யாருடா அது கேப்டன் வர்றதுக்குள்ள கப்பலை எடுத்தது..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலா கோஷ்டி எம்எல்ஏக்கள் அமைச்சர்களுடன் போர்க்கப்பலில் பயணம் செய்வதை வைத்து இணையதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன. மேலும் சசிகலா கோஷ்டியும் ஓபிஎஸ் கோஷ்டியும் இணைவது தொடர்பாக ஏராளமான மீம்ஸ்கள் வலம் வரதொடங்கியுள்ளன.

சசிகலா அணி எம்எல்ஏக்கள் அமைச்சர்களுடன் இன்று சென்னை துறைமுகத்திலிருந்த ஐஎன்எஸ் போர்க்கப்பலில் குடும்பத்துடன் பயணம் செய்தனர்.

விவசாயிகள் போராட்டம், மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் என ஏராளமான பிரச்சனைகள் உள்ள நிலையில் இந்த பயணம் தேவையா என கலாய்த்து நெட்டிசன்கள் எராளமான மீம்ஸ்களை வெளியிட்டுள்ளனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...

போருக்கா போறாங்க?

இந்த அமைச்சர்கள் எல்லாம் போருக்கா போராங்க?? அடுத்த 4 வருஷத்துக்கு யாரு கூட சேர்ந்தா ஆட்டைய போடலாம்னு பிளான் பண்ணப் போறாங்க...

அந்த அடி!

எனக்கு எதிரா கப்பல்ல மீட்டிங் போடுறீங்களா... இப்ப பாருங்கடா கப்பல உடைசசி உங்கள கடல்ல முக்கி சாகடிக்கிறேன் என சசிகலா சத்தியம் செய்ததை கலாய்க்கிறது இந்த மீம்

அண்ணன் தம்பிகளாம்!

முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக. அன்பாலே இணைந்து வந்தோம் ஒன்னுக்குள் ஒன்னாக...

கேப்டன் வர்றதுக்குள்ள

யாருடா அது கேப்டன் வர்றதுக்குள்ள கப்பலை எடுத்தது என சசிகலா அணி அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் கப்பல் பயணத்தை கலாய்க்கிறது இந்த மீம்..

நான்தான் நிரந்தர முதல்வர்

இரு அணிகளும் இணைவது பற்றி கப்பலில் ஆலோசனை... எடப்பாடி பதவி பறிபோகலாம் - செய்தி... பொய்யி பொய்யி நான்தான் நிரந்தர முதல்வர்....

கரகாட்டகாரன் பட காமெடி

பழைய இரும்பு சாமான் ஈயம் பித்தாளைக்கு பேரிச்சம் பழம் என கரகாட்டகாரன் பட காமெடியை வைத்து கலாய்க்கிறது இந்த மீம்...

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
Memes on Sasikala team MLAs and ministers travell in INS chennai warship.
Please Wait while comments are loading...