அமெரிக்காவில் இந்தியப் பெண் சுட்டுக் கொலை

நியூயார்க்:

அமெரிக்காவில் வசித்து வந்த இந்தியப் பெண் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவில்புளோரிடா மாகாணத்தில் லேக்லாண்ட் என்ற இடத்தில் இச் சம்பவம் நடந்தது.

இது பற்றிக் கூறப்படுவதாவது:

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ் படேல், 1984-ம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார்.முதலில் நியூஜெர்சியில் குடும்பத்தினருடன் இருந்த அவர், 5 ஆண்டுகளுக்கு முன்புதான்லேக்லாண்ட் என்ற இடத்துக்குக் குடிபெயர்ந்தார்.

தினேஷ் பட்டேலுக்கு வர்ஷா படேல் என்ற மனைவியும், அர்சிதா (12), குஷ்பு (10), ரோஷினி (8)ஆகிய மகள்களும், சிவம் (2) என்ற மகனும் உள்ளனர்.

1994-ம் ஆண்டு முதல் லேக்லாண்டில் பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோரை தினேஷ் படேல் நடத்திவருகிறார். கடைப் பக்கமே வராத வர்ஷா படேல் 1998-ம் ஆண்டுதான் கடையின் பொறுப்புக்களைகணவருடன் சேர்ந்து கவனிக்கத் தொடங்கினார்.

கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை தினேஷ் கவனித்து வந்தார். பொருட்களுக்கான பணத்தைவாங்கும் பணியை வர்ஷா படேல் கவனித்து வந்தார். வாடிக்கையாளர்களுடன் இருவரும் நல்லமுறையில் நடந்து கொண்டனர். அதனால், அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றிருந்தனர்.

எந்தப் பிரச்சினையும் இல்லாமல் கடையை இருவரும் நடத்திக் கொண்டு சென்றனர். இந் நிலையில்,புதன்கிழமை இரவு கடையை மூடும் சமயம். இரவு 9 மணிக்கு கடையின் பின் பகுதியில் தினேஷ்படேல் ஏதோ பணியில் இருந்தார்.

வர்ஷா படேல், பணப் பெட்டி அருகே உட்கார்ந்து அன்றைய தினம் வசூலான தொகையை கணக்குப்பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கடைக்குப் பொருள் வாங்க வந்த நபர் தன்னிடம்இருந்த துப்பாக்கியால் வர்ஷா படேலைச் சுட்டுவிட்டு ஓடிவிட்டார்.

வர்ஷா படேல் போட்ட கூச்சலைக் கேட்டு தினேஷ் பட்டேல் ஓடிவந்து பார்த்தபோது நெஞ்சில்குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார் வர்ஷா பட்டேல்.

உடனடியாக லேக்லாண்ட் மண்டல மருத்துவ மையத்துக்கு வர்ஷா படேல் கொண்டுசெல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே அவர் இறந்தார்.

இச் சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. கொலையாளியைத் தேடிவருகிறோம் என்று லேக்லாண்ட் போலீஸார் தெரிவித்தனர்.

கொலைக்கான காரணம் தெரியவில்லை. ஆனால், பணத்தைக் கொள்ளையடிக்கும் முயற்சியில்வர்ஷா படேலை அடையாளம் தெரியாத அந்த நபர் துப்பாக்கியால் சுட்டிருக்கலாம் என்றுகருதுவதாக போலீஸார் தெரிவித்தனர்.

6 ஆண்டுகளாக இந்த கடையை நான் நடத்தி வருகிறேன். இதுவரை வாடிக்கையாளர்களுடன் சிறுபிரச்சினை கூட ஏற்பட்டதில்லை. இச் சம்பவத்துக்கு காரணம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை.

என் மனைவி எல்லோருடனும் நன்றாகப் பழகக்கூடியவர். இப்போது நான்கு குழந்தைகளுடன்அடுத்து என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. குழந்தைகள் பேரும் சிறியவர்களாகஉள்ளனர் என்றார் தினேஷ் படேல்.

ஐ.ஏ.என்.எஸ்.

Please Wait while comments are loading...

Videos