For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

வானில் ஒரு "டைட்டானிக்"

பாரீஸ்:

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் அருகே கன்கார்டு விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 109 பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள்அனைவரும் உயிரிழந்தனர்.

கான்கார்டு விமான சரித்திரத்தில் மிகப் பெரிய விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.

வேகமாகச் செல்லும், மூழ்கவே மூழ்காது, சொகுசான அதே நேரத்தில் பாதுகாப்பான பயணம் என்று "டைட்டானிக்" கப்பல் பயணம் பற்றிகூறப்பட்டது.

ஆனால், டைட்டானிக் கப்பல் தனது முதல் பயணத்திலேயே பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது. அதில் பயணம் செய்தஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் கடலில் மூழ்கி இறந்தனர்.

அதே போல்தான் கான்கார்டு விமானத்தைப் பற்றியும் கருத்து சொல்லப்பட்டது. பாதுகாப்பானது, வேகமாகச் செல்லலாம், சொகுசுப் பயணம் என்பதற்குஏற்பட கான்கார்டு விமானம் வடிவமைக்கப்பட்டது.

உலகின் பணக்காரர்கள், தொழிலதிபர்கள் மற்றும் வி.வி.ஐ.பி.க்கள் மட்டுமே பயணம் செய்யக்கூடிய அளவில் இந்த விமானப் பயணம் மிகவும்காஸ்ட்லியானது. அத்தகைய நபர்களும் இந்த கான்கார்டு விமானங்களில் பயணம் செய்யவே விரும்பினர். சாமானியர்கள் இதில் பயணம் செய்வது கடினம்.

மணிக்கு 2,150 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய கான்கார்டு விமானம். அதாவது ஒலியின் வேகத்தை விட இரண்டு மடங்கு வேகம். பாரீஸிலிருந்துநியுயார்க்குக்கு மூன்றரை மணி நேரத்தில் சென்றுவிட முடியும்.

இது தவிர மேலும் பல சிறப்புக்களால் கான்கார்டு விமானப் பயணத்துக்கு மவுசு கூடியது. இப்போது ஏர் பிரான்ஸ் மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் நிறுவனங்கள்மட்டுமே கான்கார்டு விமானங்களை இயக்கி வருகின்றன.

செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளான விமானத்தின் இன்ஜின் திடீரென்று வெடித்துத் தீப்பிடித்ததால், விமானம் கீழே விழுந்து நொறுங்கியது என்று விபத்தைநேரில் பார்த்த சாட்சிகள் கூறுகின்றனர்.

கடந்த ஜூலை 21-ம் தேதிதான் இந்த விமானம் முழுவதுமாக பரிசோதிக்கப்பட்டது. அப்படி இருக்கும்போது எவ்வாறு விபத்துக்குள்ளானது என்றுதெரியவில்லை என்று ஏர் பிரான்ஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறியியலாளர் சிரில் ஸ்பினெட்டா கூறினார்.

ஏர் பிரான்ஸ் கான்கார்டு விமான விபத்தால் அதிகம் பாதிக்கப்படப்போவது இன்சூரன்ஸ் நிறுவனங்கள்தான்.

ரூ.1540 கோடி இன்சூரன்ஸ்:

விமான விபத்தில் இறந்தவர்களுக்கு ஐரோப்பாவில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இன்சூரன்ஸ் தொகையாக மட்டும் சுமார் ரூ.1540 கோடி அளவுக்குகொடுக்கவேண்டியிருக்கும் என்ற கணக்கிடப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான கான்கார்டு விமானம் மட்டும் ரூ.132 கோடிக்கு இன்சூர் செய்யப்பட்டுள்ளது.

விமான விபத்தில் இறந்தவர்களுக்கு இன்சூரன்ஸ் தொகையாக கொடுக்கப்பட உள்ள இரண்டாவது பெரிய தொகை இது. 1998-ம் ஆண்டு கனடாவில்ஸ்விட்சர்லாந்து விமானம் விபத்துக்குள்ளானது. அதில் 229 பயணிகள் இறந்தனர்.

அவர்களுக்கு இன்சூரன்ஸ் தொகையாக ரூ.3300 கோடி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் நடந்த விமான விபத்துக்களில்பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகபட்ட இன்சூரன்ஸ் தொகை இதுதான்.

ஜெர்மனி இரங்கல்:

விமான விபத்தில் இறந்தவர்களுக்கு ஜெர்மனி இரங்கல் தெரிவித்துள்ளது. ஏனெனில் இவ் விபத்தில் இறந்த 109 பேரில் 96 பேர் ஜெர்மனியைச்சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களில் பெரும்பாலோர் நியுயார்க்குக்குச் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டவர்கள் ஆவர். 1996-ம் ஆண்டுக்குப் பிறகு விமான விபத்தில்ஜெர்மனியைச் சேர்ந்த அதிக சுற்றுலாப் பயணிகள் இறந்துள்ளது இந்த விபத்தில்தான்.

1996-ம் ஆண்டு டொமினிகன் குடியரசில் நடந்த விமான விபத்தில் 186 ஜெர்மனி சுற்றுலாப் பயணிகள் இறந்தனர்.

சொகுசுக் கப்பல் பயணத்தில் தடையில்லை:

செவ்வாய்க்கிழமை நடந்த விமான விபத்தில் பலியானவர்களில் பெரும்பாலானவர்கள், நியுயார்க்கில் இருந்து புறப்படும் சொகுசுக் கப்பலில் மத்தியமற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கும், கரீபியன் நாடுகளுக்கும் 16 நாட்கள் சுற்றுலா செல்ல இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தால் சொகுசுக் கப்பல் பயணம் தடைபடாது என்று சுற்றுலா ஏற்பாட்டாளர்களும், கப்பல் நிர்வாகிகளும் கூறியுள்ளனர். இருக்கும்பயணிகளுடன் கப்பல் பயணம் புறப்படும் என்றனர் அவர்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X