கூடங்குளம் மின் நிலையத்துக்கு அணு உலை கருவிகள்: தூத்துக்குடி வந்தது ரஷ்ய கப்பல்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி:

கூடங்குளம் அணு மின் நிலையத்துக்குத் தேவையான மிக முக்கியமான கருவிகள் தூத்துக்குடி துறை முகத்துக்கு வந்து சேர்ந்துள்ளன.

ரஷ்யாவின் லெனின்கிராட் நகரில் இருந்து மிக பலத்த பாதுகாப்புடன் இந்தக் கப்பல் தூத்துக்குடி வந்தடைந்தது.

1,000 மெகாவாட் திறன் கொண்ட இரு அணு மின் நிலையங்களை அமைக்கும் பணி கூடங்குளத்தில் மிக வேகமாக நடந்து வருகிறது.இதற்கான முக்கிய அணுசக்திக் கருவிகளை ரஷ்யா வடிவமைத்துள்ளது.

இந்தக் கருவிகள் கூடங்குளத்துக்கு இன்றே எடுத்துச் செல்லப்பட உள்ளன. இதையொட்டி இந்திய அணு ஆராய்ச்சித்துறை உயர்அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பே தூத்துக்குடி வந்துவிட்டனர். மேலும் மத்திய உளவுப் பிரிவினர், மாநில போலீசாரின் உதவியுடன்இந்தக் கருவிகள் பத்திரமாக கூடங்குளம் எடுத்துச் செல்லப்பட உள்ளன.

ரூ. 14,000 கோடி செலவில் இந்த மின் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் 2007ம் ஆண்டு நிறைவடையும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவும் ரஷ்யாவும் கூட்டாக இணைந்து இந்த அணு மின் உலைகளை அமைத்து வருகின்றன.
கடலில் மிதந்த கருவியால் பரபரப்பு:

இந் நிலையில் கூடங்குளம் கடற்பகுதியில் இருந்து 2000 கிலோ எடையுள்ள கருவி ஒன்றை அப் பகுதி மீனவர்கள் கடலில் இருந்து மீட்டுதரைக்குக் கொண்டு வந்துள்ளனர்.

இந்தக் கருவியை மீனவர்கள் கடற்படை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

இந்தக் கருவி கூடங்குளம் மின் நிலையத்துக்காகக் கொண்டு வரப்பட்டதா என்று தெரியவில்லை. 25 அடி நீளமும் 10 அடி அகலமும்கொண்ட அந்தக் கருவி நடுக் கடலில் மிதந்து கொண்டிருந்தது. இதை தங்கள் படகுகளில் கட்டிய மீனவர்கள் தரைக்கு இழுத்து வந்தனர்.

இது உடைந்த ராக்கெட்டின் பகுதியாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

Mail this to a friend  Post your feedback  Print this page 

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...
வேலைவாய்ப்புகள்