For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பூம்புகாரில் மழை வேண்டி கடலுக்கும்-காவிரிக்கும் திருமணம்

By Staff
Google Oneindia Tamil News

திருவெண்காடு:

பூம்புகாரில் காவிரி ஆற்றுக்கும், கடல் நீருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. நாட்டில் மழை பெய்யவும்,சுபிட்சம் நிலவவும் வேண்டி இந்தத் திருமணம் நடத்தப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டம், பூம்புகாரில் காவிரி கடலோடு கலக்கும் இடத்தில் காவிரி அம்மனுக்கு கோவில்கட்டுவதற்காக மக்கள் சக்தி இயக்கத் தலைவர் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி முயற்சி செய்து நிலம் வாங்கியுள்ளார்.

தற்போது அங்கு காவிரி அம்மனுக்கு கோவில் கட்டப்பட்டு வருகிறது. முதலில், விநாயகர் கோவில் கட்டி அதற்குக்கும்பாபிஷேகமும் நடந்தது. இதையடுத்து சமுத்திர ராஜனுக்கும், காவிரி அம்மனுக்கும் வியாழக்கிழமை காலை10.30 மணி முதல் 12.00 மணிக்குள் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

கடலுக்கும், காவிரிக்கும் திருமணம் செய்து வைத்தால் நாட்டில் எந்த குறையும் நிலவாது. நாட்டில் சுபிட்சம்ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

சோழர்கள் ஆட்சிக் காலத்தில் கரிகால் சோழன் இதுபோல் திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. அதனால்நாடு சுபிட்சமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

"சமுத்திர ராஜன் - காவிரி அம்மன்" திருமணத்திற்காக 2 வெள்ளிக் குடங்களில் கடல் நீரும், காவிரி நீரும்கொண்டுவரப்பட்டன.

கடல் நீர் இருந்த குடத்திற்கு மாப்பிள்ளை போல் பட்டு வேஷ்டிகட்டப்பட்டது. மாலை அணிவிக்கப்பட்டு சந்தனமும்பூசப்பட்டது. காவிரி நீர் இருந்த குடத்திற்கு பட்டுப் புடவை கட்டப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டது.

அதன் பின் யாக பூஜைகள் செய்யப்பட்டன. இதையடுத்து 2 புரோகிதர்கள் கடல் நீர் இருந்த குடத்தையும், காவிரிநீர் இருந்த குடத்தையும் மடிகளில் வைத்துக் கொண்டனர்.

காவிரி நீர் இருந்த குடத்திற்கு தங்கத்தாலி கட்டப்பட்டது. மாலையும் மாற்றப்பட்டது. இரண்டு குடத்தையும்ஊஞ்சலில் வைத்து பாட்டு பாடி, கெளரி கல்யாணமும் நடைபெற்றது. அதன் பின் பால் பழம் சாப்பிடுதல், அம்மிமிதித்து அருந்ததி பார்த்தல் போன்ற அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

பின்னர், நாதஸ்வரங்கள் ஊதப்பட்டு,மேள-தாளத்துடன் குடங்கள் எடுத்துச் செல்லப்பட்டன. காவிரி கடலோடுசங்கமிக்கும் இடத்தில் குடங்களில் இருந்த நீரை கலந்துவிட்டனர். தாலி, வேஷ்டி, புடவை ஆகியவையும் கடலில்விடப்பட்டன.

திருமணத்தை தருமை ஆதீனம் சண்முக தேசிக பரமாச்சாரியர், திருவாடுதுறை இளைய சன்னிதானம் ஆகியோர்நடத்தி வைத்தனர். இந்தத் திருமண விழாவில் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி உள்பட பெருந்திரளானபொதுமக்களும் கலந்து கொண்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X