்பூர் கோர்ட்க்கு போய் திரும்பிய பின்னர் என்ன நினைத்தாரோ, கட்சிக்காக தியாகம் செய்வது போல பேசினார். நான் நேற்றே விலகிவிட்டேன் என்று பேசினார். அடடடே இது எப்போ என்று கேட்டு பலரும் மீம்ஸ் போட்டுள்ளனர்.

சத்திய சோதனை

லட்ச ஒட்டு வித்தியாசத்துல வெற்றி பெறுவேன்னு சொன்னவருக்கே இந்த நிலைமையா என்னடா இது சத்திய சோதனை என்று கேட்டுள்ளார் ஒரு வலைஞர்.

நீ இன்னும் போகலையா?


அதிமுவில் இருந்து நேற்றே விலகி விட்டேன் என்று கோர்ட் வாசலில் பேட்டி தட்ட... அடேய் நீ இன்னும் போகமா பேட்டி கொடுத்துட்டுதான் இருக்கியா ??
என்று கேட்டுள்ளார் ஒருவர்.

யார் பெற்ற மகனோ

இது செம... கத்தி கதிரேசனை போட்டு யார் பெற்ற மகனோ என்று தினகரனை கேட்டுள்ளனர்.

பாதுகாப்பு இல்லை

ரத்தத்தின் ரத்தங்களே நான் இருக்கக்கூடிய அதிமுக கட்சியில் பாதுகாப்பு இல்லாததால் நான் ஊரை விட்டே போகிறேன் என்று சொல்லாமல் சொல்கிறார் ஒருவர்.

விடிஞ்சிருச்சி...

டிடிவி தினகரன் பேட்டி பற்றி தெரியாமல், தினகரனுக்கு நாஞ்சில் சம்பத் ஆதரவு குரல் கொடுக்க, அண்ணே, விடிஞ்சுருச்சு.. எந்திரிங்க..!! என்று போட்டுள்ளார் ஒரு வலைஞர்.

English summary
TTV Dinakaran Memes trolls in Social media.
Please Wait while comments are loading...