பிகாரில் மீண்டும் 5 பேர் படுகொலை

Subscribe to Oneindia Tamil

சிவான் (பீகார்):

சட்டம், ஒழுங்கு என்றால் கிலோ எவ்வளவு என்று கேட்கும் பீகார் மாநிலம் சிவான்மாவட்டத்தில் 5 பேரை, 25 பேர் கொண்ட கும்பல் சுட்டுக் கொன்றது.

கோஷ்டி மோதல் தொடர்பாக இந்தப் படுகொலைச் சம்பவம் நடந்துள்ளதாககூறப்படுகிறது. கொல்லப்பட்டவர்களில் 2 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.வெள்ளிக்கிழமை இரவு மொஜாஹித்பூர் கிராமத்தில் 11 பேர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக இந்த ஐந்து பேரும் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

கொல்லப்பட்ட ஐந்து பேரும் 13 முதல் 90 வயது கொண்டவர்கள். அனைவரும் சம்பவஇடத்திலேயே இறந்தனர். பயங்கர ஆயுதங்களால் அவர்கள் தாக்கப்பட்டதாக நேரில்பார்த்தவர்கள் கூறினர்.

சம்பவம் நடந்த கிராமத்திற்கு ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லல்லு பிரசாத் யாதவ்,சட்டத் துறை அமைச்சர் ஷகீல் அகமது கான் ஆகியோர் விரைந்துள்ளனர்.

யு.என்.ஐ.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...