கருணாநிதியுடன் கோபால்-நெடுமாறன் சந்திப்பு: இன்று பெங்களூர் பயணம்

 
Share this on your social network:
   Facebook Twitter Google+    Comments Mail

சென்னை:

காட்டிலிருந்து தோல்வியுடன் திரும்பிய நக்கீரன் கோபால்-நெடுமாறன் ஆகியோர் அடங்கிய தூதுக்குழுவினர்செவ்வாய்க்கிழமை இரவு முதல்வர் கருணாநிதியை அவரது வீட்டில் சந்தித்து வீரப்பனுடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்துவிளக்கினர்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய கோபால், தூதுக்குழுவினர் அனைவரும் நாளை பெங்களூர் செல்கிறோம். அங்கு முதல்வர்கிருஷ்ணாவைச் சந்தித்துப் பேசுவோம் என்றார்.

நெடுமாறன் கூறுகையில், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு என்ற அமைப்பின் அமைப்பாளர் என்ற முறையில் தான்காட்டுக்குள் சென்று பேச்சு நடத்தினோம்.

வீரப்பன் குழுவினருடன 3 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதன் விளைவாக முதலில் கோவிந்தராஜை விடுதலைசெய்வது என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. நடிகர் ராஜ்குமார், நாகேஷ் ஆகிய இருவரை விடுதலை செய்வது பற்றி விரிவாகப்பேசப்பட்டது.

அதன்படி கோவிந்தராஜ் முதலில் விடுவிக்கப்பட்டு எங்களுடன் அனுப்பி வைக்கப்பட்டார். தமிழக முதல்வருக்கு இதுதெரிவிக்கப்பட்டு அவர் கூறியபடி கோவிந்தராஜ் பெங்களூரில் அவருடைய குடும்பத்தினரிடம் பத்திரமாக சேர்க்கப்பட்டார்.

நடிகர் ராஜ்குமாரை விடுவிப்பதற்கான எங்கள் பணி தொடரும். அரசியலுக்கு அப்பாற்பட்டு மனித நேய உணர்வுடன்நாங்கள் மேற்கொண்டுள்ள இந்தப் பணிக்கு சகல தரப்பினரின் ஒத்துழைப்பும் மிக மிக அவசியமாகும்.

கர்னாடகத்தில் வாழும் தமிழர்களின் நலனையும் தமிழ் நாட்டில் வாழம் கன்னடர்களின் நலனையும் மனதில் கொண்டும் இருமாநிலங்களுக்கு இடையே நிலவி வரும் நல்லுறவைப் பேணவும் மேற்கொள்ளப்பட்டுள்ள எங்களது முயற்சிஎல்லோருடைய ஒத்துழைப்புடனும் ஆதரவுடனம் வெற்றி பெறும் என உறுதியாக நம்புகிறோம் என்றார் நெடுமாறன்.

நாங்கள் தான் கோவிந்தராஜூவை அழைத்து வந்தோம் என இவர்கள் கூறுகின்றனர். ஆனால், தனக்கு உடல் நலம்இல்லாததால் வீரப்பனே அனுப்பி வைத்ததாக கோவிந்தராஜூ காலையில் நிருபர்களிடம் கூறியது குறிப்பிடத்தக்கது.மீண்டும் குழப்பம்...!

Write a Comment