ஸ்ரீரங்கம் கோவிலில் மீண்டும் ஒரு பிரச்சனை

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீரங்கம்:

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்து முடிந்த பின் ராஜகோபுரத்தில் தென்கலை நாமம் போடப்பட்டுள்ளது புதிய பிரச்சனையைகிளப்பியுள்ளது

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு இந்த மாதம் 15-ம் தேதி கும்பாபிஷேகம்நடைபெற்றது. அதன் பின் உலகிலேயே உயரந்த 237 அடி உயரமுள்ள ராஜகோபுரத்தில்தென்கலை நாமம் போடப்பட்டது. இது வடகலை குழுவினரை புண்படுத்துவதாகஸ்ரீரங்கம் அகோபில மடத்தின் 45-வது பீடாதிபதியான ஜீயர் சுவாமிகள் கூறியுள்ளார்.

இந்த விஷயத்தில் முதல்வர் கருணாநிதி தலையிட்டு சுமுகமான தீர்வு காணுமாறு அவர்கேட்டுக் கொண்டுளளார்

இது குறித்து ஜீயர் சுவாமிகள் நிருபர்களிடம் கூறுகையில், ராஜகோபுரம் எனக்கு முன்புஇருந்த ஜீயர் சுவாமிகளால் கட்டப்பட்டது. அவர் வடகலை நாமம் போடுபவராகஇருந்தாலும் அவர் எந்த விதமான பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக எந்தவிதமான நாமமும் போடாமல் விட்டுவிட்டார்.

ஆனால் இப்போதுள்ள கோவில் அதிகாரிகள் கும்பாபிஷேக புணரமைப்புப் பணிஎனக் கூறி கும்பாபிஷேகம் முடிந்தவுடன் ராஜகோபுரத்தின் ஆறாவது வாயிலில்தென்கலை நாமத்தை வைத்து அதற்கு நியான் விளக்கும் போட்டுள்ளார்கள். இதுவடகலை நாமம் போடுபவர்களை புண்படுத்தும செயலாகும்.

இதே போல் கோவிலின் தேசிகர் சுவாமி சன்னிதியிலும் தென்கலை நாமம்போடப்பட்டுள்ளது. இந்த கோவில் வடகலை நாமம் போடுபவரால் பராமரக்கப்பட்டுவருகிறது. ஆனால், இங்கு தென்கலை நாமம் போடப்படடுள்ளது.

இந்த விஷயத்தில் முதல்வர் தலையிட்டு எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல்சுமுகமான தீர்வு ஏற்படுத்த முயல வேண்டும் என்றார்.

கும்பாபிஷேகத்திற்கு முன், ஸ்ரீரங்கம் கோவில் கலாச்சார பாதுகாப்புக் குழு செயலாளர்கிருஷ்ணமாச்சாரி என்பவர் மூலஸ்தானத்தில் இருக்கும் ரங்கநாதர் மார்பில் இருந்தவஸ்தாலட்சுமியின் திருவுருவவம் நீக்கப்பட்டு அங்கு முக்கோண வடிவிலான எந்திரம்வைக்கப்பட்டிருக்கிறது என புகார் கூறினார்.

இது குறித்து தமிழக முதல்வருக்கும் தந்தி அனுப்பினார். கும்பாபிஷேகத்திற்கு முன்பேஅரசு இந்த விஷயத்தில் தலையிட்டு மீண்டும் வஸ்தா லட்சுமியின் திருவுருவத்தைபிரதிஷ்டை செய்ய வைத்தது என்பது நினைவு கூறத்தக்கது.

யு.என்.ஐ.

மனத்திற்குப் பிடித்த வரன்கள் உங்கள் தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...