For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரஜினி ரசிகர்கள்- பா.ம.க. இடையே மீண்டும் மோதல் முற்றுகிறது

By Staff
Google Oneindia Tamil News

விழுப்புரம் & சேலம்:

தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சியினருக்கும் இடையே மோதல் உருவாகிவருகிறது. விழுப்புரத்தில் ரஜினி ரசிகர் மன்றத்தின் மீது பா.ம.கவினர் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்துஅங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பாபா பட ரிலீசின்போது ரஜினியை மிகக் கடுமையாக விமர்சித்தார் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.தியேட்டர்களில் புகுந்து பா.ம.கவினர் படப் பெட்டிகளைத் தூக்கிச் சென்றர். சில இடங்களில் பிலிம் ரோல்கள்எரிக்கப்பட்டன.

இந் நிலையில் வரும் மக்களவைத் தேர்தலின்போது பா.ம.கவுக்கு பாடம் புகட்டுவோம் என்றரீதியில் ரஜினிரசிகர்கள் ஆங்காங்கே பேச ஆரம்பித்துள்ளனர். பா.ம.கவுக்கு எதிராக வேலை பார்க்கப் போவதாகவும்அறிக்கைகள் விட்டு வருகின்றனர்.

இந் நிலையில் இரு தினங்களுக்கு முன் திருவண்ணாமலையில் நிருபர்களை சந்தித்த ராமதாசிடம் இந்த மிரட்டல்குறித்து கேட்டபோது, ரஜினி ஒரு சேற்றில் விழுந்த பன்றி. அதைப் பற்றிப் பேச நான் தயாராக இல்லை என்று கடும்கோபத்துடன் பதில் தந்துவிட்டுப் போனார்.

இதனால் ரஜினி ரசிகர்கள் கொந்தளித்துப் போயுள்ளனர். சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரசிகர்மன்றத்தினர் கூட்டம் போட்டு ராமதாஸைக் கண்டித்துப் பேசி வருகின்றனர். மேலும் பா.ம.கவினருக்கும் சவால்விட்டு வருகின்றனர். ராமதாசுக்கு எதிராக போஸ்டர்கள், பேனர்களையும் கட்டி வருவதால் பா.ம.கவினர் பதிலடிதரத் தொடங்கியுள்ளனர்.

இந் நிலையில் விழுப்புரம் நகரின் முக்கிய பகுதிகளில் ராமதாஸை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து ரஜினிரசிகர்களால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. பஸ்களிலும் இந்த போஸ்டர்களை ஒட்டினர். இதையடுத்துபா.ம.கவினர் பஸ்களை நிறுத்தி போஸ்டர்களைக் கிழித்து எறிந்தனர்.

அத்தோடு சுவர்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்களையும் கிழித்து எறிந்ததோடு ரஜினிக்கு எதிராக சுவர்களில்எழுதினர். இதையடுத்து பா.ம.கவினருக்கும் ரஜினி மன்றத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பிரச்சனை பெரிதானதையடுத்து விழுப்பும் டி.எஸ்.பி. மனோகர் தலைமையிலான போலீஸ் படையினர் இருதரப்பினரையும் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ரஜினி மன்றத்திற்கு அழைத்து சமாதானம் பேசினர்.

இதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் கலைந்து சென்றனர். போலீசாரும் அங்கிருந்து அகன்றனர்.

இந் நிலையில் திடீரென ரஜினி ரசிகர் மன்றத்தின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் கற்களை வீசித் தாக்கினர்.பிளாஸ்டிக் சேர்களையும் உடைத்துவிட்டுத் தப்பினர். இதில் சிலர் காயமடைந்தனர்.

இதைத் தொடர்ந்து பா.ம.கவினர் மீது விழுப்புரம் நகர ரஜினி மன்றத் தலைவர் இப்ராகிம் போலீசில் புகார் தந்தார்.இதையடுத்து பா.ம.கவைச் சேர்ந்த 25 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இரு தரப்பினரும்மோதலில் ஈடுபடக் கூடும் என்பதால் பஸ் நிலையம் அருகிலும், ரஜினி மன்றத்திலும், முக்கியமான பா.ம.க. கிளைஅலுவலகங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே வரும் 8ம் தேதி ரஜினி மன்றத் தலைவர் சத்யநாராயணா விழுப்புரம் வரவுள்ளார்.

இதே போல நேற்று சேலத்திலும் ரஜினி ரசிகர்கள் கூடி பா.ம.கவுக்கு எதிராக தேர்தல் வேலைகள் செய்வது குறித்துஆலோசனை நடத்தினர். அரசியலை டென்டர் விட்டு பிழைப்பாக நடத்தி வரும் ராமதாசுக்கு பாடம் புகட்டுவோம்என சேலம் ரசிகர் மன்றத்தின் சார்பில் காட்டமான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

திருச்சியில் ரஜினி ரசிகர்கள் கூடி விவாதித்து, போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆனால், தகவல் அறிந்தசத்யநாராயணா அவர்களை தொலைபேசியில் அழைத்துப் பேசி சமாதானப்படுத்தியதாகத் தெரிகிறது. மேலும்வரும் 15ம் தேதி திருச்சிக்கு வந்து இந்த விவகாரம் தொடர்பாக பேசுவதாகவும் அவர்களிடம் சத்யநாராயணாதெரிவித்துள்ளார்.

ராமதாசுக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் போராட்டத்தில் குதிக்க முயலும் இந்த நேரத்தில் ஊர், ஊராகப் போய்அவர்களை சத்யநாராயணா சந்திப்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

அதிமுக தூண்டுதல்: பா.ம.க

இந் நிலையில் இன்று சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாசின் மகன் டாக்டர் அன்புமணி,

பா.ம.கவுக்கு எதிராக சிலர் (ரஜினி ரசிகர்கள்) சிறுபிள்ளைத்தனமாக அறிக்கை வெளியிடுகிறார்கள். அவர்களின்பின்னால் ரஜினி மன்றம் இல்லை. அதிமுகவினர் தான் உள்ளனர்.

விவகாரத்தைப் பேசித் தீர்க்க ரஜினியை சந்தித்துப் பேசும் திட்டம் ஏதும் எங்களிடம் இல்லை. இப்போது ரஜினிதமிழ்நாட்டில் இல்லை. ராமதாசுக்கும் ரஜினிக்கும் தனிப்பட்ட விரோதமும் இல்லை. சினிமாவில் புகைப் பிடித்தல்போன்ற தீய காட்சிகள் மூலம் இளைஞர்களை கெடுக்காமல் நல்வழிப்படுத்தும் வகையில் காட்சிகள் அமையவேண்டும் என்பது மட்டுமே ராமதாசின் கோரிக்கை.

தென் கிழக்கு ஆசிய நாடுகளிலேயே தமிழகத்தில் தான் சிறுவர்கள் அதிகபட்சமாக புகை பிடிக்கிறார்கள் எனகிறதுஆய்வு. ரஜினியையும் ஷாருக் கானையும் பார்த்து புகை பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் எண்ணிக்கைமிக அதிகம் என வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன் கூறியிருக்கிறது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X