இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பா மரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பழம்பெரும் திரைப்பட, மெல்லிசை இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பா மாரடைப்பால் காலமானார். அவருக்குவயது 81.

தஞ்சாவூர் ராதாகிருஷ்ண பிள்ளை என்ற இயற்பெயர் கொண்ட டி.ஆர்.பாப்பா, 1923ம் ஆண்டு பிறந்தவர். தனதுதந்தை ராதாகிருஷ்ண பிள்ளை மற்றும் கும்பகோணம் வடிவேல் பிள்ளை ஆகியோரிடம் இசை கற்ற பாப்பா1965ம் ஆண்டு திரைப்படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கினார். சுமார் 60க்கும் மேற்பட்ட படங்களுக்கு அவர்இசையமைத்துள்ளார்.

சிந்துபைரவி ராகத்தில் அவர் இசையமைத்த சின்னஞ்சிறு பெண் போலே, சித்தாடை உடை உடுத்தி என்ற பாடல்தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் இன்றும் கூட ஒலித்துக் கொண்டுள்ளது.

இவரது இரவும் பகலும் படம் மூலம்தான் தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட் என்று புகழப்பட்ட ஜெய்சங்கர்திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். டி.ஆர்.பாப்பாவும், சீர்காழி கோவிந்தராஜனும் சேர்ந்து புகழ் பெற்ற பலமெல்லிசைப் பாடல்களை கொடுத்துள்ளனர்.

சீர்காழி கோவிந்தராஜனின் குரலில், டி.ஆர்.பாப்பாவின் இசையில் உருவான அபிராமி அந்தாதி பாடல் கேசட் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. திமுக தலைவர் கருணாநிதியின் வசனத்தில் உருவான பல படங்களுக்குஇசையமைத்துள்ளார் பாப்பா. Mail this to a friend  Post your feedback  Print this page 

Please Wait while comments are loading...