For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜிவுக்கும் சுனாமிக்கும் என்ன சம்பந்தம்?: நாயுடு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவின் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடத்தப்படும் விழாவுக்கான விளம்பரங்களில் சோனியா காந்திபடத்தையும், கருணாநிதி படத்தையும் போட்டுள்ளார்கள். இது ஏற்கத்தக்கதல்ல என பா.ஜ.க. மாஜி தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.

சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர்,

சுனாமி நிவாரண கடனுதவியை வங்கிகள் மூலம் மத்திய அரசே பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம்கூறியுள்ளார். இந்தத் திட்டத்துக்கு ராஜிவ் காந்தி நிவாரணத் திட்டம் என்று பெயர் சூட்டியுள்ளார்கள்.

ராஜிவ் பெயரைப் பயன்படுத்தி பேரழிவில் இருந்தும் கூட அரசியல் ஆதாயம் தேட காங்கிரஸ் முயல்கிறது. சுனாமிக்கும் ராஜிவ் காந்திக்கும்என்ன சம்பந்தம்?.

நிதியுதவியை மத்திய அரசே நேரடியாக வழங்கும் என சிதம்பரம் கூறியிருக்கிறார். இதன் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலஅரசை புறக்கணிக்க முயற்சி நடக்கிறது. இந்த விஷயத்தில் சிதம்பரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதாவை நாங்கள்ஆதரிக்கிறோம்.

தேசிய நெடுஞ்சாலைத்துறை விழா விளம்பரங்களில் சோனியா, கருணாநிதி படத்தைப் போடுகிறார்கள். ஆனால், பிரதமர் மன்மோகன் சிங்படத்தைக் காணோம். இது என்ன முறை?.

கோவாவில் பாஜக அரசைக் கவிழ்க்க ஆளுநரை காங்கிரஸ் பயன்படுத்துகிறது. பிகாரில் நான் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாகத்தரையிறங்கியபோது பெட்ரோல் குண்டு போட்டு எரித்துவிட்டார்கள்.

இந்தச் சம்பவம் நடந்தவுடன் நான் ஒரு பாஜக தொண்டரின் மோட்டார் சைக்கிளில் ஏறித் தப்பினேன். நான் 13 கி.மீ. தூரம் மோட்டார்சைக்கிளில் பயணம் செய்து நெடுஞ்சாலையை அடைந்தபோது அங்கு போலீசார் நின்றிருந்தனர்.

உங்களைத் தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றனர். என்னையா அல்லது எனது பிணத்தை எதிர்பார்த்து காத்திருந்தீர்களா என்றுசத்தம் போட்டுவிட்டுப் போனேன்.

சம்பவம் நடந்த 14 மணி நேரம் கழித்துக் கூட அந்த இடத்துக்கு போலீஸ் போகவே இல்லை என்று கேள்விப்பட்டேன். என்ன ஆட்சிநடக்கிறது பிகாரில்?. கடவுள் புண்ணியத்தில் தான் நான் அன்று உயிர் தப்பினேன் என்றார் நாயுடு.

பேட்டியின்போது இல.கணேசன், எச்.ராஜா, திருநாவுக்கரசர், குமாரவேலு ஆகிய பா.ஜ.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X