ரகுவிடம் தொடரும் விசாரணை

 
Share this on your social network:
   Facebook Twitter Google+    Comments Mail

காஞ்சிபுரம்:

Raghuசங்கரராமன் கொலை வழக்கில் விஜயேந்திரரின் தம்பி ரகுவிடம் போலீஸார் இன்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக இன்று விஜயேந்திரரிடம் விசாரணை நடைபெற்றது. முன்னதாக அவரது தம்பி ரகு இன்று காலைஅவரது சென்னை வீட்டிலிருந்து விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரும் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.

மடத்தின் வழக்கறிஞர் சண்முகம் நிருபர்களிடம் பேசுகையில், போலீஸார் ரகுவை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். அவர்குடல்வால் அறுவை சிகிச்சைக்குப்பின் இப்போதுதான் குணமடைந்து வருவதாகக் கூறியும் போலீஸார் கேட்கவில்லை.

ரகு கைது செய்யப்பட்டாரா என்பது தெரியவில்லை. இன்றிரவு அவர் மடத்திற்குத் திரும்புவார் என்று நம்புவதாகத் தெரிவித்தார். Mail this to a friend  Post your feedback  Print this page 

Write a Comment
AIFW autumn winter 2015