ராணி மேரி கல்லூரியை கடல் நீர் சூழ்ந்தது!

 
Share this on your social network:
   Facebook Twitter Google+ Comments Mail

சென்னை:

சென்னையில் இன்று காலை ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக சென்னை மெரீனா கடற்கரைப் பகுதியில்கடல் நீர் சூழ்ந்துள்ளது. 20 பேர் வரை அதிர்ச்சி காரணமாக மயங்கி விழுந்தனர். அதிர்ச்சியில் சிலர் இறந்திருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

இன்று காலை சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்துகடல் கொந்தளிப்பும் ஏற்பட்டது.

நில நடுக்க அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீள்வதற்குள் கடல் கொந்தளிப்பு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.குறிப்பாக மெரீனா கடற்கரை பகுதி முழுவதும் கடல் நீர் புகுந்துள்ளது. அதிலும் ராணி மேரிக் கல்லூரி,விவேகானந்தர் நினைவிடம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் நீர் சூழ்ந்துள்ளது.

மெரீனா கடற்கரை மணல் பரப்பையே பார்க்க முடியாத அளவுக்கு கடல் நீர் புகுந்துள்ளது. அரை மணிக்குஒருமுறை கடல் நீர் ராட்சத அலைகளுடன் ஊருக்குள் புகுந்து வருவதால் திருவல்லிக்கேணி, திருவான்மியூர்,சாந்தோம், பெசன்ட் நகர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.

கடலோரக் காவல்படையினர் அப்பகுதிகளில் மீட்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். கடலுக்குள் யாராவதுஇழுத்துச் செல்லப்பட்டால் அவர்களைக் காப்பாற்றுவதற்காக ஹெலிகாப்டர்கள் முழு வீச்சில் இயக்கப்படுகின்றன.

கடலோரத்தில் உள்ள மீனவர் குப்பங்களில் வசித்து வரும் ஆயிரக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேறிவருகின்றனர். அவர்களில் பலர் கடல் நீர் உள்ளே புகுந்த அதிர்ச்சியில் மயக்கமடைந்தனர், சிலர் இறந்திருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

மெரீனா கடற்கரைப் பகுதியை ஒட்டிய பகுதிகள் அனைத்தும் பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது. Mail this to a friend  Post your feedback  Print this page 

Please Wait while comments are loading...
Your Fashion Voice

Videos

Advertisement
Content will resume after advertisement