திருவண்ணாமலை கோயில்: கைப்பற்றும் முயற்சியை கைவிட்டது மத்திய அரசு

 
Share this on your social network:
   Facebook Twitter Google+ Comments Mail

டெல்லி:

திருவண்ணாமலை கோயிலை தொல்லியல் துறை ஏற்கும் அறிவிப்பை மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் திரும்பப்பெறுவதாக அறிவித்தது.

தமிழத்தில் பிரசித்தி பெற்ற சைவத் தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை கோயிலை மத்திய தொல்லியல் துறை ஏற்று நடத்தும்என்றும், தேசிய சின்னங்களுள் ஒன்றாக அக்கோயில் அறிவிக்கப்பட்டு, மேம்படுத்தப்படும் என்றும் கடந்த பாஜக ஆட்சியில்அறிவிக்கப்பட்டது.

இதற்கு மாநில அரசும், பாஜக தவிர்த்த அனைத்துக் கட்சியினரும், கோயில் நிர்வாகிகளும், பொது மக்கள் கடும் எதிர்ப்புதெரிவித்தனர். கோவிலை மத்திய அரசு கையப்படுத்துவதை எதிர்த்து திருவண்ணாமலையில் கடையடைப்பு போராட்டங்கள்நடந்தன.

அப்போதைய மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக, மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

இந் நிலையில் திருவண்ணாமலை கோயிலை தொல்லியல் துறை ஏற்று நடத்தும் அறிவிப்பை வாபஸ் பெறுவதாக உச்சநீதிமன்றத்தில் இன்று மத்திய அரசு தெரிவித்தது. நீதிபதி சபர்வால் தலைமையிலான பெஞ்ச் முன்பு மத்திய அரசின் வழக்கறிஞர்இதனைத் தெரிவித்தார்.

இதனை ஏற்ற நீதிபதிகள், திருவண்ணாமலை கோயிலை மேம்படுத்தும் திட்டத்தை தொல்லியல் துறை இன்னும் 4வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். Mail this to a friend  Post your feedback  Print this page 

Please Wait while comments are loading...
Your Fashion Voice

Videos

Advertisement
Content will resume after advertisement