For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாகும்போது கூட கையில் ஆதார் அட்டை வச்சிகிட்டு தான் சாகனும்போல...!

ஆம்புலன்ஸை அழைப்பவர்கள் கட்டாயம் ஆதார் கார்டை காட்ட வேண்டும் என உத்தரப்பிரதேச அரசு கூறியிருப்பதற்கு எதிர்ப்பு வலுத்துள்ளது.

Google Oneindia Tamil News

லக்னோ ஆம்புலன்ஸ்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்கும் வகையில் உத்தரப்பிரதேச அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி உடல்நிலை மோசமாக உள்ளவர்கள் ஆம்புலன்ஸில் ஏறுவதற்கு முன்பு ஆதார் அட்டையை காட்ட வேண்டும் என்பது தான்.

உத்தரப்பிரதேச அரசின் இந்த உத்தரவு விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. அரசின் இந்த உத்தரவுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களிலும் அரசுக்கு எதிரான கருத்துளை மக்கள் முன்வைத்து வருகின்றனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...

வாய வலிக்குது

உங்கள திட்டி எங்களுக்கு தான்டா வாய வலிக்குது... என்கிறார் இந்த நெட்டிசன்..

ஆதாரம் இல்லாம..

சீரியஸா இருக்க சொல்ல ஆதார் கார்ட் தேடுற நேரத்துல அவனே ஆதாரம் இல்லாம போயிருவாண்டா.. என்கிறார் வலைஞர்..

சாகும்போது கூட..

சாகும்போது கூட கையில் ஆதார் அட்டை வச்சிகிட்டு தான் சாகனும்போல.. என கூறுகிறார் இந்த நெட்டிசன்..

ஆதாரை தவிர..

நாட்டில் எல்லாவற்றுக்கும் ஆதாரமாக ஆதார் இருக்கிறது, ஆனால் அந்த ஆதாரை தவிற மற்ற அனைத்தும் ஆதரவற்று கிடக்கிறது! என்கிறார் இந்த நெட்டிசன்...

மனிதர்களுக்கல்ல மாடுகளுக்கு..

லேட்டர் பிரேக்கிங் நியூஸ்: ஆதார் கார்டு அவசியம் என்று வெளியான தகவல் மனிதர்களுக்கல்ல மாடுகளுக்கு;அறிக்கை சரியாக படிக்காத ஆன்டி இந்தியன்ஸ் கிளப்பும் புரளி... என்கிறார் இந்த நெட்டிசன்..

அட்டையை தேடுறதுக்குள்ள..

அட்டையை தேடுறதுக்குள்ள ஆள் மட்டை.. அப்புறம் காட்டுக்கு தான் கொண்டு போகனும், அறிவை கடன் குடுத்து யோசிக்கிறீங்க தப்புடா.. என விரக்தியை வெளிப்படுத்துகிறார் இந்த நெட்டிசன்...

English summary
Netizens Making fun of UP governments new order for Ambulance. UP govt has announced that Aadhar card is mandatory to get in Ambulance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X