5, 10 சதவீத தவறைக் கண்டு கொள்ளாதீர்கள் .. கருணாநிதி

 
Share this on your social network:
   Facebook Twitter Google+    Comments Mail

சென்னை:

ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் செய்யும் ஐந்து சதவீத, பத்து சதவீத தவறுகளைபெரிதுபடுத்தாதீர்கள் என்று பொதுமக்களை முதல்வர் கருணாநிதி கேட்டுக்கொண்டார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 105 கோடி ரூபாய் நலத் திட்டப் பணிகளை முதல்வர்கருணாநிதி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில்,

குடிநீர் வழங்குவதில் திமுக அரசு அக்கறை கொண்டுள்ளது. உழவர் சந்தை மதுரையில்தொடங்கப்பட்டபோது, இவ்வளவு வரவேற்பு இருக்குமா என்று யோசித்தேன்.ஆனால், நெல்லையில் இன்று தமிழகத்தின் 71வது உழவர் சந்தை திறக்கப்பட்டுள்ளதுஎன்பதை பார்க்கும்போது மக்களிடம் இதற்குள்ள வரவேற்பு புரிகிறது.

14.11.1999ல் மதுரையில் துவங்கி இதுவரை 13.11 கோடி கிலோ காய்கறிகள் உழவர்சந்தை மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 85 கோடி ரூபாய்.இதனால் 10 லட்சம் விவசாயிகளும், 4 லட்சம் நுகர்வோர்களும் பயன்பெற்றுள்ளனர்.

வரும்முன் காப்போம் திட்டத்தில் 6 ஆயிரத்து 253 முகாம் நடந்துள்ளது. 63 லட்சம்பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். கால்நடை பாதுகாப்புத் திட்ட முகாம்கள் 2863நடந்துள்ளது. 74 லட்சம் கால்நடைகள் பயனடைந்துள்ளன. 1.29 கோடி ரூபாய்க்குமருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியை மத்திய அரசுவழங்குவது போல, தமிழக அரசு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டப்படி தொகுதிக்கு ரூ.77 லட்சம்ஒதுக்கப்பட்டுள்ளது.

எந்த மாநிலத்திலும் இந்த திட்டம் இல்லை. இதில் அங்கொன்றும், இங்கொன்றும் தவறுஏற்படக் கூடும். 5 சதவீதம் அல்லது 10 சதவீதம் தவறு நடந்திருக்கலாம். 234எம்.எல்.ஏ.க்களும் தவறு செய்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. இவற்றைபெரிதுபடுத்தாமல் பார்த்தால் திமுக அரசின் சாதனைகள் புரியும் என்றார் முதல்வர்.

Write a Comment
AIFW autumn winter 2015