For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வளர்மதிக்கு தொப்பி - போட்டோ ஷாப் படத்தை போட்டு வைரலாக்கும் நெட்டிசன்கள்!

அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரனின் சின்னம் தொப்பியை போட்டு வளர்மதி போஸ் கொடுப்பது போன்று போட்டோ ஷாப் செய்யப்பட்ட படம் சமூக வலைத்தளங்களிர் வைரலாகிறது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக கட்சி வேட்பாளராக போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. அது எம்ஜிஆரின் தொப்பி என்று வளர்மதி நேற்று பேட்டி அளித்தார். இன்று அவர் தொப்பி போட்டு பிரச்சாரம் செய்வது போன்ற படம் வைரலானது. இது போட்டோ ஷாப் செய்யப்பட்ட படமாகும்.

தொப்பியுடன் வளர்மதி போஸ் கொடுப்பது போல போட்டோ ஷாப் செய்யப்பட்ட படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. டுவிட்டரில் தொப்பி டிரெண்ட் ஆன நிலையில் அந்த சின்னத்தை அணிந்து வளர்மதி போஸ் கொடுப்பது போன்ற படத்தை போட்டோஷாப் செய்து நெட்டிசன்கள் வைரலாக்கினர்.

வளர்மதியை சும்மாவே ஓட்டும் நெட்டிசன்கள் இன்றைக்கு தொப்பி போட்ட வளர்மதியின் படத்தை வைத்து கிண்டலடித்தனர்.

தொப்பி பிரச்சாரம்

இதை பார்த்த பிறகும் யாராவது தொப்பி சின்னத்திற்கு ஓட்டு போடுவாங்களா? என்று கேட்காமல் கேட்கிறார் இந்த வலைஞர்.

கவ் கேர்ள் வளர்மதி

தொப்பி என்றாலே கவ் பாய்ஸ்தான் நினைவுக்கு வரும். ஆனால் கறுப்பு வெள்ளை சிவப்பு பார்டர் போட்ட புடவை கட்டி சிவப்பு தொப்பி அணிந்து வளர்மதி கவ் கேர்ள் மாதிரி கொடுக்கும் போஸ்

போஸ்... ஆகா...பேஷ்... பேஷ் என்கிறார் இவர். இது போட்டோஷாப் படம் என்று தெரியாமலேயே.

சிரிக்க முடியலையே

இந்தப் படத்தைப் பார்த்த சிரிக்க முடியலையே என்கிறார் ஒரு வலைஞர்.

இங்க பார்றா...

தொப்பி போட்ட வளர்மதியை பாருங்கப்பா என்கிறார் இந்த வலைஞர். எப்படியோ ஒரே ஒரு சிவப்பு தொப்பியை வளர்மதிக்கு போட்டோஷாப் மூலம் போட்டு விட்டு அதை வைரலாக்கி டிடிவி தினகரனுக்கு இலவச விளம்பரம் செய்து விட்டனர் நெட்டிசன்கள். என்னதான் போட்டோஷா படம் என்றாலும் கன கச்சிதமாகவே பொருந்தியுள்ளது வளர்மதிக்கு.

English summary
Netizens are putting more and more memes on Valarmathi's red hat in the social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X