தமிழகத்தில் இன்று

உங்களது ரேட்டிங்:

ஏ-ழை மாண-வர்-கள் கல்-வி உத-வித் தொகை பெற பு-தி-ய சலு-கை
சென்னை:

ஏழை மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான ஆண்டு வருமான வரம்பு ரூ.50 ஆயிரமாகஉயர்த்தப்பட்டு உள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு புதன் கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்திலுள்ள பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினமாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்கான பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு 12ஆயிரம் என்பதை 25 ஆயிரமாக 1.10.1996 அன்று இந்த அரசு உயர்த்தியது.

மேலும், இந்த வருமான வரம்பை ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு உள்ளது போலவே50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

இதன் காரணமாக அரசுக்கு 3.21 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.

இவ்வாறு அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Please Wait while comments are loading...
2016 Tamil Nadu Election

Videos