தமிழகத்தில் இன்று

 
Share this on your social network:
   Facebook Twitter Google+    Comments Mail

--போ-லீஸ் -வ-லை கி-டைக்-கா-த-தால் -வி-ஷம் கு-டித்-த பெண்-

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">திண்டுக்கல்:

பெண் போலீசுக்கு தேர்வு செய்யப்பட்டவர் மறு தேர்வில் தோல்வி அடைந்ததால்மனம் உடைந்து விஷம் குடித்தார்.

இது பற்றி பேலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

கடந்த அக்டோபர் மாதம் நடந்த பெண் போலீஸ் தேர்வில் திண்டுக்கல் - தேனிமாவட்டங்களில் மட்டும் 416 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். அதில் திண்டுக்கல்மாவட்டம் எரியோடு அருகே கொங்கரகுளத்தைச் சேர்ந்த மலர் ( வயுது 24) என்றபெண்ணும் தேர்வு பெற்றார்.

இந்த நிலையில் திண்டுக்கல் - தேனி மாவட்டங்களில் நடந்த பெண் போலீஸ் தேர்வில்முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டதைத் தொடர்ந்து மறு தேர்வு நடத்த உத்தரவுபிறப்பிக்கப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் தேர்வு செய்யப்பட்ட 416 பேருக்கும்கடிதம் அனுப்பப்பட்டு அவர்களுக்கு திண்டுக்கல்லில் மறு தேர்வு நடந்தது.

இதில் கலந்துகொள்ள மலரும் வந்து இருந்தார். ஆனால் இந்த தேர்வில் அவர் தோல்விஅடைந்து விட்டார்.

ஏற்கனவே கிடைத்த வேலை பறிபோய்விட்டதே என்று மலர் மிகவும் மன வருத்தம்அடைந்தார்.வீட்டுக்குச் சென்ற அவர் தற்கொலை செய்ய விஷம் குடித்து விட்டார்.

இதனைக் கண்ட மலரின் தாய் அவரை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில்கொண்டு வந்து சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது பற்றி எரியோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மலர் கூறி.தாவது:

நான் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவள். என் கணவர் முருகன் லாரியில்கிளீனராக இருக்கிறார். எங்களுக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

என் கணவரின் வருமானம் எங்கள் குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை. இதனால்நான் வேலை தேடும் முயற்சியில் ஈடுபட்டடேன்.

போலீஸ் வேலைக்கு விண்ணப்பித்தேன். ஒவ்வொரு டெஸ்ட்டிலும் வெற்றி பெற்றுஇறுதியில் வேலைக்கு தகுதி பெற்றேன். வேலை கிடைத்து விட்டது என்று மகிழ்ச்சியில்இருந்தேன். நமது கஷ்டமெல்லாம் தீர்ந்து விட்டது என்று எண்ணி இருந்தேன்.

இந்த நேரத்தில்தான் மறு தேர்வுக்கு அழைப்பு வந்தது. எப்படியும் இதிலும் வெற்றிபெற்று விடலாம் என்று நினைத்தேன்.

மறு தேர்வில் ஓட்டப்பந்தயம் நடத்தினார்கள். கடந்த முறை 100 மீட்டர் ஓட்டத்தை 13வினாடியில் ஓடினேன். இந்த முறை14 வினாடி ஆகிவிட்டது என்று கூறி என்னை தகுதிநீக்கம் செய்து விட்டனர்.

ஓட்ட தூரம் 100 மீட்டருக்கு அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.சரியாக 100மீட்டர் என்றால் 13 வினாடிகளில் ஓடிவிடுவேன்.

எப்படியோ என் வேலை பறி போனதை. என்னால் தாங்க முடியவில்லை. என் குடும்பவறுமையெல்லாம் தீர்ந்தது என்று நினைத்த எண்ணத்தில் மண் விழுந்தது. எனவேதான்தற்கொலை செய்ய விஷம் குடித்தேன்.

இவ்வாறு அவர் அழுது கொண்டே கூறினார்.

Write a Comment
AIFW autumn winter 2015