For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதெல்லாம் சும்மா ட்ரெயிலர் தான்மா.. மெய்ன் பிக்சர் இனிமேதான் இருக்கு..!

ரஜினி அரசியலுக்கு வருவதாக தெரிவித்ததை தொடர்ந்து அவருக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் வெடிக்க தொடங்கியுள்ளன.

Google Oneindia Tamil News

சென்னை: ரஜினி அரசியலுக்கு வருவதாக தெரிவித்ததை தொடர்ந்து அவருக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் வெடிக்க தொடங்கியுள்ளன. அதேநேரத்தில் ரஜினிக்கு எதிராக யார் பேசினாலும் போராட்டம் வெடிக்கும என அவரது ரசிகர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனை வைத்து கலாய்த்துள்ளனர் நெட்டிசன்கள். ரஜினிக்காந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்ததும் அறிவித்தார் அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்பினரின் தூக்கம் தொலைந்து விட்டது.

ரஜினி என்ன சொன்னாலும் அவரை தமிழராக ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் அமைப்பினர் ஒருபுறம் கொடும்பாவியை கொளுத்த நாங்க மட்டும் சும்மாவா என ரிவென்ஞ் எடுக்க தொடங்கி விட்டனர் ரஜினி ரசிகர்கள். எதிர் எதிர் போராட்டங்களால் அரசியல் களத்தில் மீண்டும் சூடு பற்றியுள்ளது.

இந்நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் மற்றும் அவரது ரசிகர்களின் கருத்துக்கு நெட்டிசன்கள் ரியாக்ட் செய்துள்ளனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு..

இப்பவே இப்படியா?

இப்பவே எதிர்த்து பேசக்கூடாதுன்னு சொல்றாங்க...பதவிக்கு வந்த இப்போ இருக்கிற கட்சியை காட்டிலும் சர்வாதிகாரியாக செயல்படுவார்களோ? என கேட்கிறார் இந்த வலைஞர்...

அப்போ அது?

அப்ப அரசியலுக்கு வரதுக்கு முன்னாடி வர கூடாது சொல்றதுக்கு பேறு எண்ணங்கனோ...? சர்வாதிகாரம் இல்லையோ..? என கேட்கிறார் இந்த நெட்டிசன்..

காவிரிக்காக போராடுவீங்களா?

தாராளமா வாங்க. வந்து என்ன பண்ணுவீங்கனு சொல்லுங்க காவிரிக்காக போராடுவேன்னு சொல்ல முடியுமா? எனக கேட்கிறார் இந்த வலைஞர்...

வெட்டியா இருக்கு..

அவ்ளோ வெட்டியா ஒரு குரூப் இருக்கு.. என்கிறார் இந்த நெட்டிசன்..

சும்மா ட்ரெயிலர் தான்மா..

அவரு உள்ள வரேன்னு சொன்னதுக்கே சும்மா அங்க அங்க வெடிக்குதே... இதெல்லாம் சும்மா ட்ரெயிலர் தான்மா.. மெய்ன் பிக்சர் இனிமேதான் இருக்கு.. என்கிறார் இந்த வலைஞர்...

English summary
netizesns sharing their view on internet about Rajinis arrival of Politics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X